தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்க பறந்து வந்த விஜய் & தனுஷ் பட நாயகி

தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்க பறந்து வந்த விஜய் & தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம் வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக படத்தின் கதாநாயகியாக நடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் இன்று சென்னை வந்துள்ளார்.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் மற்றும் மாறன் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்தவர் மாளவிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan reaches Chennai for ‘Thangalaan’ shooting

நடிகர் டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்…

நடிகர் டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் டி.பி.கஜேந்திரன் பிப்ரவரி 5-ம் தேதி காலமானார்.

டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடிகரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் கமல்ஹாசன் மறைந்த நடிகருக்கு இரங்கல் தெரிவித்தார்.

கமல் தனது ட்விட்டரில், “எந்த விஷயத்தையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர் இயக்குநர் திரு டி.பி.கஜேந்திரன். அவருக்கான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

மேலும், ‘பம்மல் கே சமந்தம்’ படத்தில் கமல்ஹாசனுடன் டி.பி.கஜேந்திரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal mourns the demise of TP Gajendran

‘சூர்யா 42’ படத்தில் மிரள வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள்

‘சூர்யா 42’ படத்தில் மிரள வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ‘சூர்யா 42’ படத்திற்காக ஒரு பெரிய விமான செட் கட்டப்பட்டுள்ளது, அதில் ஒரு பெரிய ஸ்டண்ட் காட்சி பதிவு செய்யப்பட உள்ளது . தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வகையிலான ஹை ஆக்டான்ஸ் ஆக்ஷன் சீக்வென்ஸில் காட்சிகளும் உள்ளன.

‘சூர்யா 42’ படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர், சில நாட்களுக்கு முன்பு ஜிம்மில் சூர்யாவுடன் சுமார் 50 ஸ்டண்ட் கலைஞர்கள் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினார் அன்பான சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்பதை மேலே உள்ள தகவல் தெளிவாகக் காட்டுகிறது.

Suriya’s high altitude stunt sequence in ‘Suriya 42’

நடிகர் கருணாஸ் மகளுக்கு திருமணம். பிரபலங்கள் வாழ்த்து ..

நடிகர் கருணாஸ் மகளுக்கு திருமணம். பிரபலங்கள் வாழ்த்து ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ், பாடகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான கிரேஸ் கருணாஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் கென் கருணாஸும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் நடித்து அறிமுகமானவர்.

கிரேஸ் மற்றும் கருணாஸின் மூத்த மகள் டயானா மருத்துவராக உள்ளார், மேலும் அவர் சமீபத்தில் பெங்களூருவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த இளம் ஜோடிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Karunas daughter gets married

JUST IN இயக்குனர் ரஞ்சித்தின் 10வது படைப்பு பற்றிய அறிவிப்பு; இயக்குனர் யார்?

JUST IN இயக்குனர் ரஞ்சித்தின் 10வது படைப்பு பற்றிய அறிவிப்பு; இயக்குனர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூகம் ஜாதி சார்ந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் பா ரஞ்சித்.

ஒரு பக்கம் ‘கபாலி’ ‘காலா’ என ரஜினியின் பிரம்மாண்ட படைப்புகளை இயக்குனராக கொடுத்தார்.

தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை இயக்குவார் என அவரே தெரிவித்து இருந்தார்.

மறுபக்கம் வித்தியாசமான படைப்புகளை ஒரு தயாரிப்பாளராக உருவாக்கி வருகிறார்.

இவரது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை, குதிரைவால், பொம்மை நாயகி என தரமான படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

நாளை பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு தங்களது புதிய படைப்பின் தலைப்பு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்ற படத்தை இயக்கிய ஆதிரை அதியன் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பா ரஞ்சித்

Ranjiths direction 10th movie News updates

உருவ கேலி செய்தவர்களே சான்ஸ் கேட்டனர்.; ‘லக்கி ஸ்டாரான’ டி.பி.கஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு

உருவ கேலி செய்தவர்களே சான்ஸ் கேட்டனர்.; ‘லக்கி ஸ்டாரான’ டி.பி.கஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் உதவி இயக்குனராக தன் பயணத்தை தொடங்கியவர் டிபி கஜேந்திரன். மறைந்த பிரபல இயக்குனர்கள் கே பாலச்சந்தர் விசு ராமநாராயணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இவர்.

பல வெற்றி படங்களை இயக்கிய இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார்.

அவரைப் பற்றி அவரே எழுதிய வரலாறை பார்ப்போம்..

