சமந்தாவின் ‛தி பேமிலி மேன் 2′ வெப் சீரிஸ் தொடருக்கு சீமான் எச்சரிக்கை

சமந்தாவின் ‛தி பேமிலி மேன் 2′ வெப் சீரிஸ் தொடருக்கு சீமான் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன் 2′ வெப் சீரிஸ் ஜூன் 4 ஆம் தேதி முதல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த வெப் தொடரின் ட்ரைலர் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் ‛தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

விடுதலைப்புலிகளைத் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஹிந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல.

உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் பயங்கரவாதிகள் எனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

NTK leader Seeman against The family man 2 web series

6 பேருக்கு கொரோனா..; ஆனாலும் சென்னையில் ஊரடங்கு தடையை மீறி ‘பிக்பாஸ்’ சூட்டிங்.!

6 பேருக்கு கொரோனா..; ஆனாலும் சென்னையில் ஊரடங்கு தடையை மீறி ‘பிக்பாஸ்’ சூட்டிங்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayalam bigg bossசென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தடை விதித்த பிறகும், தொடர்ந்து சூட்டிங் நடந்து வந்ததுள்ளது.

(தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும், படப்பிடிப்பில் ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவித்து இருந்தார்.)

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு நடந்து வந்தது.

இந்த சூட்டிங்கில் 150 பேர் கலந்து கொண்டு இடைவிடாது சூட்டிங் நடத்தி வந்ததுள்ளனர்.

அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனாலும் சூட்டிங் நிறுத்தப்படவில்லை.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கிருந்த நடிகர், நடிகைகளை வெளியேற்றினர். ஷூட்டிங் நடத்திய நிறுவனத்துக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் அந்த செட்டுக்கு சீல் வைத்து பூட்டு போட்டனர்.

Bigg Boss Malayalam 3 shoot suspended, set in Chennai sealed for violating lockdown rules

12ஆம் வகுப்புக்கு வாட்ஸ் அப்பில் அலகு தேர்வு உத்தரவை பிறப்பிக்கவில்லை.. – தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்

12ஆம் வகுப்புக்கு வாட்ஸ் அப்பில் அலகு தேர்வு உத்தரவை பிறப்பிக்கவில்லை.. – தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

12th exam whatsapp tnமே 3 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு தள்ளிப் போகுமே தவிர ரத்து செய்யப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரித் தேர்வான அலகுத் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டனர்.

ஒரே வகுப்பு மாணவ-மாணவியருக்கு என தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப் ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் விடைகளை தனித் தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும்.

அந்த விடைத்தாளில் மாணவர் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், ஆடியோ, ஸ்டிக்கர்ஸ், மீம்ஸ், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிடக் கூடாது.

மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என்று எவ்வித உத்தரவையும் அதிகாரப்பூர்வமாக அரசுத் தேர்வுகள் துறை பிறப்பிக்கவில்லை.” என தேர்வுத் துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

TN 12th exam in whatsapp is not true says education ministry

சிவகார்த்திகேயன் தந்தையை கொன்றவர் இப்போ பாபநாசம் MLA.; எச் ராஜா பரபரப்பு பேச்சு

சிவகார்த்திகேயன் தந்தையை கொன்றவர் இப்போ பாபநாசம் MLA.; எச் ராஜா பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan with his fatherசர்ச்சையான கருத்துக்களை பேசி படு பாப்புலர் ஆனவர் தமிழக பாஜக முக்கியமான தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா.

இவரின் சமீபத்திய பேச்சும் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இவர் தனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்…

“எனக்கு சொல்வதற்கு வருத்தமாக உள்ளது.

ஜெயிலர் ஜெயபிரகாசத்தை கொன்ற அல்லுமா இயக்கத்தை சேர்ந்த நபர் தான் இன்று பாபநாசம் தொகுதியின் எம்.எல்.வாக உள்ளார்.

ஜெயபிரகாசத்தின் மகன் தான் இன்று பிரபல நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் என கூறியுள்ளார்.

இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் G. தாஸ். காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார்.

அவரது மரணம் இயற்கையானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயனின் தந்தை தாஸுடன், ஜெயபிரகாசத்தை சேர்த்து குழப்பி பேசியுள்ளார் எச்.ராஜா என பலரும் பேசி கருத்து தெரிவித்துள்ளனர்.

H Raja controversy speech about Sivakarthikeyan’s father

ஓடிடி-யில் அஜித்தின் ‘வலிமை’..?; ட்விட்டரில் டிரெண்டாகும் #ValimaionOTT

ஓடிடி-யில் அஜித்தின் ‘வலிமை’..?; ட்விட்டரில் டிரெண்டாகும் #ValimaionOTT

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimaiபோனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஹூமா குரேஷி நாயகியாக நடிக்க கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

யுவன் இசையமைத்து வருகிறார்.

மே 1ல் அஜித்தின் பிறந்தநாளுக்கு வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று போனி கபூர் தெரிவித்தார்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனையால் மக்கள் அவதிப்பட்டும் உயிரிழந்தும் வரும்போது வலிமை போஸ்டர் வருவது சரியாகாது என அறிக்கை மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் வலிமை குறித்து நடிகர் ஆர்.கே. சுரேஷ் சமீபத்தில் கூறியதாவது..

அஜித் சார் வேற லெவல் ஸ்டண்ட் செய்திருக்கிறார். இந்த படம் அவர் கெரியரில் மைல் கல்.

ஒரு தல ரசிகனாக வலிமை படத்தை தியேட்டரில் பார்க்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென #ValimaionOTT என்ற ஹேஷ்டேக்கை சிலர் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இது யாருடைய வேலை? என்பது தான் புதிராக உள்ளது.

Thala Ajith’s Valimai to release on OTT ?

எச்சரிக்கை : தமிழகத்தை தாக்கும் அடுத்த நோய் கருப்பு பூஞ்சை (Black Fungus)..; சென்னையில் 9 பேர் அனுமதி!

எச்சரிக்கை : தமிழகத்தை தாக்கும் அடுத்த நோய் கருப்பு பூஞ்சை (Black Fungus)..; சென்னையில் 9 பேர் அனுமதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Black Fungusகொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை (Black Fungus) தாக்குதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த பூஞ்சை தொற்று அதிகமாகி வருகிறது.

கடுமையான தலைவலி, கண் எரிச்சல், கண்கள் சிகப்பாக மாறுதல், திடீரென பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்சனை, மூக்கு, வாய் அதனை சுற்றியுள்ள பகுதிகள் திடீரென கருப்பாக மாறும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற நோய் ஏற்படும்.

அதாவது சுற்றுச்சுழலில் உள்ள பூஞ்சை மூலம், இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறதாம்.

வெட்டுக்காயம், தீக்காயம் வழியாக தோலில் நுழையும் இந்த பூஞ்சை, பின்னர் உடலின் மீதும் பரவுகிறது.

கொரோனாவைப் போல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த கருப்பு பூஞ்சை தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெச்.ஐ.வி, புற்றுநோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நோய் தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது…

“கருப்பு பூஞ்சை புதிதாக உருவான நோய் கிடையாது. உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டால், உடனே அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Black Fungus declared an epidemic all you must know

More Articles
Follows