நடிகை குஷ்பு திறந்து வைத்த *கூகை திரைப்பட இயக்க நூலகம்*

நடிகை குஷ்பு திறந்து வைத்த *கூகை திரைப்பட இயக்க நூலகம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushbooஇயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் “கூகை திரைப்பட இயக்கம்” எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு நூலகம் ஒன்றை இன்று துவங்கியிருக்கிறார்.

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை சாய்ரட் பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு, இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்த இயக்குனர்கள் , உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே ….

“ மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது நன்றிகள் . இங்கு வந்ததும் பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன் .

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக்குறித்து நாம் நமது படைப்புகள் மூலமாக ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தும், மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன்.

என்னோடு பயணிக்க தமிழகத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி.

கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்ச்சி இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும், வாசிப்பு என்பது திறைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக அவசியம் . புத்தகம் உங்களை செழுமைப்படுத்தும் . இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

விழாவில் பேசிய நடிகை குஷ்பு

“இந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது.

புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை தரும். இந்த நூலகத்தை திறந்திருக்கும் இயக்குனர் பா.இரஞ்சித்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,

புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் புத்தகம் மூலம் தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.

உதவி இயக்குனராக இருந்த போது ஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போது தான் ஒன்று தோன்றியது. உதவி இயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று.

வாசிப்பின் வழியாகவும் வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும்.

ஆனால் புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும்.

இந்த நல்விழாவிற்கு வருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும் நன்றி” என்றார்.

அம்பேத்கரை காட்டினால் கலவரம் வெடிக்கும் என மிரட்டினார்கள்.. : ரஞ்சித்

அம்பேத்கரை காட்டினால் கலவரம் வெடிக்கும் என மிரட்டினார்கள்.. : ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjithதமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள்”.

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,

“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது.

அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்.

இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.

இயக்குனர் ராம் பேசுகையில்,

“இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன.

ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள்.

ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும் என்றார் தந்தை.

இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று.

அதுபோல் தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு… படி… எழுது… இதுபோதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி”, என்றார்.

முழுக்கதையை கேட்ட பிறகே தங்கராஜ் நிர்வாணமாய் நடித்தார்.. : மாரிசெல்வராஜ்

முழுக்கதையை கேட்ட பிறகே தங்கராஜ் நிர்வாணமாய் நடித்தார்.. : மாரிசெல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mari Selvaraj reveals how Thangaraj acted in nude Sceneநீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் பரியேறும் பெருமாள்.

இயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இதன் வெற்றி விழா மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது மாரி செல்வராஜ் பேசியதாவது…

“பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி.

எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள்.

எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள்.

சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம்.

அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது.

உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர்.

நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார்.

நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்”, என்றார்.

Director Mari Selvaraj reveals how Thangaraj acted in nude Scene

pariyerumal perumal team

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் வடசென்னை

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் வடசென்னை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்

“வட சென்னை “.

கடந்த 23. 9. 18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

இத்திரைப்படத்திற்கு காலா, கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.

இது இவருக்கு 25 வது படம் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது.லைக்கா ப்ரொடொக்சன்ஸ் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது.

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது.

இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் *கொம்பு வச்ச சிங்கம்டா* டைட்டிலை வெளியிட்ட சூர்யா

சசிகுமாரின் *கொம்பு வச்ச சிங்கம்டா* டைட்டிலை வெளியிட்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasi kumar in kombu vachcha singam daகடந்த 2012ல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’.

இப்படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இவையிரண்டும் தோல்வியை தழுவியது.

தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் சங்க விஷமிகளை விரட்டுங்கள்; *ஒளடதம்* ஹீரோ ஆவேசம்

தயாரிப்பாளர் சங்க விஷமிகளை விரட்டுங்கள்; *ஒளடதம்* ஹீரோ ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nethaji prabhuரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்து ள்ள படம் `ஒளடதம்`.

இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

இப்படத்தினை பிரபலப் படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர்.

அதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப் பட்டது.

திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு ` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக் குழு.

“ஒளடதம்” விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது

“இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறுபடங்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி சிறுபடங்களின் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.இது நல்ல விஷயம். அதே போல அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயம் தெரிந்தவர்களிடம் பேசும் போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.

அப்படிப் பெயர் சொல்லும் போது பெயரை உச்சரிக்கும் போது அன்பு கூடுகிறது.நெருக்கமும் வெளிப்படும். இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை.. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது.

வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது.

தமிழில் கையெழுத்து போ டுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.

இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை.மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்.” இவ்வாறு பேரரசு பேசினார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது,

” தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். காசோகளிலும் கூடத் தமிழில் தான் கையெழுத்து போடுவேன் ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா? நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள்.

ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிகக வேண்டும். நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது.

அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. என் பாஸ்போர்ட்டில சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்…

சில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும்.

இப்படம்வெற்றி பெற வாழ்த்துக்கள். “இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும் போது,

” நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன.

அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது? இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.

நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு, நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை.

நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட் ள் படமெடுத்துள்ளோம்.

Uபத்தில் 5 ஃபைட், 2 பாடல்கள் உள்ளன. ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும் இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள்.

ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ,தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள்..

அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமேசெய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்.

என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும். ஒளடதம் தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மூணு லட்சம் பேனாக்களை திருச்சி கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி சென்னை செங்கல்பட்டு சேலம் திரையரங்குகளில் பேனாவை வழங்க உள்ளோம்.

இதுவும் ஒரு புதிய முயற்சி முயற்சி செய்வதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம் என்றார்.நாயகனும்,படத்தயாரிப்பாளர், நேதாஜி பிரபு.

இவ்விழாவில் பட நாயகி சமீரா,.நடிகர் விஷ்ணுபிரியன், பட வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன், நடிகை பாலாம்பிகா, விநியோகஸ்தர் எம்.சி. சேகர், இணைத் தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு. துளசி பழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

More Articles
Follows