அஜீத் குமாரின் ‘ஏகே 62’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இங்கே

அஜீத் குமாரின் ‘ஏகே 62’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படமும் தயாராகி வருகிறது, மேலும் ஒரு ரெட் ஹாட் அப்டேட்டும் இருக்கிறது .

விஜய்யின் ‘தெறி’ மற்றும் ‘சர்தார்’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வில்லியம்ஸ் மற்றும் சிவன் ஆகியோர் இதற்கு முன்பு விஜய் சேதுபதி-நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்காக ஒத்துழைத்துள்ளனர்.

‘ஏகே 62’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் கூட்டணி.; மல்யுத்த வீரர் மோகன்லால் உடன் கைகோர்க்கும் கமல்

மீண்டும் கூட்டணி.; மல்யுத்த வீரர் மோகன்லால் உடன் கைகோர்க்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்குகிறார்.

‘ஆமென்’ படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுத மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.

ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும்.

இந்த கதையில் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறாராம்.

இந்த நிலையில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஏற்கனவே ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

சமூக விழிப்புணர்வு கொண்ட அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் ஃபேமிலி லைப்.; இப்போ டாக்டராகிய நடிகை பாவனா.!

திருமணத்திற்கு பின் ஃபேமிலி லைப்.; இப்போ டாக்டராகிய நடிகை பாவனா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகும் திறமையும் நிறைந்த நடிகை பாவனா.

மலையாள நடிகையான இவர் தமிழில் நடிகர் மாதவன், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். குடும்ப வாழ்க்கையில் மூழ்கி இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மலையாளத்தில பிரபலமான இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் ‘ஹன்ட்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் பாவனா.

இதில் இவர் டாக்டராக வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

நயன்தாராவுடன் ஒப்பிடுவது குறித்து முதல்முறையாக மனம் திறந்த த்ரிஷா

நயன்தாராவுடன் ஒப்பிடுவது குறித்து முதல்முறையாக மனம் திறந்த த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க முதலில் த்ரிஷா தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் சில காரணங்களால் அந்த பாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

நயன்தாராவுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “என்னை நடிகை நயன்தாராவுடன் ஒப்பிடும் நபர்களை சமூக வலைதளங்களில் வரவேற்கிறேன்.

நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினோம்.

இருவரும் ஒரே மாதிரியான நடிகர்களுடன் நடித்துள்ளோம். அது முக்கியமானது என்று நினைக்கிறேன். எங்கள் இருவரையும் ஒப்பிடுவதற்கான காரணம்.” என்றார் நடிகை த்ரிஷா.

கோலிவுட்டில் பெண்கள் வாரம்.; திரிஷா முதல் சரளா சன்னி ஐஸ்வர்யா சரண்யா வரை

கோலிவுட்டில் பெண்கள் வாரம்.; திரிஷா முதல் சரளா சன்னி ஐஸ்வர்யா சரண்யா வரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 30.. இந்த ஆண்டு இறுதி வெள்ளிக்கிழமை.. இன்று மட்டும் 8க்கும் மேற்பட்ட படங்கள் கோலிவுட்டில் வெளியாகி உள்ளன.

ஓரிரு சின்ன படங்கள் வெளியானாலும் பெரும்பாலும் நாயகிகள் நடித்துள்ள படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதன்படி சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்த ராங்கி படம்…

கிங்ஸ்ன்லி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா…

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்த செம்பி…

ஆதிராஜன் இயக்கத்தில் சரண்யா முதன்மை வேடத்தில் நடித்த அருவா சண்ட…

யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் முதன்மை வேடத்தில் நடித்த ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் பெண் நாயகிகளை முதன்மைப்படுத்தியே வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Women’s Week in Kollywood.; From Trisha to Sarala Sunny Aishwarya Saranya

விமான நிலையத்தில் சிக்கிய சித்தார்த் குடும்பம்.; அதிகாரிகள் மறுப்பு.. இந்து மக்கள் கட்சி புகார்

விமான நிலையத்தில் சிக்கிய சித்தார்த் குடும்பம்.; அதிகாரிகள் மறுப்பு.. இந்து மக்கள் கட்சி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

“மதுரை விமான நிலையத்தில் (காலியாக இருந்த) சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம்.

என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர்.

மேலும் நாங்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர்.

இதற்கு நாங்கள் எங்களது எதிர்ப்பை பதிவு செய்தபோது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் கூறினர் என பதிவிட்டிருந்தார் சித்தார்த்.

ஆனால்… சித்தார்த்தின் குற்றச்சாட்டை மதுரை விமான பாதுகாப்பு படை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

“விமான நிலையத்தில் சித்தார்த், அவரது குடும்பத்தினரை தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை பெண் வீரர் தான் சோதனையிட்டுள்ளார். சித்தார்த் குடும்பத்தினர் உடமைகளை சோதனையிட ஒத்துழைப்பு அளிக்காதததால் சோதனை 10 நிமிடம் நீடித்தது என விமான நிலைய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்… நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரில்.. ”மொழி பிரச்னையைத் தூண்டும் விதமாக சித்தார்த் செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல் சித்தார்த்தையும் அவரின் குடும்பத்தினரையும் 2 ஆண்டுகளுக்கு விமானப்பயணத்தை தடைவிதிக்க வேண்டும் என்று பாஜக ஓபிசி பிரிவு செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணைய அமைச்சர் வி.கே.சிங்கிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

More Articles
Follows