டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்

டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterசேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம்.

மும்பை, இந்தியா, 27 ஜனவரி 2021 – அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேகமான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29, 2021 முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.

இது குறித்து அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவரும், இயக்குநருமான விஜய் சுப்ரமணியம் கூறுகையில், ‘அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பில் நாங்க பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர்.

இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்களுக்கு இந்த மாதம் இப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகமெங்கும் உள்ள தங்களின் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியிலிருந்து இந்த சமீபத்திய தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ரசிப்பதற்கான தேர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.’ என்றார்

இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தளபதி விஜய் கூறியுள்ளதாவது: இப்படத்தில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜான் துரைராஜ் என்ற ஒரு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.

ஒரு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படும் அவர், அங்குத் தனது எதிரியான பவானியைச் சந்திக்கிறார். விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் பவானி கதாபாத்திரம் அந்தப் பள்ளிக் குழந்தைகளைத் தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார். ஜான் மற்றும் பவானிக்கும் இடையிலான சுவாரஸ்ய மோதல்கள் பார்வையாளர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ரோலர் கோஸ்டர் பயணமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் அமேசான் ப்ரைம் விடியோவில் இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.’ இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

தனது படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது…

மாஸ்டர் படம் இரண்டு வலிமையான நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்டுள்ளது.

இது மக்களை திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யும் காரணிகளாக அமைந்துள்ளது.

எனினும், அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம்.

என் படம் அமேசான் ப்ரைம் வீடியோவின் மூலம் உலகளாவிய அளவில் வெளியாவது ஒரு இயக்குநராக மிகவும் திருப்தியாக உள்ளது. வரும் ஜனவரி 29 முதல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.

கதைச் சுருக்கம்:

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்படும் குடிபோதைக்கு அடிமையான பேராசிரியர் ஒருவருக்கு, அந்த பள்ளியின் குழந்தைகளைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வரும் கேங்க்ஸ்டர் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது…

Master will have a digital premiere on Prime Video from January 29th

எஸ்.பி.பாலசுப்ரமணியமுக்கு பத்ம விபூஷன்.. சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ..; தமிழகத்தில் 11 பேருக்கு பத்ம விருதுகள்.!

எஸ்.பி.பாலசுப்ரமணியமுக்கு பத்ம விபூஷன்.. சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ..; தமிழகத்தில் 11 பேருக்கு பத்ம விருதுகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூகச் சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு, பொதுவாழ்வு, கலை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை இந்திய அரசின் உயர்ந்த விருதாக கருதப்படுகின்றன.

தற்போது இன்று ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி.., பத்ம விபூஷன் விருது ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன் விருது மறைந்த அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம ஸ்ரீ விருது தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அனிதா, சுப்பு ஆறுமுகம், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Complete List of Padma awardees 2021

*Padma Vibhusan*

Shri Shinzo Abe – Public Affairs – Japan

Shri S P Balasubramaniam (Posthumous) – Art – Tamil Nadu

Dr. Belle Monappa Hegde – Medicine – Karnataka

Shri Narinder Singh Kapany (Posthumous) – Science and Engineering – United States of America

Maulana Wahiduddin Khan – Others – Spiritualism – Delhi

Shri B. B. Lal Others – Archaeology – Delhi

Shri Sudarshan Sahoo – Art – Odisha

*Padma Bhushan (10)*

Ms. Krishnan Nair Shantakumari Chithra – Art – Kerala

Shri Tarun Gogoi (Posthumous) – Public Affairs – Assam

Shri Chandrashekhar Kambara – Literature and Education – Karnataka

Ms. Sumitra Mahajan – Public Affairs – Madhya Pradesh

Shri Nripendra Misra – Civil Service – Uttar Pradesh

Shri Ram Vilas Paswan (Posthumous) – Public Affairs Bihar

Shri Keshubhai Patel (Posthumous) Public Affairs Gujarat

Shri Kalbe Sadiq (Posthumous) Others-Spiritualism Uttar Pradesh

Shri Rajnikant Devidas Shroff Trade and Industry Maharashtra

Shri Tarlochan Singh Public Affairs Haryana

padma-award-2021_1611592631

‘மாஸ்டர்’ படம் விஜய்சேதுபதி படமா.? மக்கள் செல்வன் கொடுத்த நெத்தியடி பதில்

‘மாஸ்டர்’ படம் விஜய்சேதுபதி படமா.? மக்கள் செல்வன் கொடுத்த நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master vijay sethupathiசெங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மாஸ்டர் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப நன்றி.

மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்துள்ளனர். இது நிறைய பேருக்கு நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது.

‘மாஸ்டர்’ என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

“இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்தது.”

இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்..

Makkal Selvan Vijay sethupathi praises Thalapathy Vijay

‘புதுப்பேட்டை 2’ கன்பார்ம்.! அதிரடியாக 3 படங்களில் இணையும் தனுஷ் – செல்வராகவன்

‘புதுப்பேட்டை 2’ கன்பார்ம்.! அதிரடியாக 3 படங்களில் இணையும் தனுஷ் – செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pudhupettai 2‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் தங்கள் கூட்டணி பலத்தை நிரூபித்தனர் செல்வராகவன் – தனுஷ்.

இதன் பின்னர் பல ஆண்டுகளாக இந்த சகோதரர்கள் இணையவில்லை.

தற்போது ‘நானே வருவேன்’ படத்துக்காக இணைந்து பணிபுரிகின்றனர்.

தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்பட அறிவிப்பு வெளியாகும் முன்பே ரசிகர்களே எதிர்ப்பார்க்காத வண்ணம் இந்தக் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை அறிவித்தது.

ஆனால் 2024ல் ஆண்டில்தான் படம் வெளியாகும் என அறிவித்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் தான் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘புதுப்பேட்டை 2’ படத்தில் செல்வராகவன் – தனுஷ் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

இந்த 2 படங்களை முடித்துவிட்டே ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பட பணிகளை தொடங்கவுள்ளார் செல்வராகவன்.

Dhanush and Selvaraghavan joins for new movie again

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியை தற்கொலைக்கே தள்ளியிருப்பார்கள்..; சீண்டும் சீமான்

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினியை தற்கொலைக்கே தள்ளியிருப்பார்கள்..; சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New-Project-2020-06-06T165306.986அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் ரஜினிகாந்த் என இந்தியாவே எதிர்பார்த்த நிலையில் தன் உடல்நல குறைவால் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

இதனால் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

“ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் இணையலாம். எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது எப்போதும் மாறாதது” என தெரிவித்திருந்தார் நிர்வாகி சுதாகர் தெரிவித்தார்.

சரி இனியாவது தலைவர் ரஜினியை சீண்ட மாட்டார் சீமான் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினியைக் குறித்து சீமான் கூறியுள்ளதாவது :

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவரைத் தற்கொலை முடிவுக்கு தள்ளியிருப்பார்கள்.

4 வருடம் சசிகலா சிறையில் இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

NTK leader Seeman controversy speech about Rajinikanth

அழகான ஆண்கள் வசிக்கும் சேலம்..; சிவகார்த்திகேயனை கலாய்த்த சதீஷ்

அழகான ஆண்கள் வசிக்கும் சேலம்..; சிவகார்த்திகேயனை கலாய்த்த சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan sathishஎதிர்நீச்சல், ரெமோ, மிஸ்டர். லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சதீஷ்.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சேலம் நட்ராஜன் உடன் வீடியோ காலில் பேசி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவர்கள் அடிக்கடி ட்விட்டரில் பேசிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் பிரபல தனியார் கல்லூரி அழகான ஆண்கள் வசிக்கும் பகுதி எது என்று நடத்திய கருத்துக்கணிப்பில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் நடிகர் சதீஷ்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்… “இந்த கருத்து கணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதற்கு பின்னர் நடத்தப்பட்டது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சென்னை முதலிடத்தைப் பெறவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி. வணக்கம்” என்று பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் சதீஷ்…, “ரசிக, ரசிகைகள் யாரும் கடையடைப்பிலோ, போராட்டத்திலோ, பேரணியிலோ ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நண்பரது அட்மின் செய்தது என்றும், இனி இவ்வளவு வெளிப்படையாக கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம்” இவ்வாறு நடிகர் சதீஷ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

Sivakarthikeyan and Sathish fun on Loyola polls

More Articles
Follows