சினிமா எடுத்தா போதாது.. இன்புளுயன்ஸ் தான் வெற்றி தரும் – நடிகர் கரிகாலன்

சினிமா எடுத்தா போதாது.. இன்புளுயன்ஸ் தான் வெற்றி தரும் – நடிகர் கரிகாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்”.

கரண், வடிவேலு நடித்த ‘காத்தவராயன்’ & கதிர், ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’ & கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த ‘இ.பி.கோ 302’ போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் நாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். நாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘கடத்தல்’
ஜூலை மாதம் வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது

இந்த நிகழ்வினில்

தயாரிப்பாளர் தமிழ்வாணன் பேசியதாவது…

இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. கடத்தல் படத்தில் எனது நண்பர் சலங்கை துரை அவர்கள் சின்ன கதாப்பாத்திரம் என்று தான் அழைத்தார்கள் ஆனால் இரண்டு நாயகர்களில் ஒருவராக என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. இப்படத்தில் பணிபுரிந்துள்ள அனைவரும் என் நண்பர்கள். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் தன்சீலன் பேசியதாவது…

பல சாதனைகள் படைத்த ஜாம்பவான்கள் இங்கு வந்துள்ளார்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். இந்தப்படத்திற்கு இசையமைத்தது விபத்தாக நடந்த ஒன்று.

நான் ஓசூர் பக்கம் இருந்தேன் நண்பர் தம்ழிவாணன் மூலம் தான் இயக்குநர் அறிமுகம் இந்தப்படம் மூன்று மாநிலங்களைச் சம்பந்தப்படுத்தி நடந்த உண்மைச்சம்பவம்.

என்னிடம் சொன்ன போது கதை பிடித்து இசையமைத்தேன். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக வெற்றிபெறும் நன்றி.

சின்னத்திரை இயக்குநர் சங்கத் தலைவர் தளபதி பேசியதாவது…

இந்தப்படத்தின் இயக்குநர் சலங்கை துரை அவர்களைக் கொஞ்ச நாட்களாகத் தெரியும் மிக நல்ல மனிதர். அவரது நல்ல மனதிற்குக் கண்டிப்பாகப் படம் பெரிய வெற்றி பெறும். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் கரிகாலன் பேசியதாவது…

ஒரு படம் வெற்றி பெறுவது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கையில் தான் உள்ளது. நானும் ஒரு படத்தை எடுத்துள்ளேன். சில படங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஆனால் வசூல் செய்யாது. படம் சுமாராக உள்ளது என்று சொல்லுவார்கள். ஆனால் வசூல் அதிகமாக இருக்கும்.

பத்திரிக்கையாளர்கள் தான் அயோத்தி மற்றும் போர் தொழில் போன்ற படங்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காரணத்தினால் வெற்றி பெற்றது.

நாம் படத்தை எடுத்து முடித்தால் மட்டும் போதாது மக்களுக்குப் புதிதாக எதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும்.. அதை நான் இந்த குழுவிற்கு கூறுகிறேன்.

இப்போதெல்லாம் (ஆதிக்கம்) இன்புளுயன்ஸ் தான் படத்தை வெற்றி பெறச் செய்கிறது, இயக்குநர் சலங்கை துரை மற்றும் தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் சலங்கை துரை பேசியதாவது…

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் எங்களை வாழ்த்துகின்றனர் அதுவே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி , நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதே பத்திரிக்கையாளர் தான் நீங்கள் எங்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் படம் உங்களுக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கும் படத்தில் நடித்துள்ள அனைவரும் புதுமுக நடிகர்கள் எங்களின் இந்த முயற்சியை நீங்கள் தான் ஆதரிக்க வேண்டும் நன்றி.

Influence will make movies hit says Actor Karikalan

அரசியலில் விஜய் என்ன செய்வார்.? தியேட்டருக்கு போனா ரூ.1000 செலவு.. உதயநிதி உதவுவாரா.? – கே.ராஜன்

அரசியலில் விஜய் என்ன செய்வார்.? தியேட்டருக்கு போனா ரூ.1000 செலவு.. உதயநிதி உதவுவாரா.? – கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சலங்கை துரை இயக்கியுள்ள ‘கடத்தல்’ பட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஜூலை மாதத்தில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…

பேரரசு பேசும்போது ஜாதிப்படங்கள் வெண்டாம் என்றார் ஜாதிப்பிரச்சனை வேண்டாமே அதை நம் வீட்டுக்குள் வைத்துக்கொள்வோம் நாட்டுக்குள் வேண்டாம் அதிலும் ஜாதிப்பிரச்சனையை உங்கள் வலியைச் சொல்லுங்கள் ஆனால் அடுத்தவருக்கு வலியை ஏற்படுத்தாதீர்கள் என்றார். இன்னும் பழங்கதையைப் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து காமராஜர் செய்து தந்த பல திட்டங்கள் வழியே, பலர் முன்னேறிவிட்டார்கள் 70 சதவீதம் பேர் முன்னேறி, பல பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் 30 சதவீதம் பேர் இன்னும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.

அவர்களும் மேலே வர வேண்டும் அதற்காக அதையே பேசி பிரச்சனையாக்காதீர்கள். அம்பேத்கர், கலைஞர் எல்லோரும் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தார்கள், அது மாதிரி எல்லோரும் வரட்டும்.

பழங்கதை பேச வேண்டாம், சினிமாவில் இருக்கும் பிரச்சனையை பேசுவோம் 100 ரூபாய் டிக்கெட் 200 ரூபாய் அதைப் பேசுவோம். சில நாட்களாக விஜய் படங்களில் நடிக்க மாட்டார் என நியூஸ் வருகிறது. அவருக்கு நார்மலான 49 வயது தான். அவர் தமிழர் அவர் தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும், அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்.

