தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்க, அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
‘ஒக மனசு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த நிஹாரிகா கொனிடேலா இதில் நாயகியாக நடித்து வருகிறார்.
முக்கிய வேடத்தில் ரமேஷ் திலக் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.
விஜய்சேதுபதி தீவிரவாத கும்பல் தலைவனாகவும், கௌதம் கார்த்திக் கல்லூரி மாணவனாகவும் நடிக்கிறார்கள்.
கடந்த ஒருமாதம் காலமாகவே இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது தலைப்பிட்டு மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என இப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளனர்.
படத்தையும் ஒரு நல்ல நாளா பார்த்து ரிலீஸ் செய்யுங்க…
Vijay Sethupathi and Gautam Karthik movie titled Oru Nalla Naal Paathu Solren