முதன்முறையாக சந்தானம் படத்தின் 2ஆம் பாக படம்

actor santhanamலொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம்

‘தில்லுக்கு துட்டு’.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதன் முதல்பாகத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருந்தது.

ஆனால் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராம் பாலா சொந்தமாக தயாரிக்கவிருக்கிறாராம்.

ராம்பாலா இப்போது ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ‘டாவு’ படத்தை இயக்குகிறார்.

சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு விரைவில் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தில் இணைவார்கள் என தெரிய வந்துள்ளது.

நாயகனாக நடிக்க தொடங்கிய பின் ‘தில்லுக்கு துட்டு’ தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக…
...Read More
சந்தானம் நாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’…
...Read More
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'புரூஸ் லீ' மற்றும்…
...Read More

Latest Post