நாங்க அப்பவே விளக்கு வச்சுட்டோம்.; மோடியை கலாய்க்கிறாரா கஸ்தூரி.?

நாங்க அப்பவே விளக்கு வச்சுட்டோம்.; மோடியை கலாய்க்கிறாரா கஸ்தூரி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress kasthuriநாளை ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றி நமது தேசத்தின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும் என மோடி தெரிவித்திருந்தார்.

அதாவது நம் வாழ்வில் கொரோனா ஏற்றியுள்ள இருளை அகற்றுவோம் என அவர் நேற்று வீடியோவில் கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசியிருந்தார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நடிகர் கமல் கூறியிருந்த கருத்தை ப்ரேக்கிங் செய்தியாக பதிவிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் தன் கருத்தை பதிவிட்டு இருந்தார்.

விளக்கு வைப்போம் இந்த கருத்தை நாங்கள் எப்போதோ கூறி விட்டோம் என்று கூறி கஸ்தூரி நடித்த ’ஆத்மா’ படத்தில் இடம்பெற்ற ’விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்’ என்ற பாடலின் யூடியூப் லிங்க்கை பதிவு செய்துள்ளார்.

இது மோடியை கலாய்க்கிறாரா அல்லது அப்பவே வச்சிட்டோம் இனிமே வைக்க மாட்டோம் என்கிறாரா? என்பதுதான் தெரியவில்லை.

நீச்சலில் ஜெயித்து விஜய்க்காக வைத்திருந்த தொகையை கொரோனா நிதியாக கொடுத்த சிறுவன்

நீச்சலில் ஜெயித்து விஜய்க்காக வைத்திருந்த தொகையை கொரோனா நிதியாக கொடுத்த சிறுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8th Std studying Vijay fan donates for CM Corona relief fund திருப்பூர் அவினாசி நகரைச் சேர்ந்த தம்பதியர் ரவிக்குமார் – ஜோதிமணி,

இவர்களுடைய மகன் உபநிசாந்த் என்பவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்திருக்கறிர்.

அதில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசையும் பெற்றிருக்கிறான்.

தற்போது அவன் பெற்ற தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளான்.

இது குறித்து அவனது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன் உபநிசாந்த்.

எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பான்.

ஏதாச்சும் சாதனை செய் உன்ன கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன்.

அவரைப் பார்க்கப் போக காசு வேணும்ல என சொல்லிட்டு நீச்சல் போட்டியில கிடைச்ச பணத்தை பத்திரமா வச்சிருந்தான்.

அந்த பணத்தை தான் தற்போது முதலமைச்சர் நிதியாக கொடுத்திருக்கிறான் என்றார் அவனது தந்தை.

8th Std studying Vijay fan donates for CM Corona relief fund

20 லட்சம் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.; யாருக்கு தெரியுமா?

20 லட்சம் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.; யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayanthara donates Rs 20 lakhs to Fefsiகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளியே செல்ல முடியாத சூழ்நிலையால் ஒட்டு மொத்த மக்களின் வாழ்வதாரம் முடங்கியுள்ளது.

வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஃபெஃப்சி தொழிலாளர்களின் நலனுக்காக நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்கே. செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று நடிகை நயன்தாரா நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nayanthara donates Rs 20 lakhs to Fefsi

நீ கெத்து தலைவா… டிவி நிகழ்ச்சியிலும் TRP-ஐ எகிற வைத்த ரஜினி

நீ கெத்து தலைவா… டிவி நிகழ்ச்சியிலும் TRP-ஐ எகிற வைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajini sets new record in Television TRP கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது என்றைக்குமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்.

பாலிவுட் கான்களே ரஜினியை தலைவா என்று தான் அழைக்கிறார்கள்.

ரஜினி படங்கள் ரிலீஸ் என்றாலே அது ஒரு திருவிழா கொண்டாட்டம்தான்.

இந்த நிலையில் டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் அண்மையில் ரஜினி கலந்துக் கொண்டார். அதிலும் சாதனை படைத்துள்ளார் தலைவர்.

சமீபத்தில் பியர் கிரில்ஸுடன் “இன்டூ தி வைல்ட்” நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி அறிமுகமானார் ரஜினி.

இது மார்ச் 23 அன்று மாலை 8.30 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பானது.

இப்போது இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய டிஆர்பி (TRP rating) பதிவுகளை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி பங்கேற்ற “இண்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்” நிகழ்ச்சி அன்றைய தினம் 1.2 கோடி மக்களால் கண்களிக்கப்பட்டுள்ளதாம்.

இது முந்தைய 4 வார எபிசோடுகளுடன் ஒப்பிடும்போது பார்வையாளர்களின் விகிதம் 86% அதிகரித்துள்ளது என்கின்றனர்.

இத்துடன் ரஜினி பங்கேற்றதால் அந்த டிஸ்கவரி சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளதாம்.

ஆக டிஸ்கவரி தமிழ் சேனலின் பார்வையாளர்கள் 20 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience research council) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Super Star Rajini sets new record in Television TRP

BREAKING நாங்க அப்ப எடுத்த டார்ச்சுக்கு இப்பதான் மோடி வர்றார். – கமல்

BREAKING நாங்க அப்ப எடுத்த டார்ச்சுக்கு இப்பதான் மோடி வர்றார். – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal statement about Modis latest speech on Corono Warகொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார் நம் பிரதமர் நரேந்திர மோடி,

இந்த உத்தரவு அமலுக்கு வந்து இன்று மார்ச் 3ஆம் தேதியோடு 10 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் வீடியோ வாயிலாக மோடி நாடு மக்களிடையே உரையாற்றினார்.

அதில், ‘ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.

வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும்.

வருகிற ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் உங்கள் வீட்டு விளக்கை அணையுங்கள்.

அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும்.” என பேசியிருந்தார் மோடி.

இந்த நிலையில் மோடியின் பேச்சுக்கு தற்போது இரவில் பதிலடி கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதில்….
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.

Kamal statement about Modis latest speech on Corono War

Kamal Haasan

@ikamalhaasan

 பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1246088638766567425?ref_src=twsrc%5Etfw">April 3, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

தமிழை அடுத்து தெலுங்கிலும் ரீமேக்காகும் ‘அய்யப்பனும் கோஷியும்’

தமிழை அடுத்து தெலுங்கிலும் ரீமேக்காகும் ‘அய்யப்பனும் கோஷியும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayyappanum koshiyumமலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த் படம் வெளியானது. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.

இரண்டு ஆர்மி அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக இப்படத்தில் சொல்லியிருந்தனர்.

இப்படத்தை பல இந்திய மொழிகளில் ரீமேக் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் பெற்றுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியிருக்கிறாராம்.

இவர் ‘ஜெர்சி’, ‘அலா வைகுண்டபுரம்லு’ ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீஜூமேனன் கேரக்டரில் பாலகிருஷ்ணாவையும், பிருத்விராஜ் கேரக்டரில் ராணா டகுபதியையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

More Articles
Follows