விஜய்யின் ஹாட்ரிக் தீபாவளி; 4வது முறையாக காத்திருக்கும் ‘மாஸ்டர்’

விஜய்யின் ஹாட்ரிக் தீபாவளி; 4வது முறையாக காத்திருக்கும் ‘மாஸ்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master diwali2017 தீபாவளிக்கு விஜய் நடித்த மெர்சல் படம் வெளியானது.

2018 தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது.

2019 தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படம் வெளியானது.

இதன் மூலம் தொடர்ந்து 3 ஆண்டு தீபாவளிக்கும் விஜய் படம் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது.

தற்போது 4வது முறையாக தீபாவளியை இந்தாண்டும் 2020 தீபாவளியை விஜய் குறி வைப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தினம் அதிகரித்து வருவதால் சூட்டிங் எப்போது தொடங்கப்படும் என எவருக்கும் தெரியவில்லை.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடமான தியேட்டர்கள் திறக்கப்படுவதும் தெரியவில்லை. இன்னும் 2 மாதங்களில் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள். இதனால் வசூல் பாதிக்கும்.

கொரோனா பாதிப்பு உள்ள மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளிலும் திரையிடுவதில் சிரமம் ஏற்படலாம்.

எனவே நிலைமை சீரான பிறகு தீபாவளிக்கு மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் எப்போது வந்தாலும் சாதனை படைப்பார் என அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்க்கது.

அடுத்த மாதம் ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் பட டிரைலர் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

தல அஜித்தை வியக்க வைத்த தளபதி விஜய்; சுசித்ரா சொன்ன சீக்ரெட்ஸ்

தல அஜித்தை வியக்க வைத்த தளபதி விஜய்; சுசித்ரா சொன்ன சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suchitraநடிகர் விஜய்யின் நடன திறமையை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. அபார நடன திறமை கொண்டவர் அவர்.

அதற்குகேற்ப அவரின் பட பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்துவிடும். இதை பல நடிகர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் விஜய்யின் சூப்பர் ஹிட் சாங்ஸ் பற்றி பாடகி சுசித்ராவிடம் கூறியிருக்கிறாராம்.

சுசித்ராவின் அண்மை பேட்டியில்… “விஜய்க்கு மட்டும் எப்படி சூப்பர் பாடல்கள் அமைகிறது. வேட்டைக்காரன் படத்தில் வரும் சின்னதாமரை பாடல் தனக்கு அதிகம் பிடிக்கும் என அஜித்தே கூறியிருந்தாராம்.

அந்த பாடலை பாடியது பாடகி சுசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களை அதிகளவில் போட்டுத் தாக்கும் கொரோனா.; ஏன் தெரியுமா..?

ஆண்களை அதிகளவில் போட்டுத் தாக்கும் கொரோனா.; ஏன் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona affected menஇன்று மே 16ஆம் தேதி தகவலின் படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 தாண்டியுள்ளது. இது கொரோனா உருவான நாடான சீனாவை விட அதிகம்.

இந்தியாவில் 30,153 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்த நிலையில் உலகளவில் நடத்தப்பட்ட சர்வேயில் ஆண்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

மும்பையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி நெகடிவ் ரிசல்ட் உள்ள பெண்களிடம் கொரொனா கிருமிகள் 4 நாட்களில் முழுவதும் மறைகிறது. ஆனால் ஆண்களிடம் மறைய 6 நாட்கள் ஆகிறது எனவும் தெரியவந்துள்ளது.

பெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தான் அவர்களைக் காக்கும் வேலையை செய்கிறதாம்.

ஆண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதில்லையாம்.

கொரொனா வைரஸ் ACE 2 புரோட்டீனை பயன்படுத்திய மனித உடலில் உள்ள செல்களை தாக்குகிறது.

இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால் இயல்பாகவே கொரோனா அவர்களை எளிதாக தாக்குகிறது என்கிறது ஐரோப்பிய இதயநோய் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு.

ஈஸ்ட்ரோஜன் ACE 2 புரோட்டீனை பாதிப்பதால் கொரொனா வைரஸுக்கு பெண்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.

TLR எனப்படும் ஜீன் அதாவது டால் லைக் ரிசப்டார்ஸ் என்ற ஜீன் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இந்த TLR ஜீன் எக்ஸ் குரோமோசோமில் அதிகம் காணப்படுகிறது .

ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் உடனும் பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம் உடனும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா.; 1 லட்சத்தை தொடுமா.?

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா.; 1 லட்சத்தை தொடுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona indiaஉலகையை அச்சுறுத்தி வரும் கொடிய வைரசாக கொரோனா மாறி வருகிறது.

இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் தோன்றி பரவத்தொடங்கியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்ட்ரா மாநிலம். 2வது இடத்தில் தமிழ்நாடும். 3வது இடத்தில் குஜராத்தும் உள்ளது.

இந்த நிலையில் சீனா இந்த வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் பலியாகி உள்ளனர்.

இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்பலியும் இந்தியாவில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 940 ஐ தொட்டுள்ளது.

அதிக பாதிப்பு பட்டியலில் 11வது இடத்தை பிடித்துள்ளது.

உலகளவில் இதுவரை 213 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது.

45.80 லட்சத்துக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; வசிப்பிடத்திலேயே தேர்வு உள்ளிட்ட 12000 சிறப்பு மையங்கள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; வசிப்பிடத்திலேயே தேர்வு உள்ளிட்ட 12000 சிறப்பு மையங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

10th public examகொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் பள்ளி பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.

ஓரிரு தினங்களுக்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.

மாணவர்களின் நலனை கருதி பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

தேர்வு மையங்களை பார்வையிடுதல், மாணவர்கள் பத்திரமாக தேர்வு எழுதி, வீடு திரும்பும் வரையிலான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவ மாணவிகள் எந்தவித அச்சமும் படத்தேவையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வை புதிய முறையில் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

3 ஆயிரம் தேர்வு மையங்களுக்கு மாற்றாக, தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், தேர்வு மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, 20 மாணவர்களுக்கு பதிலாக 10 பேரை மட்டும் அமர வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அவர்கள் வசிப்பிடத்திலேயே சிறப்பு மையத்தை ஏற்படுத்தி, தேர்வை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

புஷ்பா படத்தில் செம்மரக்கடத்தல்.?; விஜய்சேதுபதி இடத்தில் பாபி சிம்ஹா.

புஷ்பா படத்தில் செம்மரக்கடத்தல்.?; விஜய்சேதுபதி இடத்தில் பாபி சிம்ஹா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and bobby simhaதமிழில் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்சேதுபதி வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அதே சமயத்தில் மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மலையாளம், தெலுங்கு என பட்டைய கிளப்பி வரும் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

இதில் வனத்துறை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி விலகிக்கொண்டதாகவும் அவருக்கு பதிலாக பாபி சிம்ஹா அந்த கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்படுகிறதாம்.

இதில் தமிழர்களை செம்மர கடத்தல்காரர்களாக காட்டப்படுவதை விஜய்சேதுபதி விரும்பவில்லை என்றும் அதனால் விலகியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows