விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்… பாஜக.விலிருந்து ஆதரவு குரல்

விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்… பாஜக.விலிருந்து ஆதரவு குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay pt selvakumarநடிகர் விஜய்க்கு ஆதரவாக மக்கள் தொடர்பாளரும் புலி படத் யாரிப்பாளருமான பிடி. செல்வகுமார் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது…

நடிகர் விஜய் மதத்திற்கு அப்பாற்பட்டவர். ஹெச்.ராஜா மத ரீதியாக பேசுவது வேதனை தருகிறது.

விஜய் அரசியலுக்கு வந்தால் அரசியல்வாதிகளைவிட நல்லது செய்வார்.

இளைய தலைமுறையினரை மதத்தின் பெயரால் பிரிக்காதீர்கள் என எச். ராஜாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா அறிவுசார் பிரிவின் இணை அமைப்பாளர் பதவியில் பி.டி.செல்வகுமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

If Vijay enter into politics he will do good things to Public says PTSelvakumar

மெர்சல் விவகாரம்: ஐகோர்ட் தீர்ப்புக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

மெர்சல் விவகாரம்: ஐகோர்ட் தீர்ப்புக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisai Soundararajan questions to Mersal judgement todayமெர்சல் படத்துக்கான சென்சார் சர்ட்டிபிகேட்டை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள்? அதை படமாக மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு என தீர்ப்பளித்தது கோர்ட்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது…

சினிமா போன்ற பெரு ஊடகத்தில் தவறான கருத்தை பதிவிடுவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என்றார்.

மேலும் ஒரு கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது சுதந்திரம் இல்லை. கருத்து திணிப்பு என்றும் கூறியுள்ளார்.

Tamilisai Soundararajan questions to Mersal judgement today

வட சென்னைக்கு ஆபத்து; வருமுன் காப்போம்… கமல் தகவல்

வட சென்னைக்கு ஆபத்து; வருமுன் காப்போம்… கமல் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan tweets about VadaChennai peoples issueவட சென்னையில் உள்ள பகுதி எண்ணுர். இந்த எண்ணுர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வட சென்னைக்கு ஆபத்து உருவாகும் என கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மீனவ மக்களின் வாழ்வதாரமாக விளங்கும் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

ஆனால் அவர்களின் குரலுக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் கமல்ஹாசன்.

மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் முனையங்களை நடுஆற்றில் கட்டியுள்ளன.

அவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை மக்களுக்கு அரசு கொடுப்பத்தில்லை.

ஆபத்து வந்தபின் கூப்பிட்டு கதறாமல் வருமுன் காப்போம் என மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து.

கோசஸ்தலாயாற்று பிரச்சனை பற்றி நான் எழுதியது முழுவதுமாக வந்து சேரவில்லை என்ற புகார்கள் வந்தன. மன்னிக்க. முழுவதும் இக்கீச்சில் இணைத்துள்ளேன்

காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும்.

காட்டுக்குப்பத்து பெண்களும் இளைஞர்களும். என் குரலுக்கு நன்றியைப்பதிவு செய்தது நெகிழவைக்கிறது.நான் செய்து உதவியல்ல கடமை.விரைவில் சந்திப்போம்.

Kamalhassan tweets about VadaChennai peoples issue

kamal tweet vada chennai

கந்துவட்டி சிக்கலில் சிவகார்த்திகேயன் பட நாயகி? போலீஸில் புகார்

கந்துவட்டி சிக்கலில் சிவகார்த்திகேயன் பட நாயகி? போலீஸில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Anandhi files a complaint about Kanthuvattiசின்னத்திரை நடிகை ஆனந்தி. இவர் கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரின் உதவியுடன் கந்துவட்டிக் கும்பல் என் தாயாரின் வீட்டை எழுதி வாங்கிவிட்டதாகவும் தன் சகோதரனைக் கொலை செய்துவிட்டதாகவும் சென்னைக் காவல்துறை ஆணையரிடம் சின்னத்திரை நடிகை ஆனந்தி புகார் அளித்துள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

அந்தப் புகார் மனுவில் இவர் கூறியுள்ளதாவது…

சின்னத்திரையில் துணை நடிகையாக வேலை பார்க்கும் நான், என் தந்தை ஆறுமுகத்தின் மருத்துவச் செலவுக்காக உறவினரான சித்தி ரங்கநாயகி, அவர் மகன் தினேஷ் என்ற தேசய்யா ஆகியோரிடம் 2014-ம் ஆண்டு 5 லட்சம் மூன்று தவணையாக 2 சதவிகிதம் மற்றும் 3 சதவிகிதம் என வாங்கினேன்.

இவற்றில் வட்டியாக ரூ. 1,80,000 செலுத்தியுள்ளேன். மீதித் தொகைக்கு அசல் மற்றும் வட்டிக்கு என் அம்மாவின் வீட்டை ராணிப்பேட்டை காவல் நிலையம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

பிறகு என்னையும் என் கணவரையும் மிரட்டி ராணிப்பேட்டை ஐ.ஓ.பி வங்கியின் மூன்று காசோலையில் கையெழுத்து வாங்கிச் சென்றுவிட்டனர். பின்னர் அந்தக் காசோலையில் 30 லட்சம் எனத் தனித்தனியாக எழுதிக்கொண்டனர்.

பின்னர், வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டதாகவும் உன்னைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினர்.

ஆனால் தற்போது அந்த பணத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு ரூ. 30 லட்சத்தை அடைக்க வேண்டும் என சித்தி தன்னை வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அடியாட்களை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார்.

ஆனால் இது திருவண்ணாமலையில் நடைபெற்ற சம்பவம் என்பதால் கமிஷ்னர் புகாரை ஏற்க மறுப்பதாகவும், இவரை அலைக்கழிப்பதாகவும் மீடியாவில் தெரிவித்திருக்கிறார்.

Actress Anandhi files a complaint about Kanthuvatti

மெர்சல் பிடிக்கலையா பார்க்காதீங்க; பட வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

மெர்சல் பிடிக்கலையா பார்க்காதீங்க; பட வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras High court dismisses petition against Mersal issue of Censor Certificateமெர்சல் படத்தின் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் மெர்சல் படத்துக்கான தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் சரமாரி கேள்விகளை கேட்டது.

மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள்? அந்த படத்தில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

மேலும் மெர்சல் என்பது ஒரு படம், உண்மையில் பொதுநல அக்கறையிருந்தால் குடிப்பது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நீக்கி சொல்லி நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்.

மேலும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு.

உங்களுக்கு படம் பிடிக்கவில்லை எனில் நீங்க அதை பார்க்காமல் இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

High court dismisses petition against Mersal issue of Censor Certificate

மெர்சல் புரட்சி: தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புதிய சட்டம்

மெர்சல் புரட்சி: தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புதிய சட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalவிஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இப்படத்தில் அரசு மருத்துவமனைகளின் அவலத்தையும், இதனால் தனியார் மருத்துவமனைகள் செய்யும் அராஜகத்தையும் கூறியிருந்தனர்.

ஒரு அரசு மருத்துவனையில் ஆக்ஸிஜன் இல்லாததால் குழந்தைகள் இறந்ததும், பெருச்சாளி கடித்து ஒரு குழந்தை இறந்தது பற்றிய உண்மை சம்பவங்களை பற்றி விஜய் பேசியிருந்தார்.

இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் அரசு மருத்துவமனைகளை தவிர்ப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளையும் நாடுவதாகவும், அவர்கள் இதனை வைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க வருகிறது தமிழக அரசு புதிய சட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக அரசியலில் மெர்சல் செய்த புரட்சியாக கருதலாம்.

More Articles
Follows