அடேங்கப்பா.. அரசு சேவைகள் அனைத்திலும் ஊழல்..; லஞ்சப் பட்டியலை வெளியிட்டார் கமல்

அடேங்கப்பா.. அரசு சேவைகள் அனைத்திலும் ஊழல்..; லஞ்சப் பட்டியலை வெளியிட்டார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஅரசு அலுவலங்களில் பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதே தற்போது வழக்கமாகி விட்டது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் சகஜமாகிவிட்டது. எனவே அரசியல்வாதிகள் போட்ட முதலீட்டை எடுப்பதிலேயே குறியாக உள்ளனர்.

அரசு அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்.

பிறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமை, மனைப் பட்டா தொடங்கி இறப்பு சான்றிதழ் வரை ஊழலில் ஊறிப்போயுள்ளது.

இந்த நிலையில் அரசின் ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு பணம் லஞ்சமாக பெறப்படுகிறது என்பதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன் https://t.co/hJLpQ1XG9s

MNM leader KamalHaasan releases a bribe card

Kamal Haasan

IMG_20201228_124555

‘பிக்பாஸ்’ வீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி..; அனிதா அவுட் ஆனார்

‘பிக்பாஸ்’ வீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி..; அனிதா அவுட் ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anitha evicted from Bigg Boss home and Bhoomi special showவிஜய் டிவியில் கமல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

தற்போது 80 நாட்களை கடந்துவிட்டது. கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் மீதமிருந்தவர்களில் ஷிவானி, கேப்ரியலா முதலில் காப்பாற்றப்பட்டனர்.

இதன் பின்னர் ஆஜித், அனிதா வெளியேற இருந்தனர். இறுதியில் அனிதா அவுட் ஆனார்.

அனிதா போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.

பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ‘கன்னுக்குட்டி’..; ஓவர் ப்லீஃங்கில் அனிதா கணவர்

இன்றைய நிகழ்ச்சியில் பூமி பட ஹீரோ ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியாக ரவி பங்கேற்றார். இத்துடன் பூமி பட டிரைலரும் திரையிடப்பட்டது.

அப்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பார்ப்பீர்களா? என கமல் கேட்டார்.

அப்போது நீங்கள் எதை செய்தாலும் நான் பார்ப்பேன். ஏனென்றால் நான் வெறித்தனமான பக்தன் என கமலை பார்த்து சொன்னார் ஜெயம் ரவி.

Anitha evicted from Bigg Boss home and Bhoomi special show

ஓய்வு தேவை… மன அழுத்தம் கூடாது..; டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்

ஓய்வு தேவை… மன அழுத்தம் கூடாது..; டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini discharged from hospital Doctors advised for complete restஇரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அவரது உடல் நிலை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில்.. ‘தீவிரமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் முழுச்சோர்வின் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவரின் ரத்த அழுத்தம் தற்போது சீராக உள்ளது. உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

தவறை ஒப்புக் கொள்ளும் சிறந்த ஆளுமை ரஜினிகாந்த்..; தனஞ்செயன் பாராட்டு

ரஜினிக்கு மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரைகள் இதோ…

1. ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

2. மனஅழுத்தம் கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

3. கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல்களை தவிர்க்க வேண்டும்

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Rajini discharged from hospital Doctors advised for complete rest

சூறாவளி சுற்றுப்பயணம்..; கொடிகாத்த குமரனாய் மாறிய மந்திரி

சூறாவளி சுற்றுப்பயணம்..; கொடிகாத்த குமரனாய் மாறிய மந்திரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Minister Jeyakumarஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன.

ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

சென்னையின் பல்வேறு சாலைகளில் அமைச்சர் கொடியை ஏந்தியபடி செல்வதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் பலரும் அவரோடு மற்ற பைக்குகளில் கொடி பிடித்தபடி இணைந்து கொண்டனர்.

காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சி நிரல் சூறாவளி சுற்றுப்பயணம் நான்கு மணி நேரம் தொடர்ந்தது.

அடுத்தடுத்த இடங்களுக்கு பைக்கில் வலம் வந்தார் ஜெயக்குமார். அன்னதானம், இலவச வேட்டி சேலைகள், மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஒவ்வொரு இடங்களிலும் சென்று கொடுத்தபடியே இருந்தார். ஓரிடத்தில் முடித்துக்கொண்டு மற்றொரு இடத்திற்கு ஜெட் வேகத்தில் பறந்தது பைக் பேரணி.