*டி.பி.கஜேந்திரன் எனும் நான்…*

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், எனது படங்கள் பற்றி நீங்கள் படிக்கும் முன், என்னைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்வது நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

எனது வாழ்க்கை புத்தகம் போடுகிற அளவிற்கோ, சுயசரிதை எழுதுகிற அளவிற்கோ பெரிதல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைதான் என்னுடையதும். உங்கள் வசதிக்காகச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

”பூர்வீகம் தூத்துக்குடி. பிறந்தது, சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8 -ம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில்தான் படித்தேன். படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டூடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிஞ்சேன். அப்பாவுக்கும் சினிமா கம்பெனியில வேலைங்றதால ப்ரிவியூ ஷோக்களைப் பார்த்துவிட்டு உதார் விட்டுக் கொண்டு திரிந்தேன்.

மகன் மெட்ராசுல இருந்தா படிக்க மாட்டான்னு, அப்பா என்னைக் காரைக்குடி பக்கம் உள்ள கண்டனூர் புதுவயலுக்கு அனுப்பி வச்சாரு.

அங்க என்னோட சித்தப்பா வருவாய் அதிகாரியா இருந்தாரு. அவரோட பிள்ளைங்க நல்லா படிப்பாங்க. அவங்கக்கூடப் படிச்சா நல்லா படிப்பேன்னு என்னைய அங்க அனுப்பி வச்சாரு.

பட்டணத்துப் பையன் பட்டிக்காட்டுக்குப் போறதான்னு ரொம்ப வீம்பு பண்ணிப் பார்த்தேன் ஒண்ணும் நடக்கல… வலுக்கட்டாயமாக டி.சியைக்கூட வாங்கம அனுப்பி வச்சாங்க.

புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில 9 – ம் வகுப்புல சேர்ந்தேன். சென்னைப் படிப்பு வேற, கிராமத்துப் படிப்பு வேற.

சென்னை ஆவிச்சி பள்ளியில கடைசிப் பெஞ்சில் இருந்த நான் புதுவயல் பள்ளியில முதல் பெஞ்சுக்கு வந்தேன். அட, இதுகூட நல்லாத்தான் இருக்குன்னு அந்தச் சூழ்நிலைய ஏத்துக்கிட்டேன்.

சென்னையிலேருந்து சென்றதால் உள்ளூரில் ஒரு மைனருக்கான மதிப்பு கிடைச்சுது. அதிலும் நான் விதவிதமா சட்டை போடுவேன். அதுவே என்னை வில்லேஜ் ஹீரோவாக்கியது.

அதுவே பக்கத்து வீட்டு பெண்ணுடன் காதலையும் உருவாக்கியது. கடைசியில அந்தப் பொண்ணு என் காதலை கடாசிட்டு கணக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியாரோட ஒடிப்போனது தனிக்கதை.

எனக்குள் கலை தாகத்தை விதைச்சதும் இந்த ஊர்தான். அப்போ பள்ளியில ‘சாணக்கியன்’ நாடகம் போட ஏற்பாடு பண்ணிக்கிட்டிருந்தாங்க. நான்தான் சாணக்கியன் வேடம் போடுறதா முடிவு. இதுக்காக 40 பக்க வசனத்தை உருபோட்டுப் பயிற்சி எடுத்திருந்தேன்.

நாடகத்துக்கு ஒத்திகையெல்லாம் நடந்து முடிஞ்சிருந்த நேரம். அப்போ ஒரு மாணவியைப் பார்த்து கிண்டல் பண்ணினது பெரிய பிரச்னையாயிடுச்சு. அந்த மாணவி பேரு சின்னம்மா. நான் “சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா உன் சிருங்காரம் மின்னுவதென்ன சின்னம்மா”ன்னு பாடப் போக அது அழுதுகிட்டே ஊரைக் கூட்ட ஸ்கூல் என்னைச் சஸ்பெண்ட் பண்ணிடுச்சு.

பசங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க. ‘டேய் ஒரே நாள்ல சஸ்பெண்ட் உத்தரவ உடைச்சுக் காட்டுறேன்’னு சவால்விட்டேன். காரணம், அடுத்த நாள் ஸ்கூல்ல ‘சாணக்கியன்’ நாடகம். நான் இல்லாம நாடகம் போட முடியாது. காரணம், சாணக்கியனே நான்தான். ஒரே நாள்ல ஆளை மாத்தி 40 பக்க வசனத்தை யாரையும் பேச வைக்க முடியாது.

