‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி ‘மார்கழி திங்கள்’.. – தனஞ்செயன்

‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி ‘மார்கழி திங்கள்’.. – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மார்கழி திங்கள்’.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் முதன்மை நாயகனாக பாரதிராஜா நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசியதாவது…

இனிய மாலை வணக்கம். ‘மார்கழி திங்கள்’ டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இப்படத்தில் நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன்.

‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.

இயக்குந‌ர் திரு பேசியதாவது…

மனோஜ் மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக நல்ல படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

மனோஜ் கட்டாயம் இயக்குந‌ராக ஆவார் என்று நம்பினேன், அது தற்போது உண்மையாகி உள்ளது. சுசீந்திரன் மூலம் இது நடந்துள்ளது. பாரதிராஜா அவர்கள் இயக்குந‌ராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜின் திறமை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.

தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பேசியதாவது…

வாழ்த்த வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, பாரதிராஜாவிற்காக தான் அனைவரும் வந்திருக்கிறோம். சுசீந்திரன் சார் முதல் படம் தயாரித்திருக்கிறார். மனோஜ் நிறைய படங்கள் இயக்கி வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்.

Margazhi Thingal will be like Alaigal Oivadhillai says Dhananjayan

இளையராஜா ஒரு முன்மாதிரி.. நிறைய படங்களுக்கு இசையமைக்கனும் – கார்த்தி

இளையராஜா ஒரு முன்மாதிரி.. நிறைய படங்களுக்கு இசையமைக்கனும் – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர்.

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது…

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நடிகர் கார்த்தி பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை.

இதற்கு காரணமான‌ சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக‌ வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்றார்.

ilaiyaraaja is our inspiration says Karthi

விஜய் மகன் ஜேசன் இயக்கத்தில் இணையும் கவின் – அனிருத்

விஜய் மகன் ஜேசன் இயக்கத்தில் இணையும் கவின் – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் மகனும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பேரனுமான ஜேசன் விஜய் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளார்.

இவர் ஏற்கெனவே தன் தந்தை விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலுக்கு தந்தையும் மகனும் இணைந்து ஆடியிருந்தனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் ஃபிலிம் மேக்கிங் பயிற்சி பெற்ற இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை பிரபல நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பார் என்றும் அஜித் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. மேலும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாகவும் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

தற்போது புதிய தகவலாக இந்த படத்தில் கவின் நாயகனாக நடித்த ஜேசன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Anirudh and Kavin join hands with Jason Vijay

மிஷ்கின் – விஜய்சேதுபதி – ஏஆர்.ரஹ்மான் மெகா கூட்டணி.; தயாரிப்பாளர் அவரா.?

மிஷ்கின் – விஜய்சேதுபதி – ஏஆர்.ரஹ்மான் மெகா கூட்டணி.; தயாரிப்பாளர் அவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூலித்து மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது.

குறுகிய காலத்தில் 50 படங்களில் நடித்து விட்டார் விஜய்சேதுபதி. இவரது 50வது படமாக நித்திலன் இயக்கத்தில் மகாராஜா என்ற படம் உருவாகியுள்ளது.

விஜய்சேதுபதி ஏற்கனவே ஹிந்தியில் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்மஸ்’ படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் புதிய பட தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை மிஷ்கின் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தில் இசை விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கின் பங்கேற்று பேசும்போது.. “என்னுடைய இயக்கத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்திருந்தார் விஜய்சேதுபதி அப்போது அவரை நிராகரித்து விட்டேன். இப்போது அவர் பெரும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். விரைவில் அவரை வைத்து படம் இயக்குவேன் என்று மிஷ்கின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் மிஷ்கின் படங்களுக்கு இளையராஜாவை இசை அமைத்து வருகிறார். தற்போது ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்பு கொண்டு உள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Mysskin VIjaysethupathi Rahman in new project

BREAKING தனுஷ் – சிம்பு – விஷால் – அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்ட்.; முழுவிவரம் இதோ..

BREAKING தனுஷ் – சிம்பு – விஷால் – அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்ட்.; முழுவிவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா தயாரிப்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர் நடிகைகளுக்கு அவ்வப்போது ரெட் கார்ட் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.

அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்க வராமல் போனாலும்… அல்லது படத்தின் டப்பிங் பேச வராமல் போனாலும்.. சூட்டிங் நேரத்திற்கு சரியாக வராமல் போனாலும் உள்ளிட்ட பல காரணங்களுக்காக நடிகர் நடிகைகளுக்கு ரெட் கார்ட் போடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்கள் நால்வருக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விவரம் வருமாறு

நேற்று செப்டம்பர் 13 சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு.

சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாது தொடர்பாக விஷாலுக்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளது.

தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷுக்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அதர்வாவுக்கும் ரெட் கார்ட் போடப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள்…

நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் பரபரப்பு குற்றச்சாட்டு.. அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுகிறார் அதர்வா எனவும் புகார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவையும் அதர்வா மதிப்பதில்லை என மதியழகன் புகார்.

படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல் பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் வேதனை..

தனது அப்பா முரளியின் பெயரை வைத்து அதர்வா ஏமாற்றி வருவதாகவும் கூறியுள்ளார் தயாரிப்பாளர் மதியழகன்.

Tamil Producers confirms to issue Red Card for Simbu Dhanush Vishal Atharva

#SilambarasanTR – Michael Rayappan issue.
#Dhanush – Thenandal’s film incompletion & loss.
#Vishal – Mishandling the association’s money.
#Atharva – Mathiazhakan issue.

ரேடியோ எப்எம் சேனலில் ஆர்ஜே-வாக பணியாற்றும் நடிகை ஓவியா

ரேடியோ எப்எம் சேனலில் ஆர்ஜே-வாக பணியாற்றும் நடிகை ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைண்ட் ட்ராமா ப்ரொடெக்ஷன் & ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘சுவிங்கம்’ வெப் சீரியஸ்.

இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரிதுன்..

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சுராஜ், படத்தொகுப்பு அருண்

சுவிங்கம்

இப்படத்தில் கதையின் நாயகியாக ஓவியா நடித்துள்ளார், இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜுவ் ,ஆஷிக், ஐரா, சிரா, ராம்குமார்,TRS மற்றும் லல்லு ஆகியோர் நடித்துள்ளனர்…

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்…

இது முழுக்க முழுக்க மனித உறவுகளை மையமாக உருவாக்கப்பட்ட கதை.

சுவிங்கம்

நாயகி ஓவியா இதில் ரேடியோ மிர்ச்சி எப்எம் சேனலில் ஆர் ஜே வாக பணியாற்றுகிறார்.. இதில் Croses Talk எனும் நிகழ்ச்சியில் சமுதாயம் சார்ந்த கருத்துக்களை காமெடியாக சொல்லி இருப்பார்..

வளர்ப்பு தாயிடம் வளரும் ஓவியா மிக எதார்த்தமாக சாதாரண பெண்மணியாக வாழ்கிறார் ஆனால் அவரைச் சுற்றி அனைவரும் அந்தஸ்துக்காகவும் பணத்திற்காகவுமே வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு இடையேயான வாழ்வியலை நல்ல உணர்வோடு காமெடியாக இப்படத்தில் சொல்லி இருக்கிறோம் என்றார்..
சுவிங்கம்

Actress Oviya as Radio FM stations RJ

More Articles
Follows