காலா படம் ரிலீஸ் ஆகும் முன்பே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.
ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிப்பதாக செய்தி வெளியானது.
ஆனால் இந்த தகவலில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.