நான் ஒரு தடவ சொன்னா டயலாக் அரசியலுக்கு செட்டாகாது..: ரஜினியை சீண்டும் சீமான்

நான் ஒரு தடவ சொன்னா டயலாக் அரசியலுக்கு செட்டாகாது..: ரஜினியை சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and seemanவேலுபிரபாகரன் இயக்கத்தில் தயாராகும் படம் ‘கடவுள்-2’ இதில் பாரதிராஜா, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட சீமான் பேசியதாவது…

ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவை பா.ஜ.கவை. சேர்ந்த எச். ராஜா வேசி மகன் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு சீமான் தன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது…

வைரமுத்து சொல்லாத வி‌ஷயத்தை சொல்லியதாக கூறி பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் எது வேண்டுமானாலும் எல்லாம் பேசுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் இங்கு கால் ஊன்ற முடியாது.

கொல்லைப்புறமாக வந்து கோட்டையில் ஏற முடியாது.

தாமரை ஒருபோதும் இங்கு மலராது. எங்கள் உடலில் படர் தாமரைதான் படர்கிறது.

நீங்கள் நோட்டோவுக்கு கீழ் இருப்பதால் தான் பேட்டா ரஜினிகாந்தை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்.

ரஜினி ஆன்மீக அரசியல் பற்றி பேசுகிறார். அப்படியென்றால் கட்சி செயற்குழு, பொதுக்குழு கோயிலில் நடக்குமா? நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்னமாதிரி என்று சினிமாவின் பஞ்ச் டயலாக் பேசலாம்.

ஆனால் இங்கு அரசியலில் ஒவ்வொன்றையும் நூறு தடவை சொல்ல வேண்டும். இதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் எந்த பக்கம் நின்றாலும் அதற்கு எதிர் பக்கத்தில்தான் நான் நிற்பேன். தமிழ் மக்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள்? அவர்களை ஆள்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இவ்வாறு சீமான் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் வேலுபிரபாகரன், பாடல் ஆசிரியர் சினேகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

AAA பட புரொடியூசரை சிம்பு கைவிட்டார்; விஷால் கைகொடுக்கிறார்..!

AAA பட புரொடியூசரை சிம்பு கைவிட்டார்; விஷால் கைகொடுக்கிறார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Michael rayappanஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.

இப்படம் சிம்பு கேரியரில் மாபெரும் தோல்வியை சந்தித்தது.

இதனால் விநியோகர்ஸ்தர்கள் நஷ்டஈடு கேட்க தயாரிப்பாளர் சிம்புவை நாடினார்.

மேலும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கால்ஷீட்டை சிம்புவிடம் கேட்டார்.

ஆனால் அவர் தரப்பில் எந்த பதிலும் சரியாக வழங்கப்படவில்லை.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் முறையிட்டார்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பனின் நிலையை அறிந்த விஷால் இன்றைய கீ பட விழாவில் அவருக்கு தான் உதவுதாக அறிவித்தார்.

ராயப்பன் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து இயக்குனரை கொண்டு வந்தால் நான் அட்வான்ஸ் வாங்காமல் நடித்துக் கொடுக்கிறேன்.

படம் வந்து வெற்றி அடைந்த பின் அவர் சம்பளம் கொடுக்கட்டும்” என்று தெரிவித்தார்.

சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்க விழா சென்னையில் நடந்தது.

சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்க விழா சென்னையில் நடந்தது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sudhesi makkal neethi katchi launchசுதேசி மக்கள் நீதி கட்சியின் துவக்க விழா சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் கட்சியின் கொடி, கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
சுதேசி மக்கள் நீதி கட்சியின் கொள்கைகள் வருமாறு:-

இன்றைய காலகட்டத்தில் அரசியல் சீர்கெட்டு உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களை காக்க அரசு தவறி விட்டது. படித்த இளைஞர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

