சுசீந்திரன் – மனோஜ் – பாரதிராஜா இணையும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ்

சுசீந்திரன் – மனோஜ் – பாரதிராஜா இணையும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

மேற்கண்ட தகவல்களை நம் FILMISTREET தளத்தில் சில தினங்களுக்கு முன்பு பார்த்தோம்.

இந்தப் படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என்று தலைப்பிட்டு டைட்டில் போஸ்டரை வெளியிட்ட நிலையில் இன்று ஏப்ரல் 3 தேதி மாலை 5 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

Dhanush released Bharathi raja’s Margazhi Thingal first look poster

Here is the First look of #MargazhiThingal, a debut directional film by @manojkumarb_76.

Produced by @Dir_Susi’s #VennilaProductions

@offBharathiraja @gvprakash @vinoth_kishan #SamyukthaViswanathan @ArSoorya #KasiDinesh @KabilanVai

.@vasukibhaskar @DuraiKv @onlynikil @decoffl

விடுதலை படக்குழுவுக்கு தங்க நாணயமும் வீடு கட்ட நிலமும் கொடுத்த வெற்றிமாறன்

விடுதலை படக்குழுவுக்கு தங்க நாணயமும் வீடு கட்ட நிலமும் கொடுத்த வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் மார்ச் 31 இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இரண்டு நாட்களில் ரூ.8 கோடி வசூல் செய்துள்ள இப்படம் விரைவில் ரூ.50 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தில் பணிபுரிந்த அனைத்து நபர்களுக்கும் தங்க நாணயத்தை பரிசாக நேற்று வெற்றிமாறன் வழங்கியுள்ளார்.

வெற்றிமாறன் கொடுத்த தங்க நாணயத்தின் புகைப்படத்தை ‘விடுதலை’ படக்குழுவில் உள்ள பி ராஜா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், “இயக்குநர் வெற்றிமாறன் சார், ‘விடுதலை’ டீம் முழுவதற்கும் ஒரு தங்க நாணயத்தை பரிசளித்தார். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.”

மேலும், இப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பே வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran gifts gold coin and Land to crew of ‘Viduthalai’

வெளிநாடுகளில் ஆல் டைம் ரெக்கார்டு பிஸினஸ் செய்த விஜய்யின் லியோ

வெளிநாடுகளில் ஆல் டைம் ரெக்கார்டு பிஸினஸ் செய்த விஜய்யின் லியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு பெரிய பிராண்டுகளான விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து இருப்பதால் , படம் மிகப்பெரிய வியாபாரத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் திரையரங்குகள் அல்லாத உரிமைகள் ஏற்கனவே அதிக விலைக்கு விற்கப்பட்டுவிட்டன, இப்போது திரையரங்குகளுக்கான உரிமையும் பெரிய அளவில் வியாபாரத்தை உருவாக்கியுள்ளன.

மேலும் வெளிநாடு தியேட்டர்களுக்கான உரிமை 70 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவுக்கு இது ஒரு ஆல் டைம் ரெக்கார்ட் பிசினஸாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

All time record business for Vijay’s Leo in Overseas

இன்ஸ்டாகிராமில் இணைந்த விஜய்.; ஒரே நாளில் ‘தளபதி’யின் தரமான சாதனை

இன்ஸ்டாகிராமில் இணைந்த விஜய்.; ஒரே நாளில் ‘தளபதி’யின் தரமான சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனால் இன்று நினைத்த நேரத்தில் நினைத்த நொடியில் நமது விருப்பமான சினிமா நட்சத்திரங்களை அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்தார் என்ற செய்தியை பார்த்தோம்.

அவரின் முதல் பதிவில்.. நண்பா நண்பிஸ் என பதிவிட்டிருந்தார். மேலும் ‘லியோ’ பட தோற்றத்தையும் பகிர்ந்து இருந்தார்.

அவர் இணைந்த
2 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் பாலோயர்களை பெற்றார்.

தற்போது வரை 4.4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.

மேலும் ‘ஹலோ நண்பாஸ் அன்ட் நம்பிஸ்’ 105 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸை பெற்றது. தற்போது அந்தப் பதிவு 4 மில்லியன் லைக்குகளை நெருங்கியுள்ளது.

New instagram record for actor vijay

தனது குழந்தைகளின் முழு தமிழ் பெயரை வெளியிட்ட நயன்தாரா

தனது குழந்தைகளின் முழு தமிழ் பெயரை வெளியிட்ட நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணம் ஆன நான்கு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 9 ஆம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்ததாக அறிவித்தனர்.

விக்கி அவர்களின் பெயர்களை உயிர் மற்றும் உலகம் என சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

தற்போது குழந்தைகளின் முழுப் பெயர்களின் விவரம் தெரிய வந்துள்ளது.

உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்விக் என் சிவன் என தங்கள் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளனர்.

Nayanthara and Vignesh Shivan’s twin sons full names revealed

மீண்டும் ‘சுல்தான்’ கூட்டணி.; ராஷ்மிகாவின் ‘ரெயின்போ’ கனவை நிறைவேற்றும் ட்ரீம் வாரியர்ஸ்

மீண்டும் ‘சுல்தான்’ கூட்டணி.; ராஷ்மிகாவின் ‘ரெயின்போ’ கனவை நிறைவேற்றும் ட்ரீம் வாரியர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது.

தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தை அறிவித்துள்ளது.

சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார்.

“வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக ‘ரெயின்போ’ இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், ‘ரெயின்போ’வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ். ஆர். பிரபு

படத்தின் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் பேசுகையில்..

“இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக ‘ரெயின்போ’ இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களன் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

நடிகை ரஷ்மிகா பேசுகையில்…

“ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும்.

அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.

இன்று பூஜையுடன் ‘ரெயின்போ’ படத்தின் தயாரிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.

கூடுதல் தகவல்..

பாக்கியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ராஷ்மிகா.

இந்த படத்தை தயாரித்திருந்தது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவன படத்தில் ராஸ்மிகா நடிப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

DREAM WARRIOR ANNOUNCES ITS 2ND TELUGU Movie FEATURING RASHMIKA

Today marks the start of a colourful journey. Join us as we bring the world of #Rainbow to life! 🌟

@iamRashmika @ActorDevMohan @bhaskaran_dop @justin_tunes @thamizh_editor #Banglan @sivadigitalart @Shantharuban87 @prabhu_sr @DreamWarriorpic @johnsoncinepro

#RainbowFilm https://t.co/E3KOZD9gt8

More Articles
Follows