குழந்தைகள் தினத்தில் கார்த்தியின் ‘ஜப்பான்’ பர்ஸ்ட் லுக்

குழந்தைகள் தினத்தில் கார்த்தியின் ‘ஜப்பான்’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார்.

இதில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய அன்பறிவ் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகின்றனர்.

இதன் படப்பிடிப்பு பூஜை உடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், ஜப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை (குழந்தைகள் தினம்) நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

Karthi’s ‘Japan’ First Look on Children’s Day

RRR படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜமௌலி

RRR படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் உலக அளவில் பிரம்மாண்டமாக உயர்த்திய இயக்குனர்களில் முக்கியமானவர் ராஜமௌலி என்று சொன்னால் அது மிகையல்ல.

மாவீரன், நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் மைல்கல் படங்களாக உள்ளன.

இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் உலகளவில் ரூ.1000+ கோடிக்கும் அதிகமாகவே வசூலித்தது.

ராஜமவுலி இயக்கிய இந்த படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஸ்ரேயா, ஆலியா பட், அஜய் தேவகன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் இந்த படம் இடம் பெற்றது.

தற்போது இந்த படத்தை வெளிநாடுகளில் அயல்நாட்டு மொழிகளில் வெளியிட பட பிரமோஷனில் ராஜமவுலி ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர் பங்கு பெற்ற ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்…

“ஆர்ஆர்ஆர் படம் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதையை ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த பிரம்மாண்ட இயக்குனர்.

Here is update for RRR movie Part 2

சங்கரதாஸ் சுவாமி நூற்றாண்டு நினைவு ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி ஆட்டம்

சங்கரதாஸ் சுவாமி நூற்றாண்டு நினைவு ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடகத் தந்தை என அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு (13.11.1922 – 13.11.2022) நினைவு தினத்தையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, ராஜேஷ், மனோபாலா, ஸ்ரீமன், பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விஜய் ஆண்டனி

இந்த நிலையில் புதுச்சேரியிலும் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது காந்தி வீதியிலிருந்து சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடம் வரை ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் கரகாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அந்த நடன கலைஞர்களுடன் ஆட்டம் போட்டு அவர்களை மகிழ்வித்தார்.

விஜய் ஆண்டனி

Vijay Antony dance at Sankaradas Swami 100th year Celebration

80s REUNION : 11வது ஆண்டில் ஒன்றுக்கூடி ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்

80s REUNION : 11வது ஆண்டில் ஒன்றுக்கூடி ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் கலக்கிய நட்சத்திரங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம்.

இந்த சந்திப்பின் மூலம் இவர்கள் தங்கள் நட்பினை புதுப்பித்து கொண்டு வருகின்றனர்.

இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே ஓர் இடத்தில் ஒன்று கூடி தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சந்திப்பில் இவர்களுக்கு ஒரு டிரஸ் கோடு கொடுக்கப்படும். அதாவது ஒரே கலரில் உடையணிந்து அனைவரும் ஒன்றாக கலந்து கொள்வர்.

10ஆம் ஆண்டு சந்திப்பை நடிகர் சிரஞ்சீவி தலைமையில் ஒன்றுக் கூடி கொண்டாடினர்.

சிரஞ்சீவி

2020 மற்றும் 2021 ஆண்டுகளில் கொரோனா லாக்டோன் பிரச்சனையால் இவர்கள் ஒன்றுகூடவில்லை.

தற்போது 2022 ஆம் ஆண்டு இவர்கள் ஒன்றுகூடினர். இதற்கான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் ஆரஞ்சு நிறங்களும் டிரஸ் கோடு அறிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர்கள் பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர்.

இதில் சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், ராஜ்குமார், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ரஜினிகாந்த், மோகன்லால் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவில்லை.

சிரஞ்சீவி

1980s Indian Cinema Stars Re Union

பின்னணி இசையில் முன்னணியில் பிரசாத்.; ‘காட்டேரி-யில் கதற வைத்து மிரளில் மிரள வைத்த இசையமைப்பாளர்

பின்னணி இசையில் முன்னணியில் பிரசாத்.; ‘காட்டேரி-யில் கதற வைத்து மிரளில் மிரள வைத்த இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவைப் பொறுத்தவரை நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுப்பது இசை தான்.

பின்னணி இசை கொடுக்கப்பட்டால் தான் நம்மால் அந்த காட்சிகளுடன் ஒன்றி கதையுடன் பயணிக்க முடியும்.

சோக கீதங்கள் ஆகட்டும்.. சந்தோஷ ராகங்கள் ஆகட்டும்.. எதுவாக இருந்தாலும் அந்த காட்சியின் வழியையும் அந்த காட்சியின் சந்தோஷத்தையும் கொடுப்பதும் இசை தான்.

அந்த வகையில் நவம்பர் 11ல் வெளியான ‘மிரள்’ படத்தில் தன் இசையால் நம்மை மிரள வைத்தவர் தான் எஸ் என் பிரசாத்.

சமீப காலமாக இவரது பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்ட வருகிறது.

‘வீரா’, ‘காட்டேரி’, ‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ உள்ளிட்ட பல படங்களிலும் தன் இசையால் கவர்ந்தவர் தற்போது நம்மை மிரள வைத்துள்ளார்.

சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன் நடித்த ‘மிரள்’ படத்தில் இசையால் மிரட்டி காட்சிகளுக்கு உயிரோட்டி இருந்தார்.

முக்கியமாக இடைவேளைக்குப் பிறகு இவர் கொடுத்த பின்னணி இசை ரசிகர்களை சீட்டு நுனியில் அமர வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

தன் பின்னணி இசையால் நம்ம மிரள வைத்த SN பிரசாத் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துவோம்..

SN Prasad A new promising Music composer

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்..!

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படம் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடங்கியது.

படத்தின் இரண்டாம் பாகத்தில் இருக்கும் முக்கியமான காட்சிகள் சிலவற்றை மீண்டும் எடுக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இதன் படப்பிடிப்பு 7 முதல் 10 நாட்கள் வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாகும் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Mani Ratnam’s Ponnyin’s Selvan second part new update

More Articles
Follows