தவறை ஒப்புக் கொள்ளும் சிறந்த ஆளுமை ரஜினிகாந்த்..; தனஞ்செயன் பாராட்டு

rajinikanth dhananjayanஇராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்.

அதன்பின்னர் ரஜினி தரப்பில் ரூ. 6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்தினர்.

இதனையடுத்து ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

ஆனாலும் ரஜினியின் இந்த ட்வீட்டும் சர்ச்சையானது.

70 வயதான ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இது கூட தெரியவில்லையா.? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்..

இந்த நிலையில் தவறை ஒப்புக் கொண்ட ரஜினியை தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில்…

ஒரு தவறை வெளிப்படியாக ஒப்புக் கொள்வதில் தான் சிறந்த மனிதத்தன்மை/ஆளுமை வெளிப்படுகிறது. அப்படி செய்து உயர்ந்து நிற்கிறார் @rajinikanth சார். #அனுபவமே_பாடம்

என பதிவிட்டுள்ளார்.

Producer Dhananjayan about Rajinikanth’s property tax issue

Overall Rating : Not available

Latest Post