எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? தயாரிப்பாளரானார் மொட்டை ராஜேந்திரன்

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? தயாரிப்பாளரானார் மொட்டை ராஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mottai Rajendranசினிமாவில் பைட் மாஸ்டராக இருந்து பாலா இயக்கிய நான் கடவுள் படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன்.

தற்போது வில்லன் ரோலை விட்டு காமெடிக்கு தாவிவிட்டார். இதுவும் கைகொடுக்கவே, இவரது காட்டில் பணமழைதான்.

இந்நிலையில் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? என்று பெயரிடப்பட்ட படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார்.

கல்லூரி அகில் நாயகனாக நடிக்க, ’கமருகட்டு’ சஹானா நாயகியாக நடிக்கிறார்.

வர்ஷன் இயக்கியுள் இப்படத்தில் கிராமத்து பண்ணையாராக நடித்துள்ளார் ராஜேந்திரன்.

உயிரிழந்த 25 வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்கினார் விவேகம் நடிகர்

உயிரிழந்த 25 வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்கினார் விவேகம் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Vivek Oberoiகடந்த ஏப்ரல் மாதத்தில் சத்தீஸ்கரில் உள்ள சுக்‍மா மாவட்டத்தில், மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்‍குதலில் 4 தமிழக வீரர்கள் உள்பட 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வீர மரணமடைந்தனர்.

எனவே இவர்களின் குடும்பங்களுக்‍கு உதவ முன் வந்தார் பிரபல பாலிவுட் நடிகர் விவேக்.

அதன்படி தனது கட்டுமான நிறுவனம் சார்பாக, வீடுகளை நன்கொடையாக வழங்க முடிவெடுத்து, விரைவில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் குடும்பத்தினருக்‍கு மும்பையில் கட்டப்பட்டுள்ள அடுக்‍குமாடி குடியிருப்பில் வீடுகளை வழங்கியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி பேரழிவின் போது கடலூரில் ஒரு கிராமத்தையே தத்து எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Vivek Oberoi donated 25 flats to families of CRPF martyrs

திலீப் கைது ஆனதால் அம்மா சங்கத்திலிருந்து நீக்கம்; மம்மூட்டி-மோகன்லால் ஆதரவு

திலீப் கைது ஆனதால் அம்மா சங்கத்திலிருந்து நீக்கம்; மம்மூட்டி-மோகன்லால் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dileep arrest in actress Bhavana sexual assault AMMA disowns following his arrestநடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொடர்பான வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வின் (Association of Malayalam Movie Artistes) அவசரக் கூட்டம் கொச்சியிலுள்ள நடிகர் மம்மூட்டி வீட்டில் இன்று காலை நடந்தது.

இதில் நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதை நடிகர் மம்மூட்டி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது…

’மலையாள நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திலீப் நீக்கப்படுகிறார்.

இந்த சங்கம் பாவனாவுக்கு ஆதரவாக இருக்கும்’ என்றார்.

மோகன்லால், பிருத்விராஜ், தேவன், ரம்யா நம்பீசன் ஆகியோர் உடனிருந்தனர்.

கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட தொழிலாளர் அமைப்பும் திலீப்பை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dileep arrest in actress Bhavana sexual assault AMMA disowns following his arrest

ரஜினி ஸ்டைலில் பணத்தை திருப்பி கொடுக்கும் சல்மான்கான்

ரஜினி ஸ்டைலில் பணத்தை திருப்பி கொடுக்கும் சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salman khan in tubelightஇந்தி சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களின் மிக முக்கியமானவர் சல்மான்கான்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றிருக்கும்.

ஆனால், கடந்த மாதம் 23 ம் தேதி ரிலீஸ் ஆன ’டியூப்லைட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், நஷ்டத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.

அதற்கு ஒப்புக்கொண்ட சல்மான் கான் ரூ.55 கோடியை திருப்பித் தர முடிவெடுத்துள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் நடித்த பாபா, லிங்கா ஆகிய படங்களை நஷ்டமடைந்த போது அப்பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதலை போட்டு கொடுத்ததால் பாவனாவை பழிவாங்கிய திலீப் கைது

கள்ளக்காதலை போட்டு கொடுத்ததால் பாவனாவை பழிவாங்கிய திலீப் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dileep with Actress Bhavanaகடந்த பிப்ரவரி மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது, நடிகை பாவனா அந்த கார் டிரைவர் பல்சர் சுனிலால் கடத்தப்பட்டார்.

இதனையடுத்து, காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.

இச்சம்பவம் போலீஸ் விசாரணைக்கு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் நடிகர் திலீப்பின் பேரும் சேர்க்கப்பட்டது.

தற்போது அவர் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது…

திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர், பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் செய்து வந்தனர்.

இதனிடையில் விவாகரத்து ஆன காவ்யா மாதவனுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார் திலீப்.

இதனை தன் தோழி மஞ்சுவிடம் பாவனா போட்டுக்கொடுக்க, பாவனாவை பழிவாங்க திட்டம் தீட்டினாராம் திலீப்.

எனவேதான் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திலீப்.

பிக்பாஸில் இருந்து நமீதா அவுட்டாகனும்; சிம்பு ரசிகர்கள் ஆசை

பிக்பாஸில் இருந்து நமீதா அவுட்டாகனும்; சிம்பு ரசிகர்கள் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and namithaAAA படம் தனக்கு மிகவும் கெட்டப் பெயரை வாங்கி கொடுத்துவிட்டதால், அதிரடியான ஹிட் படத்தை கொடுக்க நினைத்துள்ளார் சிம்பு.

எனவே பாதியில் கைவிடப்பட்ட கெட்டவன் படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு.

இதில் நமீதா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாராம்.

ஆனால் நமீதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிக் கொண்டுள்ளதால், அவர் அதிலிருந்த வர நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதனையறிந்த சிம்பு ரசிகர்கள், நமீதா அவுட் ஆகி வெளியானால், அவர் கெட்டவன் படத்தில் நடிக்க வந்துவிடுவார் என நினைக்கிறார்களாம்.

பிக்பாஸ் ஜி.. இதெல்லாம் உண்மையா..?

More Articles
Follows