இந்தியன் 2 போன்று மற்றொரு சம்பவம். லைட் மேன்கள் மீது விழுந்த இடி

இந்தியன் 2 போன்று மற்றொரு சம்பவம். லைட் மேன்கள் மீது விழுந்த இடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக வரும் புதிய திரைப்படத்தின் வாயிலாக மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இப்படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்து வருகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியை சுற்றியை பகுதிகளில் நடந்து வருகிறது.

கணக்கன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று (மே 30) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மக்காச் சோளக் காட்டின் நடுவே லைட்மேன்களுக்கான கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது சூறை காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது.

இந்நிலையில், அந்த படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட லைட் செட் மீது இடி இடித்தது. இதன் காரணமாக லைட் செட்கள் கீழே விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட் மேன்கள் உயிர் தப்பினர்.

மேலும், இது போன்ற சம்பவம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

lightening attack in margazhi thingal shooting spot

29 வயது பெண்ணை 4வது திருமணம் செய்த 83 வயது நடிகர்

29 வயது பெண்ணை 4வது திருமணம் செய்த 83 வயது நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஹாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆல்ஃபிரடோ ஜேம்ஸ் அல் பசினோ.

1969 ஆம் ஆண்டு வெளியான ‘மீ நடாலியா’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டின் தடம் பதித்த அல் பசீனோ உலகளவில் நடிப்பின் அசுரனாக வலம் வந்தார்.

இவர் 1972 ஆம் ஆண்டு நடித்து வெளியான ‘தி காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்த படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக அவர் நடித்திருந்தார்.

50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களிலும், 7 ஆவணப்படங்களிலும், 5 டிவி சீரியல்களில் அல் பசீனோ நடித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஜன் டர்னட் என்பவரை காதலித்து அல் பசீனோ திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது.

இதன்பின்னர் 8 ஆண்டுகள் காலம் கழித்து 1997 ஆம் ஆண்டு பிவர்லி டி ஏஞ்சலோ எனும் ஹாலிவுட் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் இந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அதை தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு லூசிலா போலக் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அல் பசீனோ 2018 ஆம் ஆண்டு 3வது மனைவியையும் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், தற்போது 29 வயது ஹாலிவுட் நடிகையான நூர் அல்ஃபலாவுடன் இல்லற வாழ்க்கை நடத்தி வரும் அல் பசீனோ தற்போது அப்பாவாக போகிறார்.

இன்னும் 2 மாதங்களில் நூர் அல்ஃபலா குழந்தை பெற்றெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அல் பசீனோவின் முதல் மனைவிக்கு பிறகு குழந்தைக்கு தற்போது 33 வயதாகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு உணவகம் ஒன்றில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததன் மூலம் இவர்களின் மண வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது.

அல் பசினோவும் நூர் அல்ஃபல்லோவும் கொரோனா தொற்று பரவிய நாட்களில் இருந்தே பழகி வந்துள்ளனர். அதேசமயம் அல்ஃபல்லோ இதுவரை அதிக வயதுடைய நபர்களுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.

நூர் அல்ஃபலா பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் வசதியானவர்களுடன் தான் இதுவரை டேட் செய்துள்ளார். அதனால் தான் வயதை பொருட்படுத்தாமல் தன் அப்பாவை விட அதிக வயதுள்ள அல் பசினோவுடன் அல்ஃபல்லோ இல்வாழ்க்கை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடிகர் அல் பசீனோ தற்போது ஜானி டெப் இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Al Pacino’s 29 year old girlfriend Noor Alfallah gets prengnent

மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட JK ரித்தீஷின் மனைவி

மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட JK ரித்தீஷின் மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ்.

இவர் இராமநாதபுரத்தில் 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் எம்பியாக இருந்தவர்.

பிறகு திமுக-வில் இருந்து விலகி 2014ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார்.

