தகுதியில்லாதவர்கள் ரஜினியை விமர்சிக்கலாமா..? நட்ராஜின் நச் கேள்விகள்

rajinikanth and nattyரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில் பலரும் பல்வேறு விமர்சனங்களை அவர் மீது விசி வருகின்றனர்.

அதற்கு எல்லாம் சில மேடைகளில் பேசும்போது பதிலடி கொடுத்து வருகீறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் ஒரு தனியார் டிவி பேட்டியில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியுள்ள பிரபல இயக்குனர் ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகரும் நட்டி என்ற நட்ராஜ் ரஜினியை விமர்சித்தவருக்கு தக்க பதிலடிகளை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதோ அந்த ட்வீட்டுக்கள்…

1) தன்துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் அரவணைத்தது..அதுவே ஒரு துவக்கம்…தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரைஅரங்கங்கள், அனுபவித்த வெற்றிகள் எண்ணிலடங்காதவை… இதை விட எத்துனையோ குழந்தைகளின் படிப்புக்கு உதவியவை..கிடைத்ததை அனைவருடன் பகிர்ந்தது..அது போதும்….

2) ஒரு படங்கூட ஓடாத… தன் தயாரிப்பாளர்களை கடன்காரன் ஆக்கிய கேடு கெட்டவன்லாம் பேசுவானாம்… யார் என்ன பண்ணனும்னு…இதில் இவன் ரசிகனாமா?…எப்படி தொங்கினாலும் வவ்வாலாக முடியாதுடீ..வர போக வண்டி குடுத்தாங்கல்ல…போ…

3) கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு என்ன பண்ணிருக்க… எத்தனை பேருக்கு பீஸ் கட்டி இருக்க… எத்தன பேருக்கு சாப்பாடு போடறே.. பதக்குனு அத சொல்லு…நல்லவன் பேர் சொன்ன பதக்குங்குதா?… ஏன் ஆகாது… இயற்கை தானே…..

Overall Rating : Not available

Latest Post