கவர்ச்சியான தோற்றத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் சின்ன குஷ்பு . புகைப்படம் உள்ளே !

கவர்ச்சியான தோற்றத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் சின்ன குஷ்பு . புகைப்படம் உள்ளே !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி உடன் குஷ்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இப்போது, ​​​​குஷ்புவின் மகள் அவந்திகா சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றிய அல்ட்ரா கிளாம் படங்களைப் பகிர்ந்துள்ளார் என்பதும் அவை வைரலாகி வருவதும் சூடான செய்தியாகும். அவந்திகா மெட்டா பிளாட்ஃபார்மில் அதிக ரசிகர்களைக் கொண்ட செலிபிரிட்டி ஆவார் . ஒரு சமீபத்திய இடுகையில், அவர் தனது சில அற்புதமான புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, “காபி பெறுவதற்கான ஒரே வழி” என்று தலைப்பிட்டுள்ளார்.

Fans call Khushbu’s daughter “Little Khushboo” after she posts sizzling pics!

மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? அதிகார பூர்வ அறிவிப்பு

மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? அதிகார பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டது. தொழிலாளர் தினத்தன்று (மே 1) முதல் பார்வை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். .

உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகை புயல் வடிவேலு ஆகியோர் இடம் பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாமன்னன் படத்தின் முழு படப்பிடிப்பையும் சில மாதங்களுக்கு முன்பு குழுவினர் முடித்துள்ளனர். ஆதாரங்களின்படி, ஜூன் 29 பக்ரீத் அன்று படத்தை வெளியிட ரெட் ஜெயண்ட் திட்டமிட்டுள்ளது.

Udhayanidhi’s Maamannan new hot update revealed with a stunning poster!

அஜித் இப்போ ஸ்டார் தான்.; ஆனா அவரின் அறிமுகப்பட ‘அமராவதி’க்கு இப்படி செய்யலாமா.?!

அஜித் இப்போ ஸ்டார் தான்.; ஆனா அவரின் அறிமுகப்பட ‘அமராவதி’க்கு இப்படி செய்யலாமா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமான படம் ‘அமராவதி’.

இந்த படம் 1993 மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

செல்வா இயக்கிய இந்த படத்திற்கு பாலபாரதி இசையமைக்க சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் அஜித்துடன் சங்கவி ஜோடியாக நடித்திருந்தார். சங்கவி அறிமுகமான முதல் தமிழ் படமும் இதுதான்.

இவர்களுடன் நிழல்கள் ரவி, மடிப்பு அம்சா விசித்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தாஜ்மஹால் தேவையில்லை… & புத்தம் புது மலரே… ஆகிய பாடல்வள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. இதில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

இந்நிலையில் நாளை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு 30 வருடங்களுக்குப் பிறகு ‘அமராவதி’ படம் தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

எனவே இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தங்களுடைய நினைவுகளை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இயக்குனர் செல்வா நடிகை சங்கவி விசித்திரா உள்ளிட்ட பலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து உள்ளனர்.

ஆனால் தன்னுடைய அறிமுக படத்திற்கு கூட அஜித் ப்ரோமோஷன் செய்யவில்லை. மேலும் அது பற்றிய தன்னுடைய நிடைவுகளை கூட அவர் இதுவரை பகிரவில்லை.

கடந்த 10 – 15 வருடங்களாக அஜித் தன்னுடைய பட விழாக்களிலும் கூட கலந்து கொள்வதில்லை. தன்னுடைய படத்தை பிரமோஷன் கூட செய்வதில்லை.

ஆனால் அதற்கு முன்பெல்லாம் நிறைய தோல்வி படங்களை கொடுத்தபோது நிறைய பேரிடம் வருத்தப்பட்டுள்ளார்.

சினிமாவை விட்டு விலக கூட அவர் நினைத்திருந்த காலகட்டத்தில் தான் ‘பில்லா’ படத்தை ரீமேக் செய்ய சொல்லி ரஜினி அட்வைஸ் செய்திருந்தார். அந்தப் படம் அஜித் கேரியரில் ஒரு ரீ என்ட்ரி கூட சொல்லலாம். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அவருடைய முதல் படம் ‘அமராவதி’ 30 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸர செய்யப்படும் நிலையில் அஜித் வாய் திறக்க மாட்டாரா.? என பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தன்னுடைய பட விழாக்களில் அஜித் கலந்து கொண்டார்.. அது தொடர்பான பேட்டிகளையும் அவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்… பழசை மறந்துடாதீங்க…

Will Ajith promote his 1st film Amaravathi ?

