இங்க சுயவிளம்பரம் தானிருக்கு.. கேரளாவை உயர்த்தி தமிழகத்தை தாழ்த்திய கஸ்தூரி

இங்க சுயவிளம்பரம் தானிருக்கு.. கேரளாவை உயர்த்தி தமிழகத்தை தாழ்த்திய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuriஇந்தியாவில் கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்து வருவதை தினம் தினம் பார்க்கிறோம்.

கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் இன்னும் பலர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சுற்றி திரிவதை பார்க்கிறோம்.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகளவில் இருந்தாலும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது எனலாம்.

தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் மற்ற அரசியல் கட்சிகள் குறை சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன் கருத்தை பதிவு செய்துள்ளார். அதில்…

அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் – 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினரயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு’ என்று பதிவு செய்துள்ளார்.

சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் நிதியுதவி

சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal aggarwalநடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

மேலும் கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.

மூம்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

தயவு செஞ்சு நடிக்காதீங்க.. மணிரத்னத்திடம் குஷ்பூ வேண்டுகோள்..

தயவு செஞ்சு நடிக்காதீங்க.. மணிரத்னத்திடம் குஷ்பூ வேண்டுகோள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushbu mani ratnamபிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

மணிரத்னம் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லை. ஆனால் ரசிகர்களுடன் உரையாட அவர் தன் மனைவி சுஹாசினியின் அக்கௌண்ட்டில் நேரலைக்கு வந்தார்.

அப்போது ரசிகர்கள் பலர் கலந்துரையாடினர்.

அப்போது ஒருவர் தங்களுக்கு இதுவரை நடிக்க ஆசை வரவில்லையா? யாரும் உங்களை நடிக்க அழைக்கவில்லையா? என்று கேட்டுள்ளார்.

அப்போது நடிகை குஷ்பூ நேரலையில் கலந்துக் கொண்டுள்ளார்.

“வேண்டாம், நடிக்காதீர்கள். நடிக்காதீர்கள்” என்று கூறவே… மணிரத்னம், “பார்த்தீர்களா, நீங்கள் இப்படி அதிர்ச்சி ஆக வேண்டாம் என்றுதான் நான் நடிக்கவில்லை” என பதிலளித்தார்.

அதற்கு குஷ்பு, “அப்படியில்லை, ஏற்கெனவே உங்கள் படங்களைப் பார்த்தால் நாங்கள் தூங்குவதில்லை. நீங்க நடிக்க ஆரம்பிச்சா அவ்வளவுதான்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் குஷ்பூ.

உடனே இதனால்தான் நான் நடிக்கவில்லை என மணிரத்னம் கிண்டலாக கூறினார்.

குஷ்பூவின் மகள் அனந்திகா மணிரத்னத்தின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரின் படங்கள் மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.

இயற்கையே மதிக்கிறோம்… இத்தோடு விட்டுவிடு.. கொரோனாவுக்கு வடிவேலு கோரிக்கை பாட்டு

இயற்கையே மதிக்கிறோம்… இத்தோடு விட்டுவிடு.. கொரோனாவுக்கு வடிவேலு கோரிக்கை பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vadiveluகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

இந்த ஊரடங்கால் மக்கள் வீட்டிலிருந்தபடியே பொழுதை போக்கி வருகின்றனர்.

மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் சாலைகளில் வாகனங்கள் இல்லை. மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. பறவைகளின் குரல்களை கேட்க முடிகிறது.

வாகன இரைச்சல் இல்லை. மேலும் காற்று மாசு இல்லை.

இந்த ஊரடங்கினால் தினக்கூலி மக்கள் பாதிக்கப்பட்டாலும் இயற்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பாடல் வரிகளில் சில…

காடுகளை அழித்தோம்

மண் வளம் கெடுத்தோம்

நீர்வளம் ஒழித்தோம்

நம் வாழ்க்கை தொலைத்தோம்

வைரஸாய் வந்தே நீ

பாடம் புகட்டி விட்டாய்

இயற்கையை மதிக்கின்றோம்

இத்தோடு விட்டுவிடு…

என பாடியுள்ளார் வடிவேலு.

விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு லாரன்ஸ் 15 லட்சம் உதவி; நெகிழ்ச்சியில் டிஆர்

விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு லாரன்ஸ் 15 லட்சம் உதவி; நெகிழ்ச்சியில் டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrence TRரஜினி ஆசியுடன் பி. வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாரன்சுக்கு அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் அளிக்க, அதை அப்படியே கரோனா நிவாரண நிதிக்காக கொடுத்தார் லாரன்ஸ்.

இதன்பின்னர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் தான் நடிக்கவுள்ள ஒரு சம்பளத்திலிருந்து 25 லட்ச ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையை அளித்துள்ள்ளார் லாரன்ஸ்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் இயக்குனர் டி. ராஜேந்தர் கூறியிருப்பதாவது:

“எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர்.

தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித்தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம்.

அந்தத் திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் படம் எடுக்காமல் இருந்த நான் ‘இன்னிசைக் காதலன்’ என்ற படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருந்தேன்.

ஆனால் கரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது. நாடெங்கும் ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில் என் நினைவுக்கு வந்தவர் என் நண்பரும் நடிகருமான ராகவா லாரன்ஸ். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்.

இந்நிலையில் எங்கள் சங்கத்தின் நிலை குறித்த என் தர்மசங்கட நிலைமையை எடுத்துரைத்தேன். அவர் உடனே “அண்ணே, உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றார். “தம்பி எனக்கு எதுவும் வேண்டாம். என் சங்கத்திலிருக்கும் நலிவடைந்தவர்களுக்காகச் செய்தால் போதும்” என்றேன்.

உடனே ராகவா மனமுவந்து எங்கள் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைத்தார்.

நேற்று நடந்ததை இன்று மறந்துவிடும் இந்த உலகத்தில் கடந்த காலத்தை மறக்காத அந்த கனிந்த உள்ளத்துக்கு நன்றி. அவரின் தர்ம சிந்தனையும், தயாள குணமும் தழைக்கட்டும்.

என் சார்பாகவும் எங்கள் சங்க நிர்வாகிகள் சார்பாகவும் அனைத்து சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றி

நண்பர் ராகவா லாரன்ஸ் போன்ற நல்ல மனிதநேயம் படைத்த நெருங்கிய திரையுலகத்தினரிடம் சங்க நல அறக்கட்டளைக்காக நிதி கேட்டு இருக்கிறேன். அவர்களும் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள்.

நலிவடைந்த விநியோகஸ்தர்களுக்கு கரோனா பாதிப்பு சமயத்தில் உதவுதோடு அல்லாமல் தொலைநோக்குப் பார்வையோடு மாதா மாதம் ஒரு சின்ன உதவித்தொகை வழங்க முயற்சிக்கிறோம்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அல்வா தின்ன ஆசையா: MGR பட இயக்குனருடன் தேவா & யோகிபாபு

அல்வா தின்ன ஆசையா: MGR பட இயக்குனருடன் தேவா & யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vc guhanathanமறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த புதிய பூமி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வி.சி.குகநாதன்.

இதனையடுத்து இதுவரை 250 படங்களில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கிட்டதட்ட 55 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வருகிறார்.

மேலும் சில ஆண்டுகள் பெப்சி தலைவராக பணியாற்றியிருக்கிறார் வி.சி.குகநாதன்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.

அல்வா தின்ன ஆசையா என்ற படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி வருகிறாராம்.

புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்க யோகிபாபு, வையாபுரி, சிங்கம்புலி, ரவிமரியா, மயில்சாமி, சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பிரபல காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். தேனிசை தென்றல் தேவா இசையமைக்கிறார்.

சாய் சிவா என்பவர் இந்த படத்தை இயக்க கிளாமர் சினி கைடு நிறுவனம் தயாரிக்கிறது.

More Articles
Follows