தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீப காலமாக ரயில் விபத்துக்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நடந்த இந்த கோர விபத்து பல உயிர்களை பலி வாங்கி உள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.
இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் மீட்புப் பணியாளர்க்குத் தலைதாழ்ந்த வணக்கம் இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன் கண்ணீர் கன்னம் தாண்டுகிறது” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
orissa train accident vairamuthu express condolence