‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு … செப்டம்பரில் வெளியீடு

‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு … செப்டம்பரில் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

1990 – 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, தீபா ராமனுஜம், சென்றாயன், மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் துவங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் பகுதிகளில் நடந்து, இனிதே பொள்ளாச்சியில் நிறைவு பெற்றது.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத்தொகுப்பில், ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, மைக்கேல்ராஜ் கலையில், யுகபாரதி, மோகன்ராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுத, மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்துக் கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் SR.பிரபாகரன். தயாரிப்பு – ரெதான்’ இந்தர்குமார்.

“அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

“அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)நடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும் , மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர் .

தனது LIFE AGAIN FOUNDATION சார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார் .தற்போது அவர் LIFE AGAIN FOUNDATION க்காக “அன்புடன் கௌதமி “என்ற சிறப்பு நிகழ்ச்சி அன்னையர் தினமான வரும் மே 12 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி ஊக்குவிக்க இருக்கிறார்கள் .

இந்த நிகழ்ச்சிக்கான முதல் பார்வை – FIRST லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் .

Here Is ” Anbudan Gautami ” Specil Show First Look Poster.
show From May 12th – Mothers day Special .

இரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி

இரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)கலைக்கு மொழி அவசியமில்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் தமிழ் நடிகர் மணி.
கன்னடத்தில் வெளியான “ தேசி “ படம் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய மணி தொடர்ந்து பெங்காலி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துவருகிறார்.

கன்னடத்தில் நடித்து வெற்றிபெற்ற முதல் தமிழன் மணி என்பது குறிப்பிடத்தக்கது.

பல மொழிகளில் நடித்த அவருக்கு இந்திய நடிகர் என அறிவித்து இந்திய அரசு உயரிய விருதான பரம்ஸ்ரீ என்ற விருதை 2016 ம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவித்தது.

2014 ம் ஆண்டு இந்திய அரசு கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுகர் அவர்களுக்கு National Excellence Award வழங்கி கௌரவித்தது. அப்போது பல மொழிகளில் நடித்ததற்காக மணி அவர்களுக்கும் அந்த விருது வழங்கப்பட்டது என்பது சிறப்பிற்குரியது.

அடுத்ததாக 2014 ஆண்டே மஹாராஷ்டிரா அரசின் கௌரவ் சம்மான் என்ற விருதையும் பெற்றார். அதே ஆண்டு பெங்காலி மொழியில் நடித்த “ நிர்மோக் “ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், பெங்காலி அரசின் “ பெங்கால் எக்ஸ்சலன்ஸ் “ விருதையும் பெறார்.

நான் எத்ததை மத்திய, மாநில அரசு விருதுகளை பெற்றாலும், என் தமிழ் மொழியில் நடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்வதே எனக்கு மிகப்பெரிய விருதாக நான் கருதுவேன்.அது விரைவில் நடக்க இருக்கிறது.

A.R.K.ராஜராஜா இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறேன். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அதை உருவாக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க உள்ளது என்றார் நடிகர் மணி.

சிங்கிள் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ‘K13’

சிங்கிள் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ‘K13’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த K13 திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மே 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இந்த படத்துக்கு கிடைத்த ரசிகர்களின் வாய்மொழி விளம்பரத்தால் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் படிப்படியாக அதிகரித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டை மாநில துரைத்துறையினரிடம் இருந்து நேர்மறையான வரவேற்பு கிடைத்திருப்பதும், படத்தை ரீமேக் செய்ய அவர்கள் ஆர்வம் காட்டுவதும் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி.சங்கர் கூறும்போது, “இது எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் உள்ளது. ஆரம்பத்தில், K13 போன்ற த்ரில்லர் படத்துக்கு மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கர்களிடம் இருந்து தான் நல்ல ஒரு வரவேற்பு கிடைக்குமென நினைத்தோம். ஆனால், இந்த திரைப்படத்துக்கு புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அருள்நிதி படம் என்றால் தனித்துவமான விஷயம் ஏதாவது இருக்கும் என ரசிகர்களை தயார்படுத்தி வைத்து, இந்த படத்துக்கு ரசிகர்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருந்த அருள்நிதிக்கு நன்றி. சினிமா விமர்சகர்களின் நேர்மறையான விமர்சனங்களும், பொதுமக்களின் வாய்மொழி வார்த்தைகளும் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்து வருகிறது. பரத் நீலகண்டன் கதையாக என்ன சொன்னாரோ அதை திரையில் கொண்டு வந்து தனது திறமைகளை நிரூபித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ரீமேக் உரிமையை பெற எங்களை அணுகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கிய இந்த படத்தை SP சினிமாஸ் சார்பில் எஸ்.பி.சங்கர் மற்றும் சாந்தப்ரியா தயாரித்திருந்தனர். முன்னணி நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்பை தவிர, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு, சாம் சிஎஸ்ஸின் பிரம்மாண்டமான பின்னணி இசை, மற்றும் ரூபனின் கச்சிதமான படத்தொகுப்பு ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும், கயிறு இல்லாமலும் சண்டைக் காட்சிகளில் அவரே துணிந்து செய்திருக்கிறார். உயரமான ஒரு கட்டடத்திலிருந்து குதிக்கும்போது அவரது கால் முறிந்து விட்டது. ஆனாலும் அடுத்த 30 நிமிடங்களில் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு திரும்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படத்தின் 80% படப்பிடிப்பு சண்டக்கலைஞர்களை வைத்து தான் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் இந்த படத்தை தயாரிக்கிறார். சுஜீத் சாரங் (ஒளிப்பதிவு), ஜாக்ஸ் பிஜாய் (இசை) மற்றும் ஜி.ராமராவ் (படத்தொகுப்பு) ஆகியோர் டிரைலரிலேயே தங்கள் முத்திரையை பதித்து விட்டனர். படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.

ஜெய்க்கு வில்லன்களான தல, தளபதி வில்லன்கள்

ஜெய்க்கு வில்லன்களான தல, தளபதி வில்லன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்தே அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜயின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

“நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். நடிகர் ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம். எனெனில் அவர்களது உடற்கட்டும், அவர்களின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அத்தகைய நடிகர்களை கதை கோரியது. இந்த இருவருமே படத்திற்கு முழுமையான பொருந்துவார்கள் என உணர்ந்தோம். மேலும், அவர்கள் இருவருக்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் உண்டு. இருவருமே சினிமா அர்ப்பணிப்பு உடையவர்கள், வில்லனாக நடித்தாலும் அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள். இந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள், ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை” என்றார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். இவர் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வி.தினேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் உலகெங்கிலும் உள்ள 450 சி.ஜி.தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் காட்சிகளில் பிரமாண்டம் மட்டுமல்லாமல், உணர்வுகள் மற்றும் காதல் ஆகியவற்றையும் காட்ட இருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.

ஜெய் மற்றும் பானுஸ்ரீ முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, மகேஷ் கலை இயக்குனராகவும், ராதிகா நடன இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.

More Articles
Follows