அரசியலும் செய்யட்டும் ஆனால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கட்டும். சினிமா இப்போது கஷ்டத்தில் இருக்கிறது, ஒரு குடும்பம் தியேட்டருக்கு போனால் 1000 ரூபாய் செலவாகிறது.

அதை அமைச்சர் உதயநிதி போன்றவர்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமாவை இன்னும் ஒரு தொழிலாக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. அதையெல்லாம் பாஜகவில் சேர்ந்த சினிமா துறை நண்பர்கள் கோரிக்கை வைத்து மாற்ற வேண்டும்.

கடத்தல் இந்தப்படத்தில் குழந்தைக்கடத்தல் பற்றி ஒரு நல்ல விசயத்தைச் சொல்லியுள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

Producer K Rajan talks about Vijay and Udhayanidhi

OFFICIAL : ‘சந்திரமுகி 2’ படத்துடன் மோதும் ‘மார்க் ஆண்டனி’.; ஜெயிப்பது யார்.?

OFFICIAL : ‘சந்திரமுகி 2’ படத்துடன் மோதும் ‘மார்க் ஆண்டனி’.; ஜெயிப்பது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிட்டு படங்களை இயக்கி பீக்கிற்கு சென்றவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

மேலும் இவர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான பிரபுதேவாவின் ‘பகிரா’ என்ற பிட்டு படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் ஆதிக் இயக்கத்தில் தற்போது வெளியீட்டுக்கு உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

இந்தப் படத்தில் விஷால் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர். டைம் ட்ராவலை மையப்படுத்தியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாளில் தான் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படமும் வெளியாக உள்ளது.

லைக்கா தயாரித்துள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chandramukhi 2 clash with Mark Antony

சீன் போடும் ‘பிக் பாஸ்’ ஷிவானி..; ‘பம்பர்’ அடிப்பதற்குள்ளே இந்த பந்தாவா.?

சீன் போடும் ‘பிக் பாஸ்’ ஷிவானி..; ‘பம்பர்’ அடிப்பதற்குள்ளே இந்த பந்தாவா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

பகல் நிலவு, இரட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல டிவி் தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

இதன் பின்னர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றதன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார்.

பல வருடங்களாக சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்த இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் இவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

அதன் பின்னர் ‘வீட்ல விசேஷம்’, ‘டிஎஸ்பி’, ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஆகிய படங்களிலும் ஷிவானி நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ஷிவானி கதையின் நாயகியாக நடித்துள்ள ‘பம்பர்’ என்ற படம் வருகிற ஜூலை 7 தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு ஷிவானி வந்திருந்தார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.

நேற்று ஜூலை 4 தேதி பம்பர் படத்தின் பிரஸ் ஷோ திரையிடப்பட்டது. இதற்கு படத்தின் நாயகன் வெற்றி இயக்குனர் செல்வகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் எடிட்டர் பாடலாசிரியர் என பலரும் வந்திருந்தனர்.

ஆனால் நாயகி ஷிவானி வரவில்லை. தற்போது தான் ஷிவானி நடித்துள்ள திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால் அவர் வரவில்லை என்பதற்கான காரணங்களை நாம் கேட்டறிந்த போது பத்திரிகையாளர் காட்சிக்கு கூட வருவதற்கு கேரவன் கேட்டுள்ளார் ஷிவானி. மேலும் அவர் எங்கு சென்றாலும் கேரவன் ஏற்பாடு செய்தால் மட்டுமே வருவதாக கண்டிசன் போடுகிறாராம்.

ஒரு முன்னணி நடிகையாக வருவதற்கு முன்பே இப்படி சீன் போடுகிறாரே ஷிவானி என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Bigg Boss fame Shivani Narayanan controversy in Bumper promotion

RISE TO RULE கமல் வினோத் இணையும் அரசியல் படம்.? சொல்லவே இல்ல.?!

RISE TO RULE கமல் வினோத் இணையும் அரசியல் படம்.? சொல்லவே இல்ல.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்த படப்பிடிப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் தற்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக கமல் நடிக்க உள்ளார்.

இதற்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் #KH234 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கமல். இது குறித்த அறிவிப்பும் வெளியானது.

ஆனால் இதனிடையில் நேற்று ஜூலை 4 தேதி கமலின் 233வது படத்தின் அறிவிப்பும் வெளியானது.

இந்த படத்தை வினோத் இயக்குகிறார். இதன் சப்டைட்டில் ‘ரைஸ் டு ரூல்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது கமலின் அரசியல் படமாக இருக்கும் எனவும் இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

கமல் - வினோத்

Kamal 233 movie will be directed by H Vinoth

அருமையான பயணம்.; அற்புதமானவர்களுடன் பணி.; ரஞ்சித்தின் ‘தங்கலான்’ குறித்து விக்ரம்

அருமையான பயணம்.; அற்புதமானவர்களுடன் பணி.; ரஞ்சித்தின் ‘தங்கலான்’ குறித்து விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ நடித்து வருகிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது.

சிறிது காலம் ஓய்வுக்கு தற்போது மீண்டும் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரம் இணைந்துள்ளார்.

தங்கலான்

இந்நிலையில், ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது! என்ன ஒரு பயணம்!! மிகவும் அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றேன். முதற்கட்ட படப்பிடிப்பிற்கும், இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கும் இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித். ஒவ்வொரு நாளும்.” என பதிவிட்டுள்ளார்.

தங்கலான்

vikram’s Thangalaan movie shooting wrapped

More Articles
Follows