நேற்று : அமெரிக்கா சென்ற ரஜினியை கமெண்ட் அடித்த கஸ்தூரி.; இன்று : தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்.!

நேற்று : அமெரிக்கா சென்ற ரஜினியை கமெண்ட் அடித்த கஸ்தூரி.; இன்று : தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kasthuriநடிகர் ரஜினிகாந்த் தன் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா செல்வது வழக்கம்.

கடந்த 16 மாதங்களாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா செல்லவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று தன் மனைவி லதாவுடன் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார் ரஜினிகாந்த்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்து இருந்தது அமெரிக்கா.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் எப்படி சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம்? என கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவுகளில் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்.

கஸ்தூரி கூறியிருப்பதாவது:

“இந்தியாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அமெரிக்கா மே மாதமே தடை விதித்துவிட்டது. இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

பிறகு எப்படி, ஏன் ரஜினிகாந்த் இந்தக் காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டார்?

அவர் அரசியலிலிருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்களே, தயவுசெய்து தெளிவுப்படுத்துங்கள்.

தெளிவுக்காக: அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது.

எனவே ரஜினியின் இந்தப் பயணம் கண்டிப்பாக மர்மமே.

இந்திய அரசிடமிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ரஜினி விதிவிலக்குக் கோரி அனுமதி பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது இன்னும் கவலைக்குரியது.

இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் சிகிச்சை தர முடியாத அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உடல் உபாதை? வழக்கமான பரிசோதனை என்றார்கள்.

மாயோ க்ளினிக் என்பது இருதய சிகிச்சைக்கானது.

ரசிகர்களே, ரஜினிகாந்துக்கு விதிமுறைகள் கிடையாது என்றெல்லாம் வந்து சொல்லாதீர்கள்.

சொல்வதற்கே மோசமான விஷயம் அது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் மிக ஜாக்கிரதையாகச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.

இதற்கு தர்க்கரீதியாக ஒரு விளக்கம் இருந்தால் நம் அனைவருக்கும் அது தெரியவரும். ரஜினிகாந்த் உட்பட எவருமே விதிமுறைகளுக்கும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல”.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவுகள் சர்ச்சை ஆனது.

இந்த நிலையில் இன்று கஸ்தூரி தன் ட்விட்டரில் ரஜினி தரப்பில் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

“அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
‘தலைவரை’ வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth #Annathe

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

Kasthuri Questions About Rajinikanth Health

படிப்புக்கு சூர்யா உதவி.; குடும்பத்திற்கு உதவ சூப்பர் ஸ்டாரின் பேரன் முதல்வரிடம் மனு

படிப்புக்கு சூர்யா உதவி.; குடும்பத்திற்கு உதவ சூப்பர் ஸ்டாரின் பேரன் முதல்வரிடம் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே (1935) ஆண்டே தமிழ் திரையுலகில் சாதனை படைத்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

நடிகர், சினிமா தயாரிப்பாளர், கர்நாடக இசைப் பாடகர் என பன்முக திறமைக் கொண்டவர் இவர்.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரே இவர்தான். இவர் நடித்த படமான ஹரிதாஸ் திரைப்படம், தொடர்ந்து 3 ஆண்டுகள் (3 தீபாவளி) திரையரங்கில் ஓடி வரலாற்று சாதனையும் படைத்தது.

இதுதான் தமிழ் சினிமாவின் முதல் படம் எனவும் சொல்லப்படுகிறது.

1959-ம் ஆண்டில் சர்க்கரை நோய் காரணமாக 49 வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமானார்.

அதன்பின்னர் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

கடந்த 2008ல் அவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கினாராம்.

தற்போது இவரது பேரப்பிள்ளைகள் வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு கொடுத்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது..

“என் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை காப்பாற்றினார்.

தற்போது, செக்யூரிட்டி வேலை மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருகிறேன். வாடகை வீட்டில் இருக்கிறோம். எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை.

எனவே எங்களின் நிலையறிந்து, வீட்டு வசதி வாரியத்தில் தமிழக அரசு ஒரு வீட்டை ஒதுக்கினால் அங்கேயே வசிப்போம்.

எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும் என நம்புகிறோம்” என கூறினார்.

இவரின் தங்கை குழந்தையின் படிப்புக்கு நடிகர் சூர்யா உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.

MKT grandson requests TN cm stalin

mkt-grand-son

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியளித்த தியாகராஜன் & பிரசாந்த்

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியளித்த தியாகராஜன் & பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை இருவரும் வழங்கினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன்.

முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்.. கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

Prashanth family donated Rs 10 lakhs to corona relief fund

அஜித் பாடலை தன் படத்திற்கு டைட்டிலாக்கிய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்

அஜித் பாடலை தன் படத்திற்கு டைட்டிலாக்கிய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் சினிமாவில் நடிக்கின்றனர்.

இதில் பிரபலமான ஷிவாங்கி என்பவர் சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் பவித்ரா ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் காமெடியன் சதீஷூக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என டைட்டில் வைத்துள்ளனர். இது அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலின் வரியாகும். (படம் கண்டுக் கொண்டேன் கண்டுக் கொண்டேன்)

இந்த படத்தில் புகழ் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Cooku with comali Ashwin new film title revealed

E4-Q0osVUAcO29W

தமிழகத்தை மூன்றாக பிரித்த கொரோனா ஊரடங்கு..; இன்று ஜூன் 28 முதல் ஜூலை 5 வரை என்னென்ன இயங்கலாம்..?

தமிழகத்தை மூன்றாக பிரித்த கொரோனா ஊரடங்கு..; இன்று ஜூன் 28 முதல் ஜூலை 5 வரை என்னென்ன இயங்கலாம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn lockdownகொரோனா ஊரடங்கு விதிமுறைகள் இன்று ஜூன் 28 முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவல் தன்மையை அடிப்படையாக வைத்து தமிழக மாவட்டங்களை 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று ஜூன் 28 முதல் ஜூலை 5 வரை என்னென்ன இயங்கலாம்..? என்பதை பார்ப்போம்

வகை 1 : கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர்.

வகை 2 :

இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்.

வகை 3 : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

ஜுலை 5 வரை ஊரடங்கு கட்டுபாடுகள்..:

வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6-இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9- இரவு 7 மணி வரை செயல்படலாம்.

அனைத்துத் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களில் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.

அரசு பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் காலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சிக்காக மட்டும் திறக்கப்படும். மேலும் மின்பொருட்கள், கல்வி புத்தகங்கள், பாத்திரக்கடைகள் உள்ளிட்டவை காலை 9- இரவு 7 மணிவரை செயல்பட அனுமதி.

வகை 2 மற்றும் 3 ஆகிய 27 மாவட்டங்களில் துணிக்கடை மற்றும் நகைக்கடைகள் இயங்கலாம்.

வகை 2 மற்றும் 3 ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த 27 மாவட்டங்களிலும் 45 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து சேவை தொடங்கியது.

வகை 3இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கலாம்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கோயில்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.

இந்த 27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை.

இந்த மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10- மாலை 5 மணி வரை திறந்து இருக்கும்.

TN extends lockdown upto july 5th

நயன்தாராவுடன் திருமணம் எப்போது.? விக்னேஷ் சிவன் பதில பாருங்க.. நம்புற மாதிரியா இருக்கு.?!

நயன்தாராவுடன் திருமணம் எப்போது.? விக்னேஷ் சிவன் பதில பாருங்க.. நம்புற மாதிரியா இருக்கு.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivan nayantharaநயன்தாராவின் காதல் இந்த தென்னிந்தியாவே அறிந்த ஒன்றுதான்.

பாஸ்.. பாஸ்.. நீங்க எந்த காதலைப் பத்தி சொல்றீங்க..?

அட இப்ப இருக்கும் காதல் பத்திதான் பாஸ்..

போற போக்குல பிரபுதேவா சிம்பு உள்ளிட்டோரை காதலித்தார் நயன்தாரா. ஆனால் தற்போது இருக்கும் விக்னேஷ் சிவன் காதல் கன்னித்தீவு கதையாக நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நயன்தாராவுடன் திருமணம் எப்போது..? என விக்னேஷ் சிவனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு விக்கி பதிலளிக்கையில்… ‘திருமணம் என்றால் அதிக செலவாகும், எனவே அதற்காக நாங்கள் தற்போது பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி கொரோனா பிரச்சினை தீர்ந்தவுடன் தான் திருமணம்’ என கூறியுள்ளார்.

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். விக்னேஷ் சிவனும் இரண்டு படங்களை தயாரித்தும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

கோடிகளில் புரளும் இவர்கள் திருமணத்திற்கு பணம் சேர்த்து வருவதாக கூறும் பதில் நம்புற மாதிரியா இருக்கு..?

மேலும் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…

நயன்தாராவின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு..?

’இரவு டின்னர் முடிந்ததும் அவரே அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைப்பார்’

நீங்கள் நயன்தாராவுக்கு கொடுத்த முதல் பரிசு என்ன? என்ற கேள்விக்கு…

’தங்கமே பாடல்’

இவ்வாறு பதில் அளித்தார் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan talks about his marriage

More Articles
Follows