46 வயதில் ஜே.கே. ரித்தீஷ் மரணமடைந்தது திரையுலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி 41 வயதாகிறது.

ஜோதீஸ்வரி காரைக்குடியில் நகைத் தொழில் செய்துவரும் திருச்செல்வம் என்பவரிடம் 60 லட்ச ரூபாய்க்கு தங்க, வெள்ளி, வைர நகைகளை வாங்கி இருக்கிறார்.

அதற்கு 20 லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார். காசோலையில் பணம் இல்லாததால் திருப்பி வந்துள்ளது.

இதனால் திருச்செல்வம் நீதி மன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதீஸ்வரிக்கு 60 லட்ச ரூபாய் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதிப்பதாக நீதிபதி உத்தரவு விட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பட்டதால் ஜோதீஸ்வரி தரப்பில் பெயில் ஜாமின் போடப்பட்டது. அதை நீதிபதி ஒத்திவைப்பததாக அறிவிக்கப்பட்டார்.

இதனால், ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டார்.

JK Ritheesh’s wife Jotheeswari was jailed

முதன்முறையாக சிலம்பரசனுடன் டூயட் பாடப்போகும் கீர்த்தி சுரேஷ்

முதன்முறையாக சிலம்பரசனுடன் டூயட் பாடப்போகும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் பிசியாக இருந்து வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ஒரு படம்.. அதன் பின்னர் சிலம்பரசன் வைத்து ஒரு படம்.. சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் கமல்.

இந்த நிலையில் சிலம்பரசன் நடிக்கும் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

Keerthy Suresh to romance with Silambarasan for the first time

‘பிச்சைக்காரன் 2’ மெகா ஹிட்.; விஜய் ஆண்டனி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்.!?

‘பிச்சைக்காரன் 2’ மெகா ஹிட்.; விஜய் ஆண்டனி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ரசனை என்பது நிச்சயம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது. உதாரணமாக தமிழில் மிகப் பெரிய ஹிட்டான படம் தெலுங்கில் தோல்வியை தழுவி உள்ளது. தெலுங்கில் தோல்வியை தழுவிய படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு சில படங்கள் மட்டுமே எல்லா மொழியிலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றிப் படங்களாக அமைகின்றன.

சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் இதற்கு நல்ல உதாரணம். தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பது நாம் தெரிந்து ஒன்றுதான்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை விரைவில் தான் படம் இயக்கினால் அதில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijay Antony wants to direct Super Star for his next

இந்தியர்கள் கசாப்பு கடை கோழிகள்.; கடுப்பான ‘காலா’ வில்லன் நானா படேகர்

இந்தியர்கள் கசாப்பு கடை கோழிகள்.; கடுப்பான ‘காலா’ வில்லன் நானா படேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நானா பட்டேகர். இவர் தமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ மற்றும் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனை மீது பாலியல் தொல்லை குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

இந்திய மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் கோழிகளைப் போன்றவர்கள். மற்ற கோழிகள் அறுக்கப்படும் பொழுது அதைப் பற்றி கவலைப்படாமல் கசாப்பு கடைக்காரன் கொடுக்கும் தீவனத்தை சந்தோசமாக தின்று கொண்டிருக்கும்.

அதன் முறை வரும்பொழுது கசாப்பு கடைக்காரன் சுடுதண்ணீரில் தூக்கி போடும் போது மட்டுமே கதறி துடிக்கும்.

முதலில் இஸ்லாமியர்கள், பின்னர் விவசாயிகள், இப்பொழுது மல்யுத்த வீராங்கனைகள். மக்கள் இதைப் பற்றி எதையுமே கவலை கொள்ளாமல் தீவனத்தை தின்று கொண்டிருக்கிறோம். நமது முறையும் வரும்…

என நானா படேகர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

சில ஆண்டுகளுக்கு முன்…

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் விஷாலுடன் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர், ’ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மீ டூ ME TOO வில் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kaala villain Nana Patekar talks about protests

More Articles
Follows