அதிமுக கொடியை உயர்த்திப் பிடித்தவாறு ஒரு இளைஞனைப் போல குதூகலத்தோடு அமைச்சர் ஜெயக்குமார் பைக்கில் வலம் வந்த காட்சி பொதுமக்களை வியக்க வைத்தது.

திட்டமிட்டபடியே 40 நிகழ்ச்சிகளிலும் 4 மணி நேரத்தில் கலந்து கொண்டு தன் எண்ணத்தை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார் அவர்.

எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய அதிமுகவின் கொடியை மக்கள் மத்தியில், மனதில் கொண்டு சேர்க்கும் வகையில் கைகளில் கொடி தாங்கி வந்த அமைச்சரை, இவர் அதிமுகவின் கொடிகாத்த குமரன் என்று பொதுமக்கள் பலர் பாராட்டி மகிழ்ந்தனர்..

Minister Jeyakumar is in full form

மாலை கண்நோய் பற்றிய படம்.; கிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பட காட்சி வெளியானது

மாலை கண்நோய் பற்றிய படம்.; கிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பட காட்சி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#SebastianPC524இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர்.

அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ஹிட் பாடல்களால் பிரபலமானது.

தற்போது அவரது மூன்றாவது படமான ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது. ஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி இன்று வெளியிட்டுள்ளார்.

பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது.

இன்று வெளியிடப்பட்ட அந்த காட்சியில் ஒரு தேவாலயம், இயேசுவின் புகைப்படம், மற்றும் படத்தின் ஹீரோ ஆகிய விஷயங்கள் தனித்துவமான முறையில் காட்டப்படுகின்றன.

சுவாரஸ்யமான பின்னணி இசையுடன், ‘ஒரு தாயின் நீதிக்காக ஒரு தாயின் சத்தியம்’ மற்றும் ‘உண்மை என்றும் மறைவதில்லை’ உள்ளிட்ட வரிகள் காட்சியமைப்புடன் பொருந்திப் போகிறது.

அந்த காட்சியின் மூலம், நாயகன் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒருவர் தாடியுடன் தோன்றும் அதே நேரத்தில் மற்றொருவர் க்ளீன் ஷேவ் செய்த காவல் அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் கிரண் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு கிறிஸ்துவராக நடிக்கிறார்.

அதனால்தான் காட்சியின் முடிவில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள், செபா’ என்ற வாக்கியம் இடம்பெறுகிறது.

இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சாஹோ படத்துக்கு பிறகு அவர் இசையமைக்கும் நேரடி தெலுங்கு படம் இது. கதை மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்துக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

நடிகர்கள்:

கிரண் அப்பாவரம், நம்ரதா தரேகர், கோமலி பிரசாத், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா

லிங்க் : https://youtu.be/vxuJwwD4o_c

படக்குழு:

எழுத்து, இயக்கம்: பாலாஜி சய்யபுரெட்டி
ஒளிப்பதிவு: ராஜ் கே நல்லி
கலை இயக்கம்: கிரண் மாமிடி
எடிட்டிங்: விப்லவ் நிஷாதம்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: எலைட் எண்டெர்டைன்மெண்ட்
இணை தயாரிப்பு: சித்தா ரெட்டி பி
தயாரிப்பாளர்கள்: ப்ரமோத், ராஜு
டிஜிட்டல் உரிமை: டிக்கெட் ஃபாக்டரி
விளம்பரம்: சவான் பிரசாத்
டிஐ: சுரேஷ் ரவி
ஒலி: சிங்க் சினிமாஸ் சச்சின் சுதாகரன்
பிஆர்ஓ: யுவராஜ்

First Glimpse of #SebastianPC524 is out

ஜனநாயக பாடம் எடுப்பவர்களே.. ஏன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை.?நாராயணசாமிக்கு மோடி கேள்வி

ஜனநாயக பாடம் எடுப்பவர்களே.. ஏன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை.?நாராயணசாமிக்கு மோடி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi narayanasamyபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு பல வருடங்களாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

இது தொடர்பாக அனைத்து எதிர்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.

இந்நிலையில், இன்று ஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இது பற்றி கூறியதாவது

“உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புதுச்சேரியில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை.

ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் ஆட்சியில் உள்ளனர்” என புதுச்சேரி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Modi slams Pudhucherry CM Narayana Samy

More Articles
Follows