தமிழை ஆண்டாள் சர்ச்சை; மன்னிப்பு கேட்டார் கவிஞர் வைரமுத்து

தமிழை ஆண்டாள் சர்ச்சை; மன்னிப்பு கேட்டார் கவிஞர் வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vairamuthu apologises for remarks on Andalதினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குரியதானது.

அதாவது… ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்குக்கு வந்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

இதனையத்து பாஜக.வைச் சார்ந்த எச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். (வைரமுத்து ஒரு வேசி மகன் என்ற தோனியில் பேசியிருந்தார்)

மேலும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று.

ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று.

அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Lyricist Vairamuthu apologises for remarks on Andal

குறைந்த காலத்தில் 4 படங்களுக்கு ஓகே சொன்ன சூர்யா

குறைந்த காலத்தில் 4 படங்களுக்கு ஓகே சொன்ன சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaபெரும்பாலும் டாப் ஹீரோக்கள் ஒரு படத்தை முடித்துவிட்டே அடுத்த படத்தை ஒப்புக் கொள்கின்றனர்.

இதுநாள் வரை நடிகர் சூர்யாவும் இந்த பாணியை பின்பற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தானா சேர்ந்த கூட்டம் படம் முடிவடைவதற்கு முன்பே செல்வராகவன் படத்தை ஒப்புக் கொண்டார்.

இது அவரது 36வது படமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யாவின் 37வது படத்தை கே.வி ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனையடுத்து சூர்யா 38 படத்தை 24 பட இயக்குனர் விக்ரம்குமார் இயக்கவுள்ளதாகவும், சூர்யா 39 படத்தை ஹரி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை வாங்கியது சன் டிவி

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை வாங்கியது சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ONNPSஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.

இப்படத்தில் காயத்ரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருடன் நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் நிகரிகாவும் நாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

’7C’s Entertainement மற்றும் Amme Narayana Entertainement நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை இந்த ஜனவரி மாதமே வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.

லாரன்ஸை தொடர்ந்து மீண்டும் ஜீவாவுடன் இணையும் சாய்ரமணி

லாரன்ஸை தொடர்ந்து மீண்டும் ஜீவாவுடன் இணையும் சாய்ரமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jiiva sai ramaniநடிகர் ஜீவா இரு வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கியவர் சாய்ரமணி.

இப்படம் கடந்த 2011ஆம் ஆண்டில் வெளியானது.

இதனையடுத்து 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில் மீண்டும் தன் முதல் பட நாயகன் ஜீவா உடன் இணையவிருக்கிறாராம் சாய்ரமணி.

இதை சம்பந்தபட்ட கலைஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர் ரஜினிக்காக ஒரு கதையை தயார் செய்து காத்திருப்பதாக கடந்தாண்டு கூறியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Director Sai Ramani again teams up with Jiiva for new project

என்னிடம் அஜித் எதுவுமே கேட்கமாட்டார்..: கே.எஸ்.ரவிக்குமார்

என்னிடம் அஜித் எதுவுமே கேட்கமாட்டார்..: கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal Ajithரஜினி, கமல், அஜித் ஆகியோருக்கு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.

இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இதன் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் படம் குறித்து பேசினார்.

நான் இதுவரை 47 படங்களை இயக்கியுள்ளேன். விரைவில் 50வது படத்தை நெருங்கவுள்ளேன்.

என் கதை, படம், சூட்டிங் என எல்லாவற்றையும் பற்றி என் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிறைய கேட்டு தெரிந்துக் கொள்வார்கள்.

ஆனால் இதுவரை இரண்டு நடிகர்கள் மட்டும் என்னிடம் எதையும் கேட்பதில்லை.

என் விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. ஒருவர் இந்த பட நாயகன் பாலகிருஷ்ணா, மற்றொருவர் அஜித்.” என்றார்.

சிவகார்த்திகேயன் பட வில்லனுடன் டூயட் பாடும் ஓவியா

சிவகார்த்திகேயன் பட வில்லனுடன் டூயட் பாடும் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Oviyaபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமான ஓவியா தற்போது படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்சுடன் டூயட் பாடி வருகிறார்.

இதனையடுத்து ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவிருக்கிறாராம்.

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வில்லனாக நடித்த அன்சன் பால் என்பவர்தான் அந்த படத்தின் ஹீரோவாம்.

ஓவியா கேரளத்தை சேர்ந்தவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அதுபோல் அன்சன் பாலும் கேரளாகாரர்தானாம்.

சுந்தரி நீயும் சுந்தரனும் சேர்ந்திருந்தால் திரு ஓணம்…..

More Articles
Follows