3வது வாரத்திலும் களை கட்டும் ‘கன்னி மாடம்’..; அதிகரிக்கும் தியேட்டர்கள்..

3வது வாரத்திலும் களை கட்டும் ‘கன்னி மாடம்’..; அதிகரிக்கும் தியேட்டர்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanni Maadam stillsரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆன படம் கன்னிமாடம். இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் – சாயா தேவி நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்திருந்தது.

படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது. கன்னிமாடம் ரிலீஸ் ஆகாத பல ஊர்களில் 6ம் தேதி சுமார் 30 தியேட்டர்களில் வெளியாகிறது கன்னிமாடம்.

தமிழ் சினிமா வரலாற்றில் பிரலங்கங்ள் இல்லாமல் அறிமுக நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கடந்த நிலையில் 3வது வாரத்தில் மீண்டும் 30 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் ஒரே படம் கன்னிமாடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணம் படத்தின் மீதான கருத்தும், சாதி வெறிக்கும், ஆணவ கொலைக்கும் எதிராக பேசுவதும்தான்.

தியேட்டர்கள் அதிகரித்ததை தொடர்ந்து படக்குழு உற்சாகத்தில் உள்ளது…

டிக் டாக்கில் தல அஜித் பாட்டுக்கு சிம்ரன் போட்ட ஆட்டம்.; வைரலாகும் வீடியோ!

டிக் டாக்கில் தல அஜித் பாட்டுக்கு சிம்ரன் போட்ட ஆட்டம்.; வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran in tiktokகமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன்.

இவரை இடுப்பழகி எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி

இறுதியாக ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.

சிம்ரன் தற்போது டிக்டாக்கில்லும் கால் பதித்துள்ளார்.

சமீபத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலை கிரியேட் செய்துள்ளார்.

எதிரும் புதிரும் – 1999 என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் நடிகர் ராஜு சுந்தரத்துடன் சிம்ரன் இந்த பாடலில் நடனமாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மற்றொரு வீடியோவில் தல அஜித்துடன் சேர்ந்து சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம் பெற்ற ஏப்ரல் மாதத்தில்…. என்ற பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

அந்த பாடலும் வைரலாகியுள்ளது.

திருமணமாகி விவாகரத்து ஆனவரை கட்டிக்க போறாரா அனுஷ்கா..? ரசிகர்கள் அதிர்ச்சி.!

திருமணமாகி விவாகரத்து ஆனவரை கட்டிக்க போறாரா அனுஷ்கா..? ரசிகர்கள் அதிர்ச்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anushka marriageரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் அனுஷ்கா.

தமிழ், தெலுங்கில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.

ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

எனவே அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் என தகவல்கள் வந்துள்ளன.

அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனுஷ்காவுக்கே இந்த நிலைமையா? என கேட்டு வருகின்றனர்.

மூடிட்டு போடா.; தன் நடுவிரலை காட்டி ரசிகரை திட்டிய பிக்பாஸ் ரித்விகா

மூடிட்டு போடா.; தன் நடுவிரலை காட்டி ரசிகரை திட்டிய பிக்பாஸ் ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Riythvikaரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் பிரபலமானார் ரித்விகா.

தொடர்ந்து ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார்.

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.

அதன் பிறகும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை..

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக கபாலி நடிகை ரித்விகா

இந்த நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்னார்.

அதற்கு ரசிகர் ஒருவர் பட வாய்ப்பு இல்லையா? என கேட்டுள்ளார்.

அதற்கு ரித்விகா மூடிட்டு போடா என தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி உள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உங்களை உருவாக்கியவர்கள் ரசிகர்கள் தான், அவர்களது கேள்விக்கு உங்களால் பொறுமையாக பதில் சொல்லவில்லை என்றால் எவ்வளவு பெரிய இடத்திற்குச் சென்றாலும் சீக்கிரமே திரும்பி கீழே வர வேண்டி இருக்கும் என தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘. சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்.

இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘. சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akka Kuruvi shootதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துவரும் படம் ‘அக்காகுருவி’. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. உலகத்தரவரிசையில் இப்படத்துக்கு ரீ-ரெகார்டிங் செய்து வருகிறார் இளையராஜா. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார். படத்தை பார்த்த பின் தான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இளையராஜா.

இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அது அமையும். மொத்தம் 11 பாடல்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்.

குழந்தைகளின் கோடை கொண்டாட்டமாக மே மாதம் இப்படத்தை திரைக்குகொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

கதை:- மஜித் மஜிதி

பாடல்கள் & இசை :- இளையராஜா

இயக்கம்:- சாமி

விஜய்யின் எனர்ஜி ரகசியத்தை கண்டுபிடித்தே ஆகனும்.. – ஹிருத்திக் ரோஷன்

விஜய்யின் எனர்ஜி ரகசியத்தை கண்டுபிடித்தே ஆகனும்.. – ஹிருத்திக் ரோஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hrithik roshan vijayபாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

இவர் நேற்று சென்னைக்கு வந்திருந்தார்.

அப்போது நடிகர் விஜய் எனர்ஜியான டான்ஸ் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.

நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி.. – லோகேஷ் கனகராஜ்

அவர் இந்தளவு எனர்ஜியாக டான்ஸ் ஆடுவதற்கு என்ன டயட் திட்டங்களை வைத்துள்ளார் என்ற ரகசியத்தை தான் கண்டுபிடித்த ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள் அந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.

More Articles
Follows