‘AK 62’ அதிகார பூர்வ அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

‘AK 62’ அதிகார பூர்வ அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தமிழக தலைவர் தமிழ் குமரன் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் தந்தையை இழந்த அஜித்தை நேரில் சந்தித்து

ஆறுதல் கூறினர்.

பின்னர் சென்னையில் உள்ள அஜித்குமார் இல்லம் முன்பு தமிழ் குமரனிடம் செய்தியாளர்கள் ஏகே 62 குறித்து கேட்டனர்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) படம் பற்றிய நல்ல செய்தி வரும் என்றும், மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அவர் வலுவான குறிப்பைக் கொடுத்தார்.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அருள்நிதி மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Official update on Ajith Kumar’s ‘AK 62’ is here

விஜய்யின் ‘லியோ’ பட சென்னை ஷெட்யூல் சூட்டிங் அப்டேட்

விஜய்யின் ‘லியோ’ பட சென்னை ஷெட்யூல் சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை கடந்த வாரம் முடித்த பிறகு, ‘லியோ’ படக்குழு ஒரு சிறிய இடைவெளியில் உள்ளது.

இந்நிலையில், அடுத்த ஷெட்யூல் நாளை மார்ச் 29-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது படக்குழு.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் இதற்கான செட் போடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை ஷெட்யூலை முடிந்தவுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஹைதராபாத் செல்ல உள்ளது.

Vijay’s ‘Leo’ Chennai schedule to start on March 29

மாவீரன் மற்றும் முருகதாஸ் படம் குறித்து மனம் திறந்த சிவகார்த்திகேயன்

மாவீரன் மற்றும் முருகதாஸ் படம் குறித்து மனம் திறந்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆகஸ்ட் 16 1947 படத்தை ஏ ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், மாவீரன் படத்திற்கான தனது பகுதிகளை முடித்துவிட்டதாகவும், படம் முழுமையாக முடிவடைவதற்கு இன்னும் 2-3 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது என்றும் கூறினார்.

மேலும், மாவீரன் படமாக்க கடினமான படங்களில் ஒன்று என்றும் அவர் கூறினார்.

மேலும், ஒரு முக்கியமான ஒரு நிகழ்வு வர உள்ளது.

அது விரைவில் நடக்கும் என முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan opens up about Maveeran and Murugadoss film

நடிகராக களம் இறங்கும் லோகேஷ் கனகராஜ். இவரின் படத்திலா ?

நடிகராக களம் இறங்கும் லோகேஷ் கனகராஜ். இவரின் படத்திலா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கோகுல் இயக்கும் புதிய படமான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க லோகேஷ் ஒப்புக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் பாலாஜிக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதால், லோகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாக தெரிகிறது.

இப்படத்தில் லோகேஷ் டிவி ரியாலிட்டி ஷோ நடுவராக நடிக்கிறார் என்றும் அவரது காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் மற்றொரு முன்னணி ஹீரோவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj’s character in 1st movie as actor revealed

விஜய் சேதுபதியின் ஹிட் பட இயக்குனர் உடன் கை கோர்க்கும் கார்த்தி

விஜய் சேதுபதியின் ஹிட் பட இயக்குனர் உடன் கை கோர்க்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் அனு இம்மானுவேல் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் கார்த்தியின் தீபாவளி வெளியீடாக தயாராகி வருகிறது.

முன்னதாக இன்று கார்த்தியின் 26வது படத்தை தயாரிப்பாளர் பூஜையுடன் துவக்கி வைத்தார். ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில். ‘சூது கவ்வும்’ மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ புகழ் இயக்குனர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. பாலிவுட் நடிகை காயத்ரி பரத்வாஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

sethupathi

Karthi’s next film announcement is here

கமலை கன்ஃபார்ம் செய்த PS2.. அப்போ ரஜினி இல்லையா.? ரசிகர்கள் டென்ஷன்!

கமலை கன்ஃபார்ம் செய்த PS2.. அப்போ ரஜினி இல்லையா.? ரசிகர்கள் டென்ஷன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு 2022ல் வெளியானது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியள்ள இந்த படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி சரத்குமார் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி பார்த்திபன் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் & டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ பட பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

கடந்தாண்டு ‘பொன்னியின் செல்வன் 1’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

எனவே PS2 படத்தின் இசை விழாவிலும் ரஜினி கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது கமல் போஸ்டரை மற்றும் படக்குழு வெளியிட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய்லர்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே அவர் விழாவுக்கு வருவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

பி எஸ் 1 இசை விழாவில் நடிகர் ரஜினியின் பேச்சும் நடிகர் ஜெயராமின் காமெடி கலந்த மிமிக்ரியும் பெரிய அளவில் ரீச் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal to unveil the music and trailer of PS2

More Articles
Follows