BREAKING காங்கிரஸில் இருந்து விலகல்.; சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதிய குஷ்பூ

BREAKING காங்கிரஸில் இருந்து விலகல்.; சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதிய குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo sonia gandhiதென்னிந்திய சினிமாவை கலக்கியவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் உள்ளனர்.

பிரபல நடிகையான இவர் தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.

முதலில் தி.மு.க வில் இணைந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்த போதிலும் அதற்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருந்தார்.

எனவே விரைவில் குஷ்பூ பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை நான் விடுவித்து கொள்கிறேன் எனவும் குஷ்பு அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்… அரசியல் களத்துடன் தொடர்பில்லாதவர்கள், கட்சிக்காக உழைக்க நினைக்கும் தன்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Khushboo quits congress, likely to join BJP

பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது..; விஜய்சேதுபதி படத்திற்கு த.பெ.தி.க பொ.செ. எதிர்ப்பு

பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது..; விஜய்சேதுபதி படத்திற்கு த.பெ.தி.க பொ.செ. எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi in muralitharan biopicஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ற்றை திரைப்படமாக உருவாகவுள்ளது என்பதை நாம் பார்த்தோம்.

இதில நாயகனாக நடிக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி என அதிகாரப்பூர்வமாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி , இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ளார் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்.

அவர் கூறியதாவது…

ஈழதமிழர்களை கொடூரமாக கொன்று , சிங்கள பேரினவாத அதிபர் ராஜபக்சேவிற்கு அரசிற்கு துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் தமிழக சிறந்த நடிகர் விஜய்சேதுபதி நடிப்பது வேதனையளிக்கிறது.

தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்ல கூடியவர் முத்தையா.

சிங்கள மொழியில் மட்டுமே பேசுபவர். அப்படிபட்டவரின் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள், ஈழதமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

நடிப்பது தொழில் என்று விஜய்சேதுபதி சொன்னால் அதை ஏற்கமுடியாது. இது திரைப்படம் தான் என்று சமாதானம் சொல்லகூடாது.

தந்தை பெரியார் கருத்துகளுக்கும், பெரியாருக்கும் பற்றுடையவராக நடிகர் விஜய்சேதுபதி இருந்தாலும் கூட , அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போக்கானவர் என்ற எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி கெடுத்து கொள்ளகூடாது.

மக்கள் செல்வராக விஜய்சேதுபதி மக்கள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அப்படி படம் உருவானால் அந்த திரைப்படத்தை திரையிட நாங்கள் அனுமதிக்க மதிக்க மாட்டோம் எனவும் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Dravidian outfit urges Vijay Sethupathi to give up Muttiah Muralidharan biopic

பாஜக-வில் இணையும் குஷ்பூ.?; சினிமா போல கா(க)ட்சிகளை மாற்றுகிறாரா?

பாஜக-வில் இணையும் குஷ்பூ.?; சினிமா போல கா(க)ட்சிகளை மாற்றுகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbooதென்னிந்திய சினிமாவை கலக்கியவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் உள்ளனர்.

பிரபல நடிகையான இவர் தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.

முதலில் தி.மு.க வில் இணைந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்த போதிலும் அதற்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருந்தார்.

எனவே விரைவில் குஷ்பூ பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் வந்தன.

இதனை குஷ்பு கடுமையாக கண்டித்தார்.

அதுபோல உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார்.

பா.ஜ.கவில் இணைவதாக இருந்தால், நான் ஏன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்? என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில், குஷ்பூ பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

டெல்லி சென்றுள்ள அவர் நாளை ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க முன்னிலையில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வரை அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.

சினிமாவில் தான் அடிக்கடி எதிர்பாராத காட்சிகள் இடம்பெறும். தற்போது காட்சிகளை போல கட்சிகளை மாற்றுகிறாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Actress/Politician Khushboo joins BJP

பாஜ இணையப்போகிறீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதில்..

நோ கமெண்ட்ஸ்… என பதிலளித்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 15ல் தியேட்டர் திறப்பு.; மாஸ்க் ப்ரீ.. டிக்கெட் & பார்க்கிங் கட்டணம் குறைப்பு..

அக்டோபர் 15ல் தியேட்டர் திறப்பு.; மாஸ்க் ப்ரீ.. டிக்கெட் & பார்க்கிங் கட்டணம் குறைப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theaters reopen in pondicherry

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

பல வணிகங்களுங்கு சில தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டாலும் தியேட்டர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் சினிமா தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், அதனை சார்ந்த அனைவரும் பெரிய பொருளாதார இழப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்களை திறக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

ஆனால் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் புதுச்சேரியில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுவை சண்முகா திரையரங்கம் ரூ.120க்கு விலையுடைய டிக்கெட் ரூ.100.க்கும், ரூ.100 ரூபாய்க்கான டிக்கெட் ரூ.75.க்கும் விற்கப்படும் என அறிவித்துள்ளது.

அதேபோல் சைக்கிள், பைக், கார் பார்க்கிங் கட்டணமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படம் பார்க்க வருவோருக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என்று அந்த தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Pondicherry allows opening of theatres

சிம்பு-சுசீந்திரன் படத்தில் பாரதிராஜா-நிதி அகர்வால்..; வேற யாரெல்லாம் இருக்காங்க..

சிம்பு-சுசீந்திரன் படத்தில் பாரதிராஜா-நிதி அகர்வால்..; வேற யாரெல்லாம் இருக்காங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu 39சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR 39 படத்தின் சூட்டிங் திண்டுக்கல் அருகே வாடிப்பட்டியில் நடைபெற்று வருகிறது.

‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா தங்களது 5வதாக படைப்பாக இந்த படத்தை தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு உடன் இயக்குநர் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான இந்த படம் உருவாகவுள்ளதாம்.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

அடுத்தாண்டு 2021-ம் படத்தைத் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

STR 39 cast and crew details

கலாச்சாரத்தை சீரழிக்கும் ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தமிழக அரசு தடை

கலாச்சாரத்தை சீரழிக்கும் ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தமிழக அரசு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irandam kuthu posterசந்தோஷ் பி.ஜெயக்குமார் நடித்து அவரே இயக்கியுள்ள படம் இரண்டாம் குத்து. இந்த படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

எனவே தன் அறிக்கை மூலம் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம். இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா? அவர்கள் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேள்வி கேட்பேன் என ஆவேசமாக பதிவிட்டு இருந்தார்.

ஆனால் இதை நக்கலடித்து.. 1981ல் டிக் டிக் டிக் என்ற படத்தில் நீங்கள் மாதவியை கவர்ச்சியாக காட்டலையா? அப்போ கண் கூசவில்லையா? என கேள்வி கேட்டிருந்தார்.

அதன்பின் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இரண்டாம் குத்து பட சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள்.. “‘இரண்டாம் குத்து’ படத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சென்சார் போர்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தும்.

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்தப் படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்தப் படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் வகையில் அரசு முழு கவனத்துடன் சென்சார் போர்டு மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும்”

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

TN government will take steps to end obscenity in films – Kadambur Raju

More Articles
Follows