கார் ப்ரேக் டவுன்… மெட்ரோவில் பயணித்து ப்ளைட்டில் பறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

கார் ப்ரேக் டவுன்… மெட்ரோவில் பயணித்து ப்ளைட்டில் பறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya rajeshநிவர் புயல் வருகையால் சென்னையில் ஓரிரு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளே தெரியாத அளவுக்கு மழை நீர் வெள்ளமாக தேங்கிநிற்கிறது,

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹைதராபாத் செல்வதற்காக, சென்னை விமானம் நிலையத்திற்கு காரில் செல்ல விரைந்துள்ளார்.

ஆனால் சாலைகளில் வெள்ளம் & போக்குவரத்துக்கு நெரிசலால் அவரது கார் சிக்கிக்கொண்டுவிட்டது.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா, மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

பின்னர் விமானநிலையத்தை அடைந்துள்ளார்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Nivar forces actress Aishwarya Rajesh to take public transport

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி.. ‘மொட்டை’ ராஜேந்திரனின் ‘தகவி’

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி.. ‘மொட்டை’ ராஜேந்திரனின் ‘தகவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Motta Rajendran in Thagaviஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை.

அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் ” த க வி”.

“ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற ஜீவனான கருத்தை கொண்டு ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம்.

இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் ” நான் கடவுள் ராஜேந்திரன் கும்மாளமிட்டு கலகலப்பு ஊட்டும் காட்சிகளை சமீபத்தில் சேலத்தில் படமாக்கினோம்.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்க செய்வது ஒரு சவாலான காரியம். இதை சவாலாக ஏற்று ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்.” என்று கூறுகிறார் இயக்குனர் சந்தோஷ்குமார் .
சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார் தயாரிக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரனுடன், சிங்கம் புலி , அஜய் ரத்தினம், வையாபுரி மற்றும் ராகவ் , ஜெய் போஸ் இருவரும் நாயகன்களாக நடிக்க இவர்களுடன் சாப்ளின் பாலு, பயில்வான் ரங்கநாதன், தேவி, உமா, ஜீவிதா, ஐந்து கோவிலான், கிங்காங், விஜயபாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

சேலம், ஏற்காடு, ஒடஞ்ச பாலம், விநாயகம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, உட்பட அதனை சுற்றி உள்ள இடங்களில் படம் வளர்ந்துள்ளது.

அரிகாந்த் கேமராவையும், கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசையையும், எம்.சக்திவேல் கதை, வசனத்தையும் , டாக்டர் .சி.சரவண பிரகாஷ் இணைத்தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

எஸ். நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தை சந்தோஷ்குமார் . ஜெ. திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

பின்னனி இசைச் சேர்ப்பு நடைபெற்று வரும் இப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

Motta Rajendran’s Thagavi will release on January 2020

‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் டம்மி பீசுகள்.. கன்டென்ட்டே இல்லை…; பரத் கருத்துக்கு பிரேம்ஜி ஆதரவு..?

‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் டம்மி பீசுகள்.. கன்டென்ட்டே இல்லை…; பரத் கருத்துக்கு பிரேம்ஜி ஆதரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath Premgiகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

நடிகை அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்தனர்.

பாடகர் வேல்முருகன், நடிகை ரேகா, நடிகை சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிலிருந்து வெளியேறினர்.

அதுபோல வந்த வேகத்தில் சுசீத்ரா வெளியேறினார்.

தற்போது பாலாஜி, ஷிவானி, சம்யுக்தா, ஆஜித், ஆரி, ரம்யா, அர்ச்சனா, ரியோ, கேப்ரில்லா, சோம் சேகர் உள்ளிட்டோருடன் பிக்பாஸ் வீடு கலகலப்பாக செல்கிறது.

இந்த நிலையில் நடிகர் பரத், “பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அத்தனை டம்மி பீசுகள். அவர்களை வெளியே அனுப்புங்கள். அவர்களிடம் கன்டென்ட் இல்லை” என தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக நடிகர் பிரேம்ஜி பதிவிட்டு… “நாம் இரண்டு பேரும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே செல்வோமா” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Bharath and Premgi comments on Bigg Boss Tamil 4

புதுச்சேரியா.? புதுச்சேரி மாநிலமா.? கன்ப்யூசனில் காரைக்கால் மக்கள்… ஆளுநர்-முதல்வர் கவனிப்பார்களா.?

