தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலா இயக்கிய ’நான் கடவுள்’ படத்தில் கொடூரமான வில்லன் நடித்தவர் ராஜேந்திரன்.
அதன்பின்னர் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்து தற்போது முழு நேர காமெடி நடிகராகிவிட்டார்.
பாஸ் என்ற பாஸ்கரன், ‘ராஜா ராணி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹரஹர மகாதேவகி’ ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.
தற்போது ’ராபின்ஹுட்’ படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் பழனியப்பன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீநாத் என்பவர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்பட மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு ஆதரவு அளித்துள்ளார்.