நுகர்வோர்களாகிய மக்கள் அன்றாடம் கவர்ச்சி விளம்பரங்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சோம்பேறித் தனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
அரசு துறைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதற்காக அரசு பொருளாதார திட்டங்களை மேம்படுத்த வேண்டும். நாட்டிற்கு சவாலாக விளங்கும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சாதி கலவரம் உள்ளிட்ட கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடுவோம்.
சமூக நலன் கருதி, மக்களோடு மக்களாக நின்று அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். லஞ்ச லாவண்யத்திற்கு அடிமையாகி, வேலியே பயிரை மேய்கிறது என்பது போன்று செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது. மக்களின் நலனுக்காக புதிய கடைமைகளை தவறாது செய்வது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கட்சியின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான கப்பல் கே.எஸ். ராஜேந்திரன் கூறியதாவது:-
அரசு இயந்திரம் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் சிறிய கட்சிகள் தோன்ற அவசியம் இல்லை. மக்கள் நலனே எங்கள் கட்சியின் கொள்கை. மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைப்போம். 2021-ம் ஆண்டு தேர்தலில், சுதேசி மக்கள் நீதி கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கட்சி தலைவர் என். ரமேஷ், பொருளாளர் ஆர். வரலெட்சுமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி கால பைரவா

ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி கால பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceமாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.

இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக மிக பிரமாண்டமாக தயாராகும் “கால பைரவா “படத்தின் வேலைகளை தொடங்குகிறார்.

கால பைரவா படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் காஞ்சனா 3 க்கு பிறகு கால பைரவா படத்தை வெளியிட உள்ளார்.

இதைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

150 நாட்களில் 15 கோடி; மீசையமுறுக்கு பட பாடல்கள் சாதனை.

150 நாட்களில் 15 கோடி; மீசையமுறுக்கு பட பாடல்கள் சாதனை.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hiphop tamizhaசுந்தர்.சி. – குஷ்புவின் ‘அவ்னி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்த படம் ‘மீசைய முறுக்கு’.

‘ஹிப் பாப் ’ ஆதி இசையமைத்து, நாயகனாக நடித்த இப்படம் மாபெரும் வசூலை அள்ளியது.

இந்த திரைப்படம் வெளியான 150 நாட்களில் இந்த படத்தின் பாடல்கள் யு-டியூப் , டு-பாடு.காம், கானா, ராகா, ஜியோ மியூசிக் உள்ளிட்ட சமூக இசைத் தளங்கள் வாயிலாக 15 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

2017-ல் அதிக Streaming ஆன வீடியோ என்ற பெருமையை ‘மீசையை முறுக்கு’ பெற்றுள்ளது.

இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை என்று இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனையை கொண்டாடும் விதமாக ‘மீசையை முறுக்கு’ ஆல்பத்தை வெளியிட்ட ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்த படத்தை தயாரித்த குஷ்பு, கதாநாயகனாக நடித்து இயக்கிய ஆதி, இந்த படத்தில் பணியாற்றிய இசை கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் குஷ்புவுக்கும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதிக்கும் ‘திங்க் மியூசிக்’ மற்றும் ‘சத்யம் சினிமாஸ்’ நிறுவனங்களின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி விருதுகளை வழங்கினார்.

இவ்விழாவில் ஆதி தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை தன் குழுவுக்கு பரிசளித்து கௌரவம் செய்து பேசும்போது, ‘‘இவர்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

எனக்கு வாய்ப்பளித்த சுந்தர்.சி., குஷ்பு ஆகியோருக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன். இது என் கேரியரில் ஒரு பெரிய மைல்க்கல்!

இதே சத்யம் திரையரங்க வளாகத்தில் தான் 2012-ல் நான் இசை அமைத்த ஆல்பத்தின் வெளியீடும் நடந்தது.

நான் இசையமைத்த ‘ஆம்பள’ படத்தின் இசை வெளியீடும் நடந்தது.

அந்த நிகழ்வுகளை தொடர்ந்து இப்போது ‘மீசையை முறுக்கு’ விழா நடக்கிறது. பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

நடிகை குஷ்பு பேசும்போது, ‘‘இளைஞர்கள் ஆதியை முன்னுதாரணமாக எடுத்து செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

அவரது கடின உழைப்புக்கு கிடைத்த கௌரவம் இது’’ என்றார்!

எம்.ஜி.ஆரின் மனைவியாக மாறும் கபாலி ரித்விகா

எம்.ஜி.ஆரின் மனைவியாக மாறும் கபாலி ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rythvikaமுன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஏ.பாலகிருஷ்ணன் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இவர் காமராஜ் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் சதீஷ் குமார் என்பவர் நடிக்கிறார்.

அண்ணாதுரையாக இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கேரக்டரில் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ரித்விகா நடிக்கிறாராம்.

எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு கேரளாவின் பாலக்கட்டில் உள்ளது. அங்கும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

More Articles
Follows