தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா !!

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா !!

New Project (1)சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நாயகனாக நடிக்கும் “தயாரிப்பு எண் 34” படத்தின் பெரிய பெரிய அறிவிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினத்தன்று புகழ்பெற்ற சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்தை துரை செந்தில்குமாரும் (தயாரிப்பு எண் 34), மற்றொரு படத்தை ராட்சசன் புகழ் ராம்குமாரும் (தயாரிப்பு எண் 35) இயக்குகிறார்கள் என்று வெளியான அந்த அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்புகள் எகிறின.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முழு மூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மிகவும் பிரபலமான பலர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்திய வரவாக, மிகவும் திறமையான மற்றும் துடிப்பான நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அவர் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.

இயக்குனர் துரை செந்தில்குமார் இது குறித்து கூறும்போது, “நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் இணைவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வெவ்வேறு பரிமாணங்களில் அவரின் மிகச்சிறப்பான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அவரும் இந்த படத்தில் இணைந்திருப்பது படத்துக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.

‘கரு’ பட நாயகியுடன் காதலா.? விஜய் விளக்கம்

‘கரு’ பட நாயகியுடன் காதலா.? விஜய் விளக்கம்

director vijay and sai pallaviஇளைய தளபதி விஜய் நடித்த ‘தலைவா’ படத்தை டைரக்டர் விஜய் இயக்கினார்

இப்பட சூட்டிங்கின் போது நாயகி அமலாபாலை காதலித்து பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர் இயக்குனர் விஜய்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றனர்.

பின்னர் அமலாபாலும் சினிமாவில் பிஸியாக, விஜய்யும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார்.

ஆடை படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார் அமலாபால்.

‘வாட்ச்மேன்’, ‘தேவி 2’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, தற்போது ஜெயலலிதா-வின் வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கவுள்ளார் விஜய்.

இந்த நிலையில், கரு (தியா) பட நடிகை சாய் பல்லவியை விஜய் 2வதாக திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.

நம் தளத்தில் நாம் பதிவிடவில்லை.

இது குறித்து இயக்குநர் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“இருவருமே நல்ல நண்பர்கள். வதந்திகளை நம்பாதீர்கள்” என தெரிவித்தனர்.

The Youngest MP of India made his Constituency as Star Constituency

The Youngest MP of India made his Constituency as Star Constituency

Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updatesSouth Chennai is already considered as a Star Constituency because it has AIADMK candidate Dr.JayaVardhan & DMK candidate Tamizhachi Thangapandiyan.

Dr.JayaVardhan is a star candidate, he is the youngest MP of India with a huge support among his people. He is the son of Minister Jayakumar which is an added support.

Thamizhachi Thangapandiyan on the other hand, with the support of DMK, is new to groundwork. Her support is that she comes from DMK family and the party is in full support of her. She is also a noted writer.

As Dr.JayaVardhan is already a sitting MP, people knew his services to them and they feel a good vibe in his Election campaigns. On the other hand, Tamizhachi Thangapandiyan’s Election campaign focusses on DMK’s Star candidates. Udhayanithi Stalin’s campaign has created a little controversy but hasn’t ended on any positive note.

Dr.JayaVardhan’s welfare schemes has always been welcomed by people. For Pallikaranai Marshland issue which was a long pending one, He declared 1,300 crores and the works has started, is cherished and received with applause among South Chennai people.

He attached CCTC cameras in all Railway Stations which is useful and help find many crimes. His campaigns are fully crowded and is also so simple that all people could reach him. Whereas Tamizhachi Thangapandiyan is like a star celebritiy candidate and people find it hard to reach her.

Before Election date was announced, it seemed like AIADMK had lost its touch and because of talks like BJP will join ADMK, there is no way ADMK will win this time around.

But once the date was announced, ADMK’s election strategy and Dr.JeyaVardhan’s Previous schemes and his respect among people has become a plus for ADMK.

Things started to change around for good to AIADMK. Dr.JayaVardhan is people’s favourite right now, and Tamizhachi Thangapandiyan is struggling even for her Introduction among people. This is the position now in TN. However, people will decide who will win during voting.

 

The Youngest MP of India made his Constituency as Star Constituency

 

தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா

தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா

New Project (6)தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது.

1953 -ல் “பெற்றதாய்” படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசியவிருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அவரின் அதி தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார்.

இவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுவிற்கு ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தி இருக்கிறார். பொதுவாக ரசிகர்கள் கைதட்டுவார்கள் சில பேர் பால் அபிஷேகம் செய்வார்கள் ஆனால் இவரோ பாராட்டு விழா நடத்துகிறார் என்றால் சுசீலா அவர்களின் புகழ் வானுயர்ந்ததே. மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு இத்தனை கோடியா.?

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத்துக்கு இத்தனை கோடியா.?

New Project (4)மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை பலரும் படமாக்க உள்ளனர் என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

மிஷ்கினின் உதவி பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஐயர்ன் லேடி என்ற பெயரில் படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார்.

சசிகலா கேரக்டரில் வரலட்சுமி நடிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர்கள், பாரதிராஜா, விஜய், லிங்குசாமி ஆகியோரும் ஜெயலலிதா படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.

இதில் இயக்குனர் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவி படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவுள்ளது.

மக்கள் செல்வனை சங்கத் தமிழனாக மாற்றும் விஜய்சந்தர்

மக்கள் செல்வனை சங்கத் தமிழனாக மாற்றும் விஜய்சந்தர்

New Project (3)நம் கை மற்றும் கால் விரல்களை சேர்த்தால் கூட விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை எண்ணிவிட முடியாது.

தினம் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டும் சில இயக்குனர்களிடம் ஒப்புக் கொண்டும் வருகிறார்.

தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடிக்க, சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

எம்.பிரபாகரன் கலையை கவனிக்க பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனித்து வருகிறர்.

ன்றனர்.

முதல்கட்ட சூட்டிங்கை முடித்த படக்குழுவினர் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.

More Articles
Follows