மலையாளிகள் மத்தியிலும் 50% மாஸ் காட்டப் போகும் ‘மாஸ்டர்’

Master in Keralaகொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் 2020 மார்ச் முதல் மூடப்பட்டது.

பின்னர் ஊரடங்கில் தளர்வுகளை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 2020 நவம்பர் 10 முதல் தியேட்டர்ஸ் திறக்கப்பட்டன.

இதனால் கேரளாவிலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து 2021 ஜனவரி கடந்த 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதியளித்தது.

ஆனாலும் இதுவரை கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

ஏற்கனவே 10 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மின் கட்டணத்தில் சலுகை, கேளிக்கை வரி ரத்து உள்படப் பல சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சங்கத்தினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கேரளாவில் நாளை ஜனவரி 12 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது.

இரவு 10 மணி காட்சிகள் ரத்து. மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்த நிலையில் கேரளாவிலும் 200க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படம் ரிலீசாகவுள்ளது.

கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிக்கு ரூ 200 வரை சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

Master Kerala Release Confirm From 13th Jan

Overall Rating : Not available

Related News

Latest Post