தென்னிந்தியாவின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி?

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்திய தகவலின் படி விஜய் சேதுபதி தனது முதல் தென்னிந்திய வெப் தொடருக்கு தயாராகிவிட்டார்.

“காக்கா முட்டை” மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த தென்னிந்திய வெப் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்க முன் வந்துள்ளது.

இது தென்னிந்தியாவின் பிரம்மாண்ட வெப் சீரிஸ் என்று கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி இதற்கு முன் மணிகண்டனுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழுவில் இணைந்த பிரபலம்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழுவில் இணைந்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாவீரன்’ படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக யானிக் பென்னை இப்போது தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது சமீபத்திய ஹாட் நியூஸ்.

யானிக் பென்னை குழுவில் சேர்த்ததை உறுதிப்படுத்தும் வகையில், ‘மாவீரன்’ படத்தொகுப்பில் இருந்து அவர் வீடியோவை சமூக ஊடகப் பக்கங்களில் படக்குழு பகிர்ந்துள்ளது.

‘புலி முருகன்’, ‘வெந்து தனித்து காடு’, ‘யசோதா’ ஆகிய படங்களில் பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் யானிக் பென்.

‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஜவான்’ படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

விஜய்யின் வாரிசு சூட்டிங் நிறைவு பெற்றதா ?

விஜய்யின் வாரிசு சூட்டிங் நிறைவு பெற்றதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, படக்குழு படத்தை முடித்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து நெருங்கிய ஆதாரம் வேறு சொல்கிறது.

“பாடல் படப்பிடிப்பை முடித்த உடனேயே, படத்தின் அதிரடியான கிளைமாக்ஸை படமாக்க விஜய் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் ஹைதராபாத் செல்வதாகவும் இது 10 நாள் படப்பிடிப்பு என்றும் சொல்ல படுகிறது.

க்ளைமாக்ஸ் முழுவதும் ஆக்‌ஷன் எமோஷன் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல் ‘கனெக்ட்’.; வரிசை கட்டி நிற்கும் படங்கள் இத்தனையா.?

நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல் ‘கனெக்ட்’.; வரிசை கட்டி நிற்கும் படங்கள் இத்தனையா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை நவம்பர் 18 தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் நயன்தாரா.

இவர் தற்போது நடித்துள்ள படம் ‘கனெக்ட்’.

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

இதில் வினய், சத்யராஜ், அனுபம்கெர் ஆகியோர் நடித்துள்ளனர். ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதன் டீசர் நாளை நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ல் வெளியாகிறது.

அடுத்த படம்…

‘நேரம் & ‘பிரேமம் ஆகிய படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இவை இரண்டிலும் மலையாளம் & தமிழ் மொழிகள் கலந்தே காட்சிகள் இருக்கும்.

இவரது இயக்கத்தில், பிரித்விராஜ் & நயன்தாரா இணைந்துள்ள படம் ‘கோல்டு’. படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த டிசம்பர் மாதம் 2ம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும்…

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

மேலும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் நயன்தாரா .

இந்த படத்திற்கு ‘இறைவன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இவையில்லாமல் ஓரிரு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா

மேலும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75-வது படமும் உருவாகி வருகிறது.

திருமணத்திற்குப் பிறகும் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara birthday special Connect Teaser & Gold Update

இந்தியாவில் இதுபோன்ற தொடர் இதான் முதன்முறை.. – விஜய்

இந்தியாவில் இதுபோன்ற தொடர் இதான் முதன்முறை.. – விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் விஜய் பேசியதாவது… .

“பாலா சார் எனது மானசீக குரு அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த தொடருக்கு மூன்று ஹீரோ பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள்.

அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இது தான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி..

Director vijay speech at 5678 press meet

5678 ஸ்டெப்..; இதை புரிந்து கொள்ளவே ரொம்ப காலமானது – ஜீவா

5678 ஸ்டெப்..; இதை புரிந்து கொள்ளவே ரொம்ப காலமானது – ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியதாவது….

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது.

இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது.

விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

jiiva speech at 5678 press meet

More Articles
Follows