விஜய் சேதுபதியின் ஹிட் பட இயக்குனர் உடன் கை கோர்க்கும் கார்த்தி

விஜய் சேதுபதியின் ஹிட் பட இயக்குனர் உடன் கை கோர்க்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் அனு இம்மானுவேல் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் கார்த்தியின் தீபாவளி வெளியீடாக தயாராகி வருகிறது.

முன்னதாக இன்று கார்த்தியின் 26வது படத்தை தயாரிப்பாளர் பூஜையுடன் துவக்கி வைத்தார். ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில். ‘சூது கவ்வும்’ மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ புகழ் இயக்குனர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. பாலிவுட் நடிகை காயத்ரி பரத்வாஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

sethupathi

Karthi’s next film announcement is here

கமலை கன்ஃபார்ம் செய்த PS2.. அப்போ ரஜினி இல்லையா.? ரசிகர்கள் டென்ஷன்!

கமலை கன்ஃபார்ம் செய்த PS2.. அப்போ ரஜினி இல்லையா.? ரசிகர்கள் டென்ஷன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு 2022ல் வெளியானது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியள்ள இந்த படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி சரத்குமார் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி பார்த்திபன் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் & டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ பட பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

கடந்தாண்டு ‘பொன்னியின் செல்வன் 1’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

எனவே PS2 படத்தின் இசை விழாவிலும் ரஜினி கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது கமல் போஸ்டரை மற்றும் படக்குழு வெளியிட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய்லர்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே அவர் விழாவுக்கு வருவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

பி எஸ் 1 இசை விழாவில் நடிகர் ரஜினியின் பேச்சும் நடிகர் ஜெயராமின் காமெடி கலந்த மிமிக்ரியும் பெரிய அளவில் ரீச் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal to unveil the music and trailer of PS2

‘பொன்னியின் செல்வன் 2’ தமிழக உரிமையை தட்டி தூக்கிய உதயநிதி

‘பொன்னியின் செல்வன் 2’ தமிழக உரிமையை தட்டி தூக்கிய உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு 2022ல் வெளியானது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியள்ள இந்த படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி சரத்குமார் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி பார்த்திபன் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Red Giant Movies bagged Tamil Nadu theatrical distribution for Ponniyin Selvan 2

LCU வை நோக்கி செல்கிறதா லியோ. படப்பிடிப்பில் இணைந்தார் விக்ரம் பட நடிகர் !

LCU வை நோக்கி செல்கிறதா லியோ. படப்பிடிப்பில் இணைந்தார் விக்ரம் பட நடிகர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள் அடங்கிய லியோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் விரைவில் துவங்கி செட் வேலைகள் நடந்து வருகிறது.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ‘லியோ’ படத்தின் நட்சத்திரக் குழுவில் இணையவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனரின் முந்தைய படங்களான ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்களை இணைக்கும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் கீழ் இந்தப் படம் வருமா என்ற யூகம் நீண்ட நாட்களாகவே உள்ளது. ஃபஹத் களமிறங்கியதால் LCU கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

‘Vikram’ movie star joining Vijay’s ‘Leo’ further confirming LCU?

3வது முறையாக இணைந்த மகேஷ்பாபு & திரிவிக்ரம்.; டைட்டில் இல்லாமலே ரிலீஸ் தேதி அறிவிப்பு

3வது முறையாக இணைந்த மகேஷ்பாபு & திரிவிக்ரம்.; டைட்டில் இல்லாமலே ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28.

இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்.

இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி, இதுவரையில் காணாத மகேஷ்பாபுவை ரசிகர்களுக்காக திரையில் கொண்டு வந்துள்ளார்.

ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதியை, மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும், #SSMB28 திரைப்படம் ஜனவரி 13, 2023 அன்று சங்கராந்தி விழாக்கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகும். இந்த போஸ்டரில் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றம் மற்றும் லேசான தாடியுடன் அழகின் உருவமாக, சிகரெட் புகைத்து கொண்டு சாலையில் நேர்த்தியாக நடந்து செல்கிறார்.

மேலும் போஸ்டரில் அடியாட்கள் அவரை வணங்குகிறார்கள். இந்த போஸ்டர் பொதுமக்களையும், திரைப்பட ரசிகர்களையும் ஒரு சேர மகிழ்விக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தைத் தயாரிக்கிறார். குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த இந்த என்டர்டெய்னரில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

மகேஷ் பாபுவை இதுவரை பார்த்திராத கேரக்டரில் காண்பிக்க, இயக்குநர் திரிவிக்ரம் தனித்தன்மையுடன் கூடியதொரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

#SSMB28 படத்தை தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்கிறார், கலை இயக்குநராக AS பிரகாஷ், இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் S தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக PS வினோத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

SSMB 28 to release on 13 January 2024

BREAKING : ஷங்கர் உடன் இணைந்து கேம் சேஞ்சர் ஆன ராம் சரண். RC 15 டைட்டில் வெளியானது!

BREAKING : ஷங்கர் உடன் இணைந்து கேம் சேஞ்சர் ஆன ராம் சரண். RC 15 டைட்டில் வெளியானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் அரசியல் திரில்லர் படத்திற்கு கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தற்காலிகமாக RC15 என்று பெயரிடப்பட்டது.

மார்ச் 25 அன்று, ராம் சரணின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இன்று, ராம் சரணின் பிறந்தநாளில், அவர் ஷங்கர் படத்தில் நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்தார். இதற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, மேலும் ராம் சரண் தலைப்பை வெளிப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது தற்சமயம் வைரலாகி வருகிறது.

Ram Charan’s next with Kiara Advani titled Game Changer

More Articles
Follows