நடிகர் சௌந்தரராஜா படத்தை போட்டு சத்யராஜை கலாய்த்த எச்.ராஜா

நடிகர் சௌந்தரராஜா படத்தை போட்டு சத்யராஜை கலாய்த்த எச்.ராஜா

soundhar rajaகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் நடிகர் சங்க போராட்டத்தின் போது பேசியிருந்தார்.

அப்போது இராணுவத்தை அனுப்பி தமிழர்களை கட்டுப்படுத்த நினைத்தாலும் போராட தயங்க மாட்டோம் என ஆவேசமாக பேசினார்.

சத்யராஜின் இந்த பேச்சை கலாய்க்கும் வகையில் பாஜக. வைச் சேர்ந்த எச் ராஜா அவர்கள் நடிகர் சவுந்தர ராஜா போலீசிடம் அடி வாங்கும் நிஜ போட்டோவை போட்டு… இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம். இதுதானா? என கிண்டலடித்துள்ளார்.

(படத்தை பார்க்கவும்)

க்யா ரே போலீஸுக்கு சப்போர்ட்டா.? ரஜினியை ரவுண்ட் கட்டும் மக்கள்

க்யா ரே போலீஸுக்கு சப்போர்ட்டா.? ரஜினியை ரவுண்ட் கட்டும் மக்கள்

Rajini tweet made issue on Police attack TN peoples reaction to his statementசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

எனவே போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

அதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் காவல்துறையினரை தாக்கினர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலானது.

இந்த வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த்,

“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

ரஜினியை இந்த கருத்தை பலர் விமர்சித்துள்ளனர்.

இதுவரை ரஜினிக்கு வராத கோபம் இப்போது மட்டும் வருவது ஏன்? என பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் பதிவிட்டுள்ள சில பதிவுகளின் தொகுப்பு இதோ…

“ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற போது வராத கோபம்… புயலில் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்றாத அரசுகளின் மேல் வராத கோபம்… காவல்துறை எட்டி உதைத்ததில் இளம்பெண் உயிரிழந்தபோது வராத கோபம் ஏன் இப்போது மட்டும் வந்தது” என சிலர் கேட்டுள்ளனர்.

பல இடங்களில் அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்துகிறார்கள். பொய் கேஸ் போடுகிறார்கள். ஹேல்மேட் போடாமல் சென்றால் தாக்குதல் கூட நடத்துகிறார்கள். அப்போது எங்கே சென்றார் ரஜினி என்றனர்.

சிலர் இப்போ மட்டும் இந்த பல்லி கத்துதா? என வடிவேலு டயலாக்கை பயன்படுத்தி ரஜினியை கிண்டலடித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் வேண்டுமென்றே காவல்துறையினர் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தினர். அப்போதெல்லாம் ரஜினி பேசவில்லையே. என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கூட சென்னை தி.நகரில் ஒரு வாலிபரை அவர் தாய் முன்பே போலீஸ் கட்டி வைத்து அடித்தனர். அந்த வாலிபர் மீது தவறு இருந்தால் வண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அபராதம் விதித்து இருக்கலாம்.

அல்லது அவன் மீது போக்குவரத்து சட்டப்படி தண்டனை அளித்திருக்கலாம். அந்த வீடியோ வைரலானது. ஆனால் அதைப்பற்றி ரஜினி கேட்கவில்லையே. என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் என்ற மனிதரை நடுநிலையாளராகவே மக்கள் பார்க்கின்றனர்.

அப்படியிருக்கும் போது போலீஸ் தரப்பு குற்றங்களையும் ரஜினி கண்டிக்கலாமே..? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Rajini tweet made issue on Police attack TN peoples reaction to his statement

காவலர்கள் மீது கைவைத்தால் கடுமையா தண்டிக்கனும்.: ரஜினி கண்டனம்

காவலர்கள் மீது கைவைத்தால் கடுமையா தண்டிக்கனும்.: ரஜினி கண்டனம்

Public should not attack Police They should be punished says Rajiniஉச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.

தமிழகமே போராட்ட களத்தில் உள்ள போது ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் பல கடுமையான கட்டுபாடுகளுடன் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்களை போலீசார் தடுத்த போது சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்ட போது அந்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது… ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.

இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Public should not attack Police They should be punished says Rajini

rajini tweet police attack

Breaking: ஐபிஎல் ஆட்டமா? மக்கள் போராட்டமா? பங்கேற்ற திரையுலகினர் கைது

Breaking: ஐபிஎல் ஆட்டமா? மக்கள் போராட்டமா? பங்கேற்ற திரையுலகினர் கைது

TN Peoples protest against IPL Match to support Cauvery and Sterlite Issueகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையில் இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.

தமிழகமே இந்த போராட்டங்களால் கொந்தளிப்பில் உள்ள நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டியாளர்கள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு செல்வதற்கு முன் அந்த ஓட்டல் முன்பும் போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சி சீமான், கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், கௌதமன், தங்கர் பச்சான் ஆகியோரும் சென்னையில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துக் கொண்டனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு நடைபெறும் நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளோம்…

டி.டி.கே சாலை, சென்னை
• வீரர்கள் அழைத்து வரப்படும சாலையில் மறியல்
• கிரிக்கெட் வீரர்கள் வரும் சாலையில் மறியல் போராட்டம்
• தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் மறியல்
• போராட்டத்தால் டி.டி.கே சாலையில் போக்குவரத்து பாதிப்பு
• சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறது போலீஸ்

அண்ணாசாலை, சென்னை
• எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அண்ணா சாலையில் மறியல்
• ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்

சேப்பாக்கம், சென்னை
• சென்னை சேப்பாக்கத்தில் ரஜினி ரசிகர்கள் கைது
• காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என அடையாள அட்டை விநியோகித்தவர்கள் கைது
• அண்ணாசலையில் வந்த ஆம்புலன்சை மறித்தனர் போராட்டக்காரர்கள்

TN Peoples protest against IPL Match to support Cauvery & Sterlite Issue

cine stars at ipl

BREAKING ஐபிஎல் அப்டேட்ஸ்: ரஜினி மக்கள் மன்றத்தினர் கைது

BREAKING ஐபிஎல் அப்டேட்ஸ்: ரஜினி மக்கள் மன்றத்தினர் கைது

rajinikanthகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இது போன்ற போராட்டங்கள் நடைபெற்று வருவதால், சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என பெரும்பாலான அமைப்புகள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் இன்று மாலை ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதால் சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காலாவதியான ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுப்பு; கமல் நன்றி

காலாவதியான ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுப்பு; கமல் நன்றி

Kamalhassan talks about Tuticorin Sterlite renewal cancelledதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த 60 நாட்களாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மாணவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் காலாவதியான ஸ்டெர்லைட் ஆலையின் மாசுக்கட்டுப்பாட்டு உரிமத்தை, புதுப்பிக்க ஆலையின் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

இதனை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளதால், பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள்.

சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

Kamalhassan talks about Tuticorin Sterlite renewal cancelled

More Articles
Follows