நினைச்ச மாதிரி வாத்தியார் பதறியடிச்சு ஓடிவந்தார். ‘சஸ்பென்ஸ் ஆர்டரை கேன்சல் பண்ணுங்க, வந்து நடிச்சு தர்றேன்’னு சொன்னேன். அவரும் செய்தார். ஒரு கலைக்கும், கலைஞனுக்குமான மதிப்பு அப்போதான் தெரிஞ்சுது. ஆனாலும் சித்தப்பா இனி இவன் இங்க இருந்தான்னா நம்ம பேரையும் கெடுத்து நம்ம பிள்ளைங்க படிப்பையும் கெடுத்துடுவான்னு முடிவுபண்ணி சென்னைக்குப் பேக் பண்ணினார். மீண்டும் அதே ஆவிச்சி ஸ்கூல், பழைய ஃபிரண்டுகள் என்று பயணம் தொடர்ந்தது. சினிமாவுக்கான தேடுதலும் தொடர்ந்தது.

1979 – ஆண்டில் திருமணம் நடந்துச்சு. அதே ஆண்டு, அதே மாதம் சினிமாவில் காலடி எடுத்து வச்சேன். ‘மழலைப் பட்டாளம்’ படம் கே.பாலச்சந்தர் தயாரிப்பு, லட்சுமி இயக்கினார். அந்தப் படத்தில் வேலை செய்’னு பாலச்சந்தர் சார் அனுப்பி வச்சார். அதற்குப் பிறகு ‘தில்லு முல்லு’, ‘தண்ணீர் தண்ணீர்’ படங்கள்ல அவரோட வேலை செஞ்சேன்.

சினிமா கத்துக்கிட்டதும், வாழ்க்கையோட சில நெறிமுறைகளைக் கத்துக்கிட்டதும் அவர்கிட்டதான். கே.பி சாருக்குக் கோபம் வந்தால் முதுகில் ‘முண்டம் முண்டம்’ என்று சொல்லிக்கொண்டே அடிப்பார். சந்தோஷம் வந்தாலும், முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே பாராட்டுவார்.

அவர் கையால் குட்டுப்பட்டவன் என்று நிறையப் பேர் சொல்வார்கள். ஆனால், நிஜத்தில் குட்டுப்பட்டவன் நான்தான். காரணம் நான் உயரம் குறைவு என்பதால், அவரது கைவாகு என்னைக் குட்டத்தான் வரும். சந்தோஷம், கோபம் இரண்டுக்கும் குட்டுவார்.

கோபமாகக் குட்டும்போது வலிக்கும் அதுதான் வித்தியாசம். இன்னிக்கு நாம பார்க்குற ரஜினி ஸ்டைல் என்பது உண்மையில் பாலச்சந்தரின் ஸ்டைல்தான். அவரது ஷூட்டிங் பார்த்தாலே சினிமா பார்த்த அனுபவம் கிடைக்கும்.

‘தில்லு முல்லு’ பட எடிட்டிங் நடந்துக்கிட்டிருந்துச்சு. நிறைய காட்சிகளைக் குறைக்கவேண்டி வந்தது. எப்போதும் கே.பிசார் காட்சிகளைக் குழந்தை மாதிரி நினைப்பார். கஷ்டப்பட்டு, செலவு பண்ணி எடுத்த காட்சிகளை நீக்குவது அவருக்குக் கஷ்டமான காரியம். அதானால்தான் திட்டமிட்டுப் படம் எடுப்பார்.

‘தில்லு முல்லு’வில் இந்தெந்த காட்சிகளை இவ்வளவு நீளம் குறைத்துக் கொள் என்று என்னிடம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

நானும் எடிட்டரும் உட்கார்ந்து எடிட் செய்ததில் நிறைய குறைந்து விட்டது. இப்போது சேர்க்க வேண்டும். அவரிடம் சொல்ல பயம். இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். அவருக்கு ரொம்பச் சந்தோஷம் “டேய் காட்சியைக் கூட்டத்தானடா சொல்றே” என்று சந்தோஷமாகச் சொல்லி அவரே கூட்டினார். இப்படி அவருக்குள் ஒரு குழந்தை இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

‘தண்ணீர் தண்ணீர்’ படப்பிடிப்பின் போது ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டியிருந்ததது. அந்தப் பாடலின் ஒலி நாடா என்னிடம் இருந்தது. அது நான் குளிக்கப்போன இடத்தில் தண்ணீரில் விழுந்து விட்டது. இதை டைரக்டரிடம் சொன்னால் சீட்டை கிழித்து விடுவார்.

