தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகன் நிகில், தனது 20வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘சுயம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
’சுயம்பு’ என்ற தலைப்பும் செங்கோல் தாங்கிய படத்தின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகிலை ஒரு மூர்க்கமான போர்வீரனாகக் காட்டிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அமோக வரவேற்பைப் பெற்றது.
படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும், படத்தின் ரெகுலர் ஷூட்டிங் இன்று ஆகஸ்ட் 18ல் தொடங்குகிறது. நிகில் ஒரு போர்வீரனாக குதிரையில் சவாரி செய்யும் போது ஒரு நாகத்தை நோக்கி அம்பு எய்வது போல் இந்த போஸ்டரில் உள்ளது.
அவரது தோற்றம் முதல் காஸ்ட்யூம் என இதுவரை நாம் பார்த்திராத புதிய நிகிலை ரசிகர்கள் பார்க்க இருக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போலவே, இந்த புதிய போஸ்டரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படம் நடிகர் நிகிலின் கேரியரில் அதிக பொருட்செலவிலும் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடனும் உருவாக இருக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.
நடிகர்கள்: நிகில், சம்யுக்தா மேனன்
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
இசை: ரவி பஸ்ரூர்,
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனங்கள்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மார்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ.
Karthikeya 2 hero Nikhils Swayambhu Launched Grandly
Cast: Nikhil, Samyuktha Menon
Technical Crew:
Writer, Director: Bharat Krishnamachari
Producers: Bhuvan and Sreekar
Banner: Pixel Studios
Presents: Tagore Madhu
Music: Ravi Basrur
DOP: Manoj Paramahamsa
Dialogues: Vasudev Muneppagari
Production Designer: M Prabhaharan
Co-Producers: Vijay Kamisetty, GT Anand
Marketing :First Show