புதுச்சேரியா.? புதுச்சேரி மாநிலமா.? கன்ப்யூசனில் காரைக்கால் மக்கள்… ஆளுநர்-முதல்வர் கவனிப்பார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nivar cyclone 144 in karaikalபாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட மாநிலம் தற்போது புதுச்சேரி என்ற பெயர் மாற்றத்துடன் அழைக்கப்படுகிறது.

இந்த புதுச்சேரி மாநிலம் என்பது 4 பகுதிகளை கொண்டது.

அதாவது புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகியவை.

இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழ் மொழி பேசப்படுகிறது. மாஹி கேரளாவில் உள்ளதால் மலையாள மொழியும் ஏனாம் ஆந்திராவில் உள்ளதால் தெலுங்கு மொழியும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நான்கு பகுதிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே உள்ளார். 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

புதுச்சேரியில் 23 எம்எல்ஏக்கள்.. காரைக்காலில் 5.. மாஹி மற்றும் ஏனாமில் தலா 1 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மொத்தம் 30.

(மேலே கண்ட வாக்கியங்களில் கூட புதுச்சேரியில் என்றால் அது மாநிலத்திற்கா? அல்லது அந்த பகுதிக்கு மட்டுமா? என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது.)

புதுச்சேரியில் ஒரு திட்டம் அல்லது பொது விடுமுறை அல்லது பள்ளிகள் திறப்பது, உள்ளுர் விடுமுறை அல்லது ஊரடங்கு போன்ற ஏதாவது ஒன்று அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தால் முதலில் காரைக்கால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அண்மைக்காலமாக கொரோனா ஊரடங்கில் திடீரென திடீரென தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது அறிவிக்கப்பட்டவை புதுச்சேரிக்கு மட்டுமா? அல்லது காரைக்காலுக்கு பொருந்துமா? என்ற விவரங்கள் காரைக்கால் மக்களுக்கு தாமதமாகவே வந்தன.

இதற்கு முக்கிய காரணம் புதுச்சேரி என்ற பெயரே.. அதாவது மாநிலத்திற்கும் புதுச்சேரி பகுதிக்கும் ஒரு பெயரே அமைந்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை என்பது தலை நகரமாக உள்ளது. கேரளாவை பொறுத்தவரை திருவனந்தபுரம் என்பது தலைநகரமாக உள்ளது.

இதுபோல மாநிலத்திற்கு ஒரு பெயர், தலைநகரத்திற்கு ஒரு பெயர் என்று இருந்தால் நிச்சயம் குழப்பம் வராது.

ஆனால் புதுச்சேரி ன்ற அறிவிப்புடன் ஒரு தகவல் வெளியாகும்போது அது புதுச்சேரிக்கு மட்டுமா? அல்லது புதுச்சேரி மாநிலம் முழுவதுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே அந்த பகுதிக்கு பாண்டிச்சேரி என்ற பெயரை வைத்துவிட்டு மாநிலத்திற்கு புதுச்சேரி என பெயர் வைத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நிச்சயம் குழப்பம் வராது.

இனி வரும் காலங்களில் இந்த பெயர் பிரச்சினைகளை தவிர்க்கலாமே.

ஆளுநர் மற்றும் முதல்வர் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களா? என்பதே காரைக்கால் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Will Chief Minister change Puducherry name Karaikal peoples confusion

மத்திய அரசின் அடுத்த அதிரடி.. ; 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை

மத்திய அரசின் அடுத்த அதிரடி.. ; 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

43 chinese apps banஇந்தியா & சீனா ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலின்போது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதையடுத்து, சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக நாட்டின் இறையாண்மை & தேச நலன் பாதுகாப்பு ஆகிய அடிப்படையில் ஜூன் மாதம் இறுதியில் சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதன்பின்னர் செப்டம்பர் 2-ம் தேதி 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மேலும் 43 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் 43 மொபைல் ஆப்களை இந்தியாவில் பயனர்கள் அணுகுவதைத் தடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Govt bans 43 Chinese apps in India

நிவர் புயல் அலர்ட்.. : புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு

நிவர் புயல் அலர்ட்.. : புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nivar cyclone 144 in karaikalவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கிறது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாகை, காரைக்கால், மயிலாடுதுறையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாம்.

தஞ்சை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை நவம்பர் 25 (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை என எடப்பாடி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மட்டும் பாதிப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் புயல் கரையை கடக்கும் வரை மூடப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தேவையான அளவு பெட்ரோல் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் நாளை நவம்பர் 25 கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை நவ 25 காலை 10 மணி முதல் 26 தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

Section 144 imposed in Pondy and Karaikal

More Articles
Follows