பறக்கும் ‘தர்பார்’ விமானம்..; பட்டைய கிளப்பும் லைகா புரோமோசன்

பறக்கும் ‘தர்பார்’ விமானம்..; பட்டைய கிளப்பும் லைகா புரோமோசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca Production promote Rajinis Darbar in flight தமிழ் சினிமா பட விளம்பரங்களில் பல யுக்திகளை கையாண்டவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு.

இவர் சினிமா துறையில் பல வருடங்களாக பல படங்களை தயாரித்தாலும் அண்மையில்தான் ரஜினியின் கபாலி படத்தை தயாரித்திருந்தார்.

எனவே இதன் விளம்பரங்களில் பட்டைய கிளப்பியிருத்தார்.

சாக்லேட் முதல் பறக்கும் விமானம் வரை விளம்பரபடுத்தியிருந்தார்.

தற்போது இவரது பாணியை லைகா நிறுவனமும் கடைபிடித்துள்ளது.

லைகா தயாரித்துள்ள ரஜினியின் தர்பார் பட போஸ்டரையும் விமானத்தில் டிசைன் செய்துள்ளனர். இது வானில் பறந்துக் கொண்டிருக்கிறது.

தர்பார் திரைப்படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Lyca Production promote Rajinis Darbar in flight

இயக்குநர் கணேஷ் பாபு & சிருஷ்டி டாங்கே இணையும் ‘கட்டில்’

இயக்குநர் கணேஷ் பாபு & சிருஷ்டி டாங்கே இணையும் ‘கட்டில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ganesh Babus Kattil getting ready in Two Languages

இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் தமிழகத்தின் பல்துறை சார்ந்த பிரபலங்களும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் கட்டில் திரைப்படம் மலையாளத்திலும் “கட்டில்” என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது.

இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார்.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள்.

பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

“மெட்டிஒலி” சாந்தி நடனம் அமைத்திருக்கிறார்.

பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ganesh Babus Kattil getting ready in Two Languages

வி1 வெற்றியை கொண்டாடும் பாவெல் நவகீதன் & டீம்

வி1 வெற்றியை கொண்டாடும் பாவெல் நவகீதன் & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V1 Murder case team celebrate their victory

தரமான படங்களாக இருந்தால் தரம் பார்க்காமல் கொண்டாடுவதில் தமிழக ரசிகர்களுக்கு இணை தமிழக ரசிகர்கள் தான். சமீபத்தில் வெளியான பெரும்பாலும் புதுமுகங்கள் ஆட்கொண்ட “வி1” படமே இதற்கு சான்று.

திரில்லர் படத்தில் சமுக விழிப்புணர்வை சேர்த்து விருவிருப்பாக உருவான “வி1” திரைப்படம் வெளியான நாள் முதல், அப்படத்தை தமிழக சினிமா ரசிகர்கள் வெகுவாக வரவேற்றனர்.

நாளுக்கு நாள் திரையரங்குகளும், படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போக வெற்றி மகிழ்ச்சியில் உள்ளது “வி1” படக்குழு.

இப்படத்தை கொண்டாடிய மக்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் இத்தருணத்தில் தங்களது நன்றியை “வி1” படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார்.

கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்
வெளியிடுபவர் – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்
ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.
இசை – ரோனி ரப்ஹெல்
படத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்
கலை – VRK ரமேஷ்
SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்
மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

V1 Murder case team celebrate their victory

டிவி நடிகர்களுக்கு புத்தாண்டு பரிசுகள் புத்தாடை வழங்கும் விழா

டிவி நடிகர்களுக்கு புத்தாண்டு பரிசுகள் புத்தாடை வழங்கும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manobala interview at TV Actors union at New year event சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் , புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா இன்று சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் இயக்குநருமான மனோபாலா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்த விழா குறித்து சின்னத்திரை நடிகர்கள சங்கத்தின் தலைவர் ஏ. ரவிவர்மா பேசும்போது,

“சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 16 ஆண்டுகால வரலாற்றில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு மனமுவந்து பங்களிப்பு செய்த சங்கத்தின் உறுப்பினர்கள் எம்.பி . பாலாஜி மற்றும் சி. ஈஸ்வரன் இருவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நமக்கு நாமே உதவி செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் சங்க உறுப்பினர்களே மற்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவுவதற்கு தொடக்கப் புள்ளியை அமைத்திருக்கிறார்கள்.

இது மேலும் பலருக்கு உற்சாகத்தையும் தூண்டுதலையும் கொடுக்கும் .
இந்த ஆண்டு நடிகர்கள் 150 பேர், நடிகைகள் 150 பேர். என்று 300 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போது 1800 பேருக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள இந்தச் சங்கத்தில் அடுத்த ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு பரிசு வழங்குவதாக என் தலைமையிலான சங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கு ஒரு ஆரம்பமாக இந்த விழா இருக்கிறது .

சங்க நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.சின்னத்திரை நடிகர்கள் சங்கம் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடத்தி மாபெரும் வெற்றிபெற்றது அனைவருக்கும் தெரியும் .

அதே போல சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் நலனுக்கும் இந்தச் சங்கம் தொடர்ந்து பாடுபடும்; உறுப்பினர்கள் நலனுக்கு உதவக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்தும்.

வருகிற 2020 -ல், அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்து வாழ்வில் எல்லா நலமும் பெறவேண்டும் என்று கூறிக்கொண்டு அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

பரிசுகளை வழங்கி இயக்குநர் மனோபாலா பேசும்போது…
“இதை எனது குடும்ப விழாவில் கலந்து கொள்வது போல் உணர்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி .இது மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்றார்.

இவ் விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Manobala interview at TV Actors union at New year event

ரஜினி தர்பாரில் வன்முறை..; சென்சாரில் யுஏ சர்ட்டிபிகேட்.?

ரஜினி தர்பாரில் வன்முறை..; சென்சாரில் யுஏ சர்ட்டிபிகேட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinis Darbar censored UAலைகா, ரஜினி, முருகதாஸ், அனிருத் இணைந்துள்ள படம் தர்பார்.

இந்த படத்தை இந்தாண்டு 2020 ஜனவரி 9ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையில் லைகா தனக்கு தர வேண்டிய 25 கோடியை தராவிட்டால் படத்தை வெளியிட கூடாது என மலேசிய விநியோகஸ்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் சென்சார் விவரங்கள் கிடைத்துள்ளது.

அதாவது படத்தில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தர்பாரில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதால் இந்த சான்று எனவும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Super Star Rajinis Darbar censored UA

மாறி மாறி பாராட்டி நன்றியை தெரிவித்த தனுஷ் & கார்த்திக் சுப்பராஜ்

மாறி மாறி பாராட்டி நன்றியை தெரிவித்த தனுஷ் & கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Karthik Subbaraj talks about D40 movieதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் வருகிற ஜனவரி 16ல் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை அடுத்து தனது அடுத்த பட சூட்டிங்கை முடித்துவிட்டார் தனுஷ்.

இவரின் 40வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இதன் சூட்டிங் குறித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

நான் மிக வேகமாக நடித்து முடித்த படங்களில் ஒன்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜீன் படம். விவேகமான இயக்குநர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படம் வெற்றியைப் பெறும். என பதிவிட்டுள்ளார்.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளதாவது.. உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி தனுஷ். உங்களைப் போல ஒரு சிறந்த நடிகருடன் பணியாற்றியது, எனக்கும் எனது குழுவுக்கும் நல்ல அனுபவம் என பதிவிட்டுள்ளார்.

Dhanush and Karthik Subbaraj talks about D40 movie

More Articles
Follows