தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகத்திற்கு வருகிறார்.
மேலும், ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி 2’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.
அதேபோல், விஜய் சேதுபதி ‘ஜவான்’, ‘காந்தி டாக்ஸ்’ உள்ளிட்ட ஹிந்தி படங்களில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பிறகு, இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும் புதிய படத்தில் முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் இணைகிறார் வடிவேலு.
இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்படம் 2023 ஜனவரியில் தொடங்கும் என்றும், படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
new update on vijay sethupathi and vadivelu film