தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்னும் ஓரிரு தினங்களில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.
செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டாலே நிறைய பண்டிகைகள் வரும். எனவே அதனை முன்னிட்டு நிறைய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி விட்டன.
இதில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி சசிகுமாரின் கிடாரி மற்றும் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குற்றமே தண்டனை படங்கள் வெளியாகவுள்ளன.
இதனையடுத்து யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள விக்ரமின் இருமுகன் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.
மற்ற படங்களின் வெளியீட்டு தேதிகள் இதுவரை வெளியாகவில்லை என்பதால் படங்களின் பெயர்களை கொடுத்துள்ளோம்….
- தனுஷ் நடித்துள்ள தொடரி
- விக்ரம் பிரபு நடித்துள்ள வீரசிவாஜி
- அருண்விஜய் நடித்துள்ள வா டீல்
- பிரபு நடித்துள்ள மீன் குழம்பும் மண் பானையும்
- விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை
- த்ரிஷா நடித்துள்ள நாயகி
- சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா
இவையில்லாமல் அச்சமின்றி உள்ளிட்ட மற்ற படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.