அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் நடிகர் சூர்யா.
சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிப்ரவரி 7-ம் தேதி தெரிவித்திருந்தார் சூர்யா.
அவர் உடல் நலம் பெற பலர் பதிவிட்டு வந்தனர்.
குணமடைந்து மீண்டும் திரையில் தோன்ற மானாமதுரை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மானாமதுரையில் அமைந்துள்ள ஶ்ரீ வழி விடுமுருகன் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை செய்தனர் சூர்யா ரசிகர்கள்.
சில தினங்களில் பிப்ரவரி 11-ம் தேதி, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி தெரிவித்தார்.
இன்னும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது, என உருக்கமாக தெரிவித்து இருந்தார் கார்த்தி.
இந்த நிலையில் சூர்யாவின் 2டி நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகர் அவரது ட்வீட்டில்… “அன்பான ரசிகர்களே… சூர்யா அண்ணாவின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என வந்துள்ளது.
உங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
Official update on Suriya’s health