நாடகம் திரைப்படமானது.; ‘அசுரன்’ இடத்தில் உருவான ‘மூத்தக்குடி’.; பாரதிராஜா ஆதரவு

நாடகம் திரைப்படமானது.; ‘அசுரன்’ இடத்தில் உருவான ‘மூத்தக்குடி’.; பாரதிராஜா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார்.

அதில் வெற்றி பெற்ற நாடகத்திற்காக கதாசிரியர் சரக்குட்டிக்கு பரிசு வழங்கினார். தற்போது அந்த நாடகம் தான் திரைவடிவமாக மாறி, “மூத்தகுடி” திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குநர் பாரதிராஜாவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மிகுந்த சிரத்தையெடுத்து, கடினமாக உழைத்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. நாம் வாழ்ந்த காலகட்டத்தை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இப்படம் இருக்கும்.

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா அவர்கள் இப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

‘சாவி’ படத்தின் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி இப்படத்தில் எதிர்நாயகன் பாத்திரம் செய்துள்ளார்.

அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்னண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“அசுரன்” திரைப்பட படப்பிடிப்பு நடந்த, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், விரைவில் இப்படத்தின் இசை,டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா
இயக்கம் – ரவி பார்கவன்
இசை – J R முருகானந்தம்
ஒளிப்பதிவு – ரவிசாமி
படத்தொகுப்பு – வளர் பாண்டி
கதை வசனம் – M சரக்குட்டி
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
பாடல்கள் – நந்தலாலா
எஃபெக்ட்ஸ் – சேது
டிசைன்ஸ் – அஞ்சலை முருகன்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

Bharathi Raja released Mooththakkudi first look poster

30 வருடத்தில் முதன்முறையாக 01-05-2023 அஜித் பர்த்டே ரொம்ப ஸ்பெஷல்.? ஏன்.?

30 வருடத்தில் முதன்முறையாக 01-05-2023 அஜித் பர்த்டே ரொம்ப ஸ்பெஷல்.? ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை மே 1 உழைப்பாளிகள் தினம்.. இந்த தினத்தை உலகமே கொண்டாட தயாராக வருகிறது. அஜித் ரசிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கு இந்த நாள் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் நாளாக அமைந்துள்ளது.

அதற்கு காரணம் மே 1 நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். எல்லா வருடமும் ஸ்பெஷல் என்றாலும் இந்த வருடம் 2023 அஜித் ரசிகர்களுக்கு இந்த ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா.?

அஜித் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படம் ‘அமராவதி’.

இந்த படம் 1993 மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

செல்வா இயக்கிய இந்த படத்திற்கு பாலபாரதி இசையமைக்க சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் அஜித்துடன் சங்கவி ஜோடியாக நடித்திருந்தார். சங்கவி அறிமுகமான முதல் தமிழ் படமும் இதுதான்.

இவர்களுடன் நிழல்கள் ரவி, மடிப்பு அம்சா விசித்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தாஜ்மஹால் தேவையில்லை… & புத்தம் புது மலரே… ஆகிய பாடல்வள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. இதில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

இந்த நிலையில் 30 வருடங்களுக்குப் பிறகு நாளை மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் ‘அமராவதி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

சில திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. மேலும் சென்னை உள்ள பிரபலமான ரோகினி தியேட்டரில் காலை 10:00 மணிக்கு அஜித் ரசிகர் கொண்டாட்டத்துடன் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் பற்றிய தங்களது நினைவுகளை செல்வா, சங்கவி விசித்திரா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்துக்கு 10 வயதில் இருந்தே நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் 2000 (2K) வருடங்களில் பிறந்தவர்கள் தான்.

அப்படி இருக்கையில் அவர்களுக்கு அஜித்தின் முதல் படத்தை தற்போது திரையரங்குகளில் பார்க்கும் வசதி கிடைத்துள்ளது. எனவே அவர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை தரும் என நம்பலாம்.

Ajith’s Amaravathi re release on his birthday

அஜித் பிறந்தநாளில் ஏகே 62 ட்ரீட்.; ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தளிக்கும் லைக்கா

அஜித் பிறந்தநாளில் ஏகே 62 ட்ரீட்.; ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தளிக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனக் கூறப்பட்டு பின்னர் அவர் விலகியதால் மகிழ் திருமேனி இயக்குவார் எனக் கூறப்பட்டு வருகிறது.

இது உறுதியானாலும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மே 1 தேதி நடிகர் அஜித் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அதனை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்களை லைக்கா நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் வந்துள்ளன.

‘துணிவு’ படத்திற்குப் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லாததால் அப்செட் ஆகியிருந்த அஜித் ரசிகர்களுக்கு மே 1ம் தேதி இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் என நம்பலாம்.

Lyca gives double treat on Ajith’s birthday

More Articles
Follows