சென்னையில் இருந்து வாங்கி வரவும் நேரமில்லை. அதனால் நாமாகவே ஓடிவிடுவோம் என்று சென்னைக்குக் கிளம்பி விட்டேன். கம்பெனி வண்டியில் சென்றால் தெரிந்து விடும் என்று நடந்தே கிளம்பினேன்.

நான் சென்று கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு முடிந்து இயக்குனர் காரில் வந்து கொண்டிருந்தார். நான் நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டு காரில் ஏற்றி விஷயம் கேட்டார். சொன்னேன். அவரும் சிரித்தபடி “இது பெரிய விஷயமா அந்தக் காட்சியை எடுத்துவிட்டேன். பேசாமல் வா” என்று கூலாகச் சொன்னார்.

மறுநாள் நண்பர்களிடம் விசாரித்தபோது ஒலிநாடாவுக்குப் பதிலாக அவரே அந்தப் பாடல் வரிகளைத் தாளத்தோடு பாடி படமாக்கியதாகச் சொன்னார்கள். அப்போதுதான் ஒரு உயர்ந்த கலைஞனைத் தரிசித்தேன்.

பாலச்சந்தர் சாரின் படங்களில் பணியாற்றியபோது விசுசாரின் அறிமுகம் கிடைத்தது.

அவரிடமும் சினிமா கற்றுக் கொண்டேன். ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்படப் பல படங்களில் அவருடன் பணியாற்றினேன். அவர்மூலம்தான் முதல் படமான ‘லக்கி ஸ்டார்’ இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதன் பிறகு ‘வீடு, மனைவி, மக்கள்’, ‘எங்க ஊரு காவக்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’, ‘தாயா தாரமா’, ‘நல்ல காலம் பொறந்தாச்சு’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘கொஞ்சும் கிளி’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘சீனா தானா’, ‘மகனே மறுமகனே’ படங்களை இயக்கினேன். எல்லாமே வெற்றிப்படங்கள், குறைந்த பட்சம் தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படங்கள்.

எனது படங்கள் பெரிய பொழுதுபோக்கான ஜனரஞ்சகப் படங்களும் இல்லை. பெரிய கலைப் படைப்புகளும் இல்லை. நடுத்தர மக்களின் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்லி அதற்கு எளிய தீர்வையும் சொல்பவை.

அதையே எனது பாணியாகவும் வைத்துக் கொண்டேன். எனது உருவமும், பேச்சும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் விட்டேன்.

‘பாரதி’ படத்தில் ‘குவளை கண்ணன்’ கேரக்டரில் நடித்தது என் வாழ்வில் கிடைத்த பெரும்பாக்கியம். நிஜமான ‘குவளை கண்ணன்’ குடும்பத்தார் என்னைச் சந்தித்து, அவரைப் பார்த்தது போல இருந்தது என்று கண்ணீர் விட்டதைத்தான் எனக்கான விருதாக நினைக்கிறேன்.

சினிமாவில் நான் பெரிதாக எதையும் சாதித்து விட்டதாகக் கருதவில்லை. என் உயரத்துக்கும், திறமைக்கும் என்ன முடியுமோ அதைச் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில், என் உருவத்தைப் பார்த்து கிண்டல் செய்த நடிகர், நடிகைகள் பின்னாளில் என்னிடமே வாய்ப்பு கேட்டு நின்றதைச் சந்தித்திருக்கிறேன்.

புது இயக்குனர்கள், புதுத் தயாரிப்பாளர்கள் யார் வந்து அழைத்தாலும் நடித்துக் கொடுக்கிறேன். பணம் போட முன்வந்தால், படம் இயக்கி கொடுக்கிறேன். என்னால் இழந்தவர்கள் யாரும் இல்லை. நான் இழந்தது ஏராளம்.

நட்புக்காக, நண்பனுக்காக, பழக்கத்துக்காக இழந்திருக்கிறேன். இதற்காக யாரையும் குற்றம் சொல்லவில்லை. சினிமா அப்படித்தான். அது எனக்குப் புரிந்திருப்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எனது சினிமா பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

என்னைப் பெற்றவர்கள், வளர்த்த டி.பி.முத்துலட்சுமி அம்மாள், குருவாக இருந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சார், கற்றுக் கொடுத்த விசு சார், வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், உடன் பணியாற்றிய கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், என்னை இயக்கிய இயக்குனர்கள், எனக்கு உறுதுணையாக இருந்து வரும் குடும்பத்தினர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

அன்புடன்
டி.பி.கஜேந்திரன்.
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்.

டிபி கஜேந்திரன்

Actor Director Late TP Gajendran life history

More Articles
Follows