விஜய் பிறந்தநாளுடன் கனெக்ட்டாகும் சிம்புவின் ‘மாநாடு’ பர்ஸ்ட் சிங்கிள்

Vijay Simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இதில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரேம்ஜி, எஸ்ஏசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் ரம்ஜான் விருந்தாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்தார்.

எனவே அப்பாடல் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

ஆனாலும் சிம்பு ரசிகர்கள் மாநாடு பட அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில், மாநாடு பட பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டு இருந்தார்.

மிக விரைவில் ஒரு பாடல் வெளியிடப்படும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வருகிற ஜூன் 21ஆம் தேதி அந்த பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாநாடு இசை உரிமையை இப்பட இசையமைப்பாளர் யுவனே வாங்கியுள்ளார்.

இதற்கு அடுத்த நாள் ஜூன் 22 நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu first single will be released on Jun 21st

Overall Rating : Not available

Latest Post