பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ‘கன்னுக்குட்டி’..; பேச மறுத்த சுரேஷ்..; ஓவர் ப்லீஃங்கில் அனிதா கணவர்

பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ‘கன்னுக்குட்டி’..; பேச மறுத்த சுரேஷ்..; ஓவர் ப்லீஃங்கில் அனிதா கணவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anitha sampath husband‘பிக்பாஸ் 4’ தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதமாகிவிட்டது.

இந்த வீட்டில் நகரவாசி, கிராமவாசி டாஸ்க் நடைபெற்றது.

இதில் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிந்து டாஸ்க்கில் ஈடுபட்டனர்.

அப்போது சுரேஷ், அனிதாவை சுமங்கலி வாங்க என்று கூறி அவரை முதலில் தொடங்க வைத்தார்.

இதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு, நடனம் & பாடல் போட்டிகள் நடைபெற்றன.

பேச்சு போட்டியின் போது நகரத்தார் தலைப்பில் பேசிய அனிதா..

சுரேஷ் சார் என்னை சுமங்கலி வாங்க என்று அழைத்தார். சில கிராமங்களில் விதவைகளை தனித்து விடும் பழக்கம் இருக்கிறது.

இதுவே நான் சுமங்கலி இல்லை என்றால் என்னை முதலில் அழைத்திருக்க மாட்டார்கள் என ஒருவிதமாக பேசினார்.

இதனால் சில போட்டியாளர்கள் முகம் சுளித்தனர்.

ஷிவானி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் அதில் தவறு இல்லை என்றனர்.

மேலும் சுரேஷ் கோபமடைந்தார்.

பின்னர் அனிதா அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் சுரேஷ் பேச மறுத்துவிட்டார்.

இதன் பின்னர் “யாரை அதிகமாக மிஸ் பண்ணுறீங்க” என்ற ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது.

அதில் போட்டியாளர்கள் பலரும் அழுதபடியே பேசினர்.

பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத அனிதா, தனிமையாக உணர்வதாகவும் தன் மீது தவறுகள் இருப்பதாக நினைப்பதாகவும் தன் கணவர் பிரபாவை ரொம்ப மிஸ் செய்வதாக பேசினார்.

அவர் எப்போதும் என்னை கன்னுக்குட்டி தான் அழைப்பார். உங்களுக்கு எல்லாம் இது ஜஸ்ட் வார்த்தை. ஆனால் எனக்கு அது செண்டிமென்ட் என எமோசனலாக பேசினார்.

இதனை சக போட்டியாளர்கள் கிண்டலடித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் அனிதா கணவர் பிரபாகரன்.

அதில்..இது எல்லாம் சரியாகி விடும். கவலை வேண்டாம் செல்லம்மா.” என பதிவிட்டுள்ளார்.

Anitha husband Prabakaran’s reply to her crying

மருத்துவ படிப்புக்கு கட்ஆப் மார்க் அதிகரிப்பு..: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு..; ஆளுநர் அனுமதி

மருத்துவ படிப்புக்கு கட்ஆப் மார்க் அதிகரிப்பு..: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு..; ஆளுநர் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதிக்காக நேற்று வரை காத்திருந்தது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

45 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார்.

இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அவரின் ஒப்புதலுக்கு ஏற்கனவே கால தாமதம் ஆன நிலையில், மேலும் அதற்கான அவகாசம் கேட்டிருந்தார் ஆளுநர்.

இதனிடையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து, ஆளுநர் மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்தார்.

எனவே ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று நன்றி தெரிவித்தார்.

எனவே 7.5% ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவப்படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு பொது பிரிவினருக்கு 520, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் மதிப்பெண் இருந்தது.

இந்தாண்டு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும்.

அதேசமயம் இந்த முறை 500க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிகமாக உள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்ய 7.5% இடஒதுக்கீடு போக மீதிமுள்ள இடத்துக்கான கட்ஆப் மதிப்பெண்ணை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 70 முதல் 100 மதிப்பெண்கள் வரை கட்ஆப் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

High cut-off likely for medical admissions this year in TN

விஷால் & ஆர்யா கூட்டணியில் இணைந்தார் மிருணாளினி

விஷால் & ஆர்யா கூட்டணியில் இணைந்தார் மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mirnaliniஅரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.

இவரின் புதிய படத்தில் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு ஆர்யா & விஷால் இணைந்து நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இது விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32வது படமாகும்.

மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் இப்படத்தை தயாரித்து வருகிறார்

இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் கடந்த அக். 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமன் இசையமைக்க ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பிருந்தா நடனத்தை கவனிக்கிறார்.

இந்த நிலையில் மிருணாளினி இப்பத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இவர் ஏற்கெனவே ஆரண்ய காண்டம், சாம்பியன் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

Actress Mirnalini joins the sets of Vishal and Arya’s next

‘கால் டாக்ஸி’ படக்குழுவுக்கு கை கொடுத்த விஜய் சேதுபதி & சமுத்திரக்கனி & ஸ்ரீகாந்த்

‘கால் டாக்ஸி’ படக்குழுவுக்கு கை கொடுத்த விஜய் சேதுபதி & சமுத்திரக்கனி & ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

call taxi teaserகே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் ‘கால் டாக்ஸி’. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர்.

ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள்.

இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக “மெர்லின்”, “மரகதகாடு”, “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார்.

மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் வெளியிட்டிருக்கிறார்கள்.

Teaser Link

https://youtu.be/DyNxzZodf6Y

Vijay Sethupathi released Call Taxi Tamil teaser

கைத்தட்டி விசிலடிச்சி ரசிச்சோம்.. கெஞ்சி கேக்குறேன் வரவேண்டாம்..; ரஜினிக்கு சீமான் கோரிக்கை

கைத்தட்டி விசிலடிச்சி ரசிச்சோம்.. கெஞ்சி கேக்குறேன் வரவேண்டாம்..; ரஜினிக்கு சீமான் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman rajiniசென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் பசும்பொன் தேவர் பூஜை கொண்டாடினார் சீமான்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ரஜினியின் நேற்றைய அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சீமான்.

”ரஜினிகாந்த் ஒரு ஒப்பற்ற கலைஞர். அவரின் படங்களை பார்த்து கைத்தட்டி விசிலடிச்சி ரசிச்சி இருக்கோம்.

ரஜினி, கமலின் அரசியல் நுழைவுக்கு முன்னர் இருந்தே நான் அரசியலில் உள்ளேன். இப்போது ரஜினியை அரசியலில் இழுத்து விடுபவர்களே நாளை அவரை இழிவாக பேசுவார்கள்.

ரஜினி புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர். தமிழகத்தில் மோசமான ஆட்டம் நடக்கிறது.

நீங்கள் மென்மையான கலைஞன். அமைதியாக இருங்கள்.

சொல்லி கொடுங்கள். நாங்கள் செயல்படுத்துகிறோம்.

அவர் மீது அக்கறை கொண்டு சொல்கிறோம். நடிகர் ரஜினிகாந்துக்கு ஓய்வு தேவை என்பதால் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது.

அவரை கெஞ்சி கேக்குறேன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்.”

இவ்வாறு சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Seeman views on Rajinikanth in politics

காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறல்..; அறைகூவல் விடுக்கும் ஜி.வி.பிரகாஷ்.

காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறல்..; அறைகூவல் விடுக்கும் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paranoidதயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் இசையை உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தப் படத்தில் லீட் சிங்கிளான ‘பேரனாய்ட்’ பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

6 நிமிடங்களுக்கும் சற்று கூடுதலாக ஒலிக்கும் பேரனாய்ட், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி டீஸர் அண்மையில் வெளியானது.

இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

பேரனாய்ட் என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் வேளையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது.

ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்ற கோஷங்கள் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்பாடலை வெளியிடுவது மிகவும் பொறுத்தமானதாக அமையும். துணிச்சலான முடிவும் கூட.
உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் வெற்றிகளையும், இழப்புகளையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளது அதன் வரிகள். முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன.

ஜி.வி.பிரகாஷ்… கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரும் குரல் வலுவாகப் பதிவு செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இது பொருத்தமானதாக உள்ளது.

அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.

பேரனாய்ட் உருவாக்கம் குறித்து ஏடிஜி, “நான் ஜெர்மன் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஜிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன்.

இசைக்கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்” என்றார்.
ஏடிஜியின் பேரனாய்ட் பாடல் 2020-ம் ஆண்டுக்கான மிக முக்கியமான அறிவுரையைக் கடத்துகிறது.

வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கையை உரக்கச் சொல்கிறது. ஒமர் குட்டிங் பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.

“நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. “என்ற பாடலின் வரிகள் எவ்வளவு ஆழமானவை.

உலகமே அச்சத்திலும் பதற்றத்திலும் சிக்கியிருக்கும் வேளையில் பேரனாய்ட் பாடல் ஒரு மந்திரமாக ஒலிக்கும். அந்த மந்திரம் நம்பிக்கையை விதைக்கும்.

புதிய நம்பிக்கை ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும்.
பாடலில் பங்காற்றியது குறித்து ஒமர் குட்டிங், “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

அதை எளிதில் செய்யலாம். உங்கள் வாக்கை செலுத்தி உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுங்கள்.

மாற்றத்திற்கான உங்களி பங்களிப்பை நல்குங்கள். அதன்மூலம் வெறுப்பை, அச்சத்தை நிறுத்துங்கள். இந்தப் பாடல் மூலம் நானும் என்னைப்போன்ற கலைஞர்களும் மாற்றத்தை உண்டாக்கும் பேரியிக்கமாக கைகோர்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

ராப் பாடகி சா-ராக் பேசும்போது, “திறன்வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களான ஒமர் குட்டிங், ஜி.வி.பிரகாஷ், தி ஏடிஜி ஆகியோருடன் இணைந்து பேரனாய்ட் ஆல்பத்தில் பணியாற்றியது ஒரு மயக்கும் அனுபவம்.

சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிர பிரச்சினையை தனித்துவத்துடன் புத்துணர்வு பொங்கும் வகையில் எடுத்துரைக்கும் பணியில் இணைந்து செயல்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்” என நெகிழ்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில்..,

“ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்.

இதுபோன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்படுட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட கோரிக்கை வைக்கிறது.

Paranoid first single from Trap City releases today

More Articles
Follows