தியேட்டர்களில் 100% சீட்… சினிமா வைரஸ் பரவல்…; நடிகைகள் குஷ்பூ-கஸ்தூரி மோதல்

தியேட்டர்களில் 100% சீட்… சினிமா வைரஸ் பரவல்…; நடிகைகள் குஷ்பூ-கஸ்தூரி மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuri khushbooகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் தமிழ் திரைத்துறையினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அனுமதிக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி… ” தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்று. ஒரு சினிமாக்காரி ஆக சிந்திக்கவில்லை.

‘கொரோனா வைரஸை சைனா வைரஸ் என்று அழைக்கிறோம். இந்த அனுமதியால் சினிமா வைரஸ் என்ற பெயரை நாம் பெற வேண்டுமா? இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரையும் திரையுலகையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு….

“தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா பரவும் என்று கவலைப்பட்டால் தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிகிறது.. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை’ என கூறியுள்ளார்.

இதனையடுத்து நடிகை கஸ்தூரி… ‘நான் மக்களை பற்றி கவலைப்படுகிறேன். அவர்கள் உடல் நலன் முக்கியம் என நினைக்கிறேன்.

தியேட்டருக்கு செல்பவர்களால், வீட்டில் இருப்பவர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர ஓட்டல்களிலேயே பாதிக்கப்படும்போது தியேட்டர்களால் எப்படி பாதுக்காக்க முடியும்? என கேட்டுள்ளார்.

khushboo and kasthuri fight in social media

ஜனவரி 10ல் ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; காவலர்கள் கலந்து கொள்ள கூடாது என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

ஜனவரி 10ல் ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டம்..; காவலர்கள் கலந்து கொள்ள கூடாது என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇப்போ இல்ல… எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அந்த அறிவிக்கு வெளியான அன்றே, ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பி ரஜினியை அரசியலுக்கு அழைத்தனர்.

மேலும் தமிழகமெங்கும் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

வருகிற ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ஈ.சந்தானம் விடுத்துள்ள அறிக்கையில்…

“நம் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.2021 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவருகிறது.

அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது, மீறிக் கலந்துகொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Rajini Makkal Mandram warns Rajinikanth fans

நான் சொன்னதை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் காட்டவில்லை..; விரைவில் புதிய ப்ளான்.. ; அனிதா அப்டேட்

நான் சொன்னதை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் காட்டவில்லை..; விரைவில் புதிய ப்ளான்.. ; அனிதா அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anitha sampath bigg boss‘பிக்பாஸ் 4’ சீசனில் பங்கேற்ற அனிதா சம்பத் 84 நாட்களுக்கு பிறகு வெளியேறினார்.

அதன்பிறகு அவரது தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…,

“’நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது முக்கிய தலைப்புகளில் பேசினேன். ஆனால் அவை ஒளிபரப்பப்படவில்லை.

திங்கள் கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றியும், செவ்வாய்க்கிழமை திருநங்கைகளின் தரம் உயர்வது பற்றியும், புதன்கிழமை பிச்சை எடுப்பவர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்தும், வியாழக்கிழமை விவசாயம் பற்றியும், வெள்ளிக்கிழமை விதவைகளின் மறுமணம் பற்றியும் பேசி இருந்தேன். ஆனால் இவை எதுவுமே நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.

எனவே சமூகவலைதளங்கள் மூலம் விரைவில் இது குறித்து பேசவிருக்கிறேன்.

இதற்காக எனக்கு சில நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

என்னுடன் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

பிப்ரவரியில் இருந்து நாம் தொடங்குவோம்” என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.

Anitha opens up about ‘Bigg Boss 4’ deleted content in social medias

‘நந்தா’ படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபலம்

‘நந்தா’ படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார்.

இதற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கவுள்ள ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2001ல் வெளியான பாலா இயக்கிய ‘நந்தா’ படத்தில் ராஜ்கிரண் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nandha movie rajkiran

Veteran Tamil actor to join Suriya 40 ?

மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்தாரிடம் 50 லட்சத்தை திருப்பி கொடுத்து நடிக்க சம்மதித்த விஷால்

மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்தாரிடம் 50 லட்சத்தை திருப்பி கொடுத்து நடிக்க சம்மதித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு.

இவர் அண்மையில் சில தினங்களுக்கு முன் காலமானார்.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்றது.

அப்போது நடிகர் விஷால் தன்னுடைய மேலாளரை அனுப்பியிருந்தார்.

தான் பாலு தயாரிக்க சரவணன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த பட பூஜை படத்தை காட்டியுள்ளார்.

மேலும் அப்படத்தை 6 மாதத்திற்குள் நடத்தி முடித்து அப்பட மூலம் லாபத் தொகையை தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகத தெரிவித்தார்.

இவையில்லாமல் விஷாலுக்கு பாலு வழங்கிய அட்வான்ஸ் தொகையான 50 லட்ச ரூபாயையும் விஷால் பாலு குடும்பத்தினரிடம் திருப்பி கொடுத்தாராம்.

Vishal to help producer Balu family

Vishal Producer Balu

‘மும்பைகர்’ பாலிவுட் படத்தில் காமெடியனாக நடிக்கும் விஜய்சேதுபதி

‘மும்பைகர்’ பாலிவுட் படத்தில் காமெடியனாக நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதிஎந்த வேடம் எந்த மொழி என்றாலும் தயங்காமல் தன் கேரக்டரில் முத்திரை பதிப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.

இவர் கை வசம் தெலுங்கு படம் & மலையாளப் படம் கைவசம் உள்ளது.

தமிழில்… கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்கள் உள்ளது.

தற்போது பாலிவுட்டிலும் படம் நடிக்க ரெடியாகிவிட்டார்.

‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிமுகமான மாநகரம் படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர்.

இப்படத்துக்கு ‘மும்பைகர்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்பட மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க, விக்ராந்த் மெஸ்ஸி, சஞ்சய் மிஷ்ரா நடிக்கின்றனர்.

இதில், மாநகரம் படத்தில் முனிஸ்காந்த் நடித்த ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.

தமிழில் முனிஸுக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும் ஹிந்தியில் காட்சிகளை அதிகப்படுத்துகிறார்களாம்.

Details about Vijay Sethupathi’s role in Mumbaikar film revealed

More Articles
Follows