தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேசிய கட்சியான பாஜக-வின் பிரமுகரும் பிரபல நடிகையுமான குஷ்பு தன் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார்.
இதனால் பலரும் அவரை வம்புக்கு இழுக்க பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்பார்.
அவரை ட்விட்டரில் 13 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டை போல இந்தாண்டும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதோடு அவரது ட்விட்டர் பதிவுகளும் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தன் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீட்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் ட்விட்டர் கணக்கை மீட்கும் வரை் அதில் பதிவிடப்படும் கருத்துக்களுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
Khushboo Sundar’s Twitter account hacked