முதலில் கட்சி பெயர்-கொள்கையை அவர் சொல்லட்டும்; ரஜினியை சீண்டும் கமல்.?

Let Rajini announce his political party then i will say my opinion says Kamalஒரு தனியார் டிவி சார்பாக “உழவன் விருதுகள்” வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி பேசினார் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

அந்த நிகழ்வில் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்.

அப்போது தற்போது உள்ள தமிழக அரசும் பற்றியும் ரஜினியை பற்றியும் கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தாவது…

‘இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்;

இந்த ஆட்சி அகற்றப்பட்டால் அது நான் செய்தது அல்ல; மக்கள் செய்தது… மக்கள் நீதி மய்யம் செய்ததாகவே இருக்கும். இதுதான் மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோள்.

மக்கள் நலன் என்பதே எங்கள் கொள்கை. என்றார்.

அதன்பின்னர்… ரஜினி உங்கள் நீண்டகால நண்பர். அவரை விமர்சிப்பதில்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ளீர்கள். அரசியல் களத்தில் நீங்கள் ஒரு கட்சியின் தலைவர்… அவர் ஒரு கட்சியின் தலைவர் என்று கேள்வி கேட்கும்போதே…

அவர் எந்தக் கட்சியின் தலைவர்? என கேட்டார் கமல்.

அவர் ஆன்மிக அரசியலை முன்வைத்துத் தொடங்கப்போகும் ஒரு கட்சியின் தலைவர் என்றனர்.

அதற்கு கமல் பதிலளிக்கும்போது…

அவர் வரட்டும்; கட்சி தொடங்கட்டும். அதற்குப் பெயர் வைக்கட்டும்.

நான் ‘மக்கள் நலன்’ என்று ஒரு வார்த்தையில் எங்கள் கொள்கையை சொல்லியிருக்கிறேன். இதைப்போல அவரும் அவருடைய கொள்கையைச் சொல்லட்டும்.

அதன்பிறகு இரண்டும் பொருந்துகிறதா என்று பார்ப்போம். அப்படி பொருந்தவில்லை என்றால், அப்பொழுதும் ரஜினியை விமர்சிக்க மாட்டேன்.

அவருடைய கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பேன். இது எங்கள் அரசியல் மாண்பு.

தனி நபரை விமர்சிக்க மாட்டோம் என்றுதான் சொல்கிறேன். அப்படி விமர்சிக்கும் கட்சிகள் இங்கே நிறைய இருக்கின்றன.

ரஜினி அவர்கள் கட்சித் தொடங்கிய பின்னர், அவருடைய கொள்கைகளை அறிந்தபின்னர் அதில் எங்களுக்கு விமர்சனம் இருந்தால் அது கடுமையானதாக இருக்கும்.

பாராட்டுக்கள் இருந்தால் அது திறந்த மனதுடன் இருக்கும்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Let Rajini announce his political party then i will say my opinion says Kamal

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post