கமல் மன்னிப்பு கேட்ட ஆகனும்; மீண்டும் வரும் சண்டியர் புகழ் கிருஷ்ணசாமி

கமல் மன்னிப்பு கேட்ட ஆகனும்; மீண்டும் வரும் சண்டியர் புகழ் கிருஷ்ணசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal must ask apology says Krishnasamyஏன்டா. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டோம் என கமலே நினைக்கும் அளவுக்கு அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. (அவர் இதற்கெல்லாம் அசரமாட்டார் என்பதே நிஜம்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காயத்ரி சேரி பிஹேவியர் வார்த்தை படு சர்ச்சைய கிளப்பியதை அடுத்து, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சண்டியர் என்ற டைட்டிலை கமல் வைத்தபோது, இதே கிருஷ்ணசாமிதான் போராட்டம் நடத்தி விருமாண்டி என பெயர் மாற்ற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்கு பிறகு சண்டியர் என்ற தலைப்பில் படம் வேறு ஒரு நடிகர் நடித்து வெளியானதும், அதற்கு எவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் வேறுகதை.

Kamalhassan must ask apology says Krishnasamy

உங்களின் கோபமான கேள்விகளுக்கு இன்று பதில் சொல்லும் பிக்பாஸ்

உங்களின் கோபமான கேள்விகளுக்கு இன்று பதில் சொல்லும் பிக்பாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigboss tamilதமிழ்நாட்டில் எவ்வளோ பிரச்சினைகள் இருந்தாலும், இன்று பெரும்பாலான மக்களால் விவாதிக்கும் பொருளாகிவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இதில் நடைபெறும் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? அவர்கள் பேசும் பேச்சுக்கு என்ன காரணம்? இதை கமல் கண்டிப்பாரா? விஜய் டிவி பொறுப்பேற்குமா? என்று பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியது.

அதில் கமல் கூறியதாவது…

உங்களுக்குள் இருக்கும் கோபம் எனக்கும் இருக்கு. உங்களுக்குள் இருக்கும் கேள்வி எனக்கும் இருக்கு.

நம் எல்லாருடைய கேள்விகளுக்கும் இன்று இரவு விடை தெரியும்’ என கூறியுள்ளார்.

எனவே இன்றைய நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது எனலாம்.

In Todays BigBoss Show Kamal will answer for all your questions

Vijay Television‏Verified account @vijaytelevision 1h1 hour ago

உங்கள் கேள்விகளுக்கான விடை.. இன்று இரவு 8:30 மணிக்கு @Vivo_India #BiggBossTamil #VivoBiggTamil

பிக்பாஸில் ஓவியாவுக்கு ஓட்டு போட்டவங்க மானமில்லாதவர்கள் – அன்புமணி

பிக்பாஸில் ஓவியாவுக்கு ஓட்டு போட்டவங்க மானமில்லாதவர்கள் – அன்புமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anbumaniபாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி ராமதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது…

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு நாளைக்கு 3 கோடிக்கு பேர் பார்க்கிறார்களாம்.

அதில் ஓவியா கிட்டதட்ட 1 கோடி பேரு மேல் ஓட்டுக் போட்டு அதில் தொடர்ந்து பங்கேற்க காப்பாற்றியிருக்கிறார்களாம்.

ஓட்டுப் போட்டவங்களுக்கு மானமே இல்லை. உங்களுக்கு வெட்கமாயில்லை.

ஓவியாவுக்கு போட்ட ஓட்டுக்களை சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு போட்டு இருந்தால், இந்த தமிழ்நாட்டை நான் காப்பாத்தியிருப்பேன்.” என்று பேசினார்.

PMK party Anbumani angry speech about BigBoss show

மாஸ்டர் தினேஷ்-மனீஷாவின் ‘ஒரு குப்பை கதை’க்கு உதவும் உதயநிதி

மாஸ்டர் தினேஷ்-மனீஷாவின் ‘ஒரு குப்பை கதை’க்கு உதவும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanithi releasing Dance Master Dinesh starring Oru Kuppai Kathaiஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் ‘ஒரு குப்பை கதை’! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர் மாஸ்டர் தினேஷ்.

எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.

ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

நல்ல கதைக்கு ‘ஒரு குப்பை கதை’ எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும்.
ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன் இந்த தலைப்பே சரி என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, படம் பார்த்த பிரபலம் ஒருவர் வியந்து பாராட்டி வெளியிடவும் சம்மதம் சொல்லியுள்ளார். ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் அஸ்லம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் அஸ்லமிடம் கேட்டபோது, “சார், படம் தயாராக உள்ளது, தாங்கள் பார்க்க முடியுமா?’ என்று மைனாவை தனது ஒரே வார்த்தையின் மூலம் உலகம் முழுக்க பார்க்க வைத்த உதய நிதி ஸ்டாலினிடம் கேட்டேன்.

நல்ல படங்களின் மேல் அக்கறையுள்ள அவர், சமீபமாக தனது படம் தவிர வேறெந்த படத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்தார். எங்கே நம்ம படத்தை பார்க்கப் போகிறார்? என நினைத்தேன். ஆனால், உடனடியாக நேரம் ஒதுக்கி படம் பார்த்தவர், பெரிதும் பாராட்டினார்.

“படம் அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசுகிறது. இக்காலகட்டத்தில் இது போன்ற படம் அவசியம் எனக் குறிப்பிட்டவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் -க்குள் ஒரு மிகச் சிறந்த நடிகன் ஒளிந்திருப்பதை, தான் படம் பார்த்தபோது உணர்ந்ததாக மனம் திறந்து பாராட்டினார்.

அவரே தன்னுடைய நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் ‘ஒரு குப்பை கதை’ படத்தை வெளியிட சம்மதமும் தெரிவித்துள்ளார். ஒரு தரமான படத்தைத் தயாரித்ததற்காக என்னையும், இயக்குநரையும் வெகுவாகப் பாராட்டினார் உதயநிதி ஸ்டாலின்,” என்றார் தயாரிப்பாளர் அஸ்லம்.

‘ஒரு குப்பை கதை’ திரைப்படம் ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக பாகன் பட இயக்குநர் அஸ்லம், என் அரவிந்தன், ராமதாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகவும் ‘பாகன்’ படத்தில் அஸ்லமிடம் இணை இயக்குநராகவும பணிபுரிந்தவர்.

மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவிலும், நா.முத்துக்குமார் பாடல் வரிகளிலும், ஜோஸ்வா ஸ்ரீதர் இசையிலும், கோபிகிருஷ்ணா எடிட்டிங்கிலும் உருவான ‘ஒரு குப்பை கதை’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடித்துள்ளார். இவர் ‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள்.

யோகி பாபு, ஜார்ஜ் படத்தின் மிக முக்கியமான திருப்பமாக வருகிறார்கள். ஆதிரா அம்மாவாக நடித்துள்ளார்.

Udhayanithi releasing Dance Master Dinesh starring Oru Kuppai Kathai

100% காதல் செய்ய லண்டன் பறக்கும் ஜி.வி.பிரகாஷ்-லாவண்யா

100% காதல் செய்ய லண்டன் பறக்கும் ஜி.வி.பிரகாஷ்-லாவண்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100 percent Kadhal first look releasedநாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘100% லவ்’.

இதன் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் லாவண்யா திரிபாதி நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘100% காதல்’ என பெயரிட்டுள்ளனர்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

எம்.எம்.சந்திரமௌலி இயக்கும் இதன் சூட்டிங்கை 10% மட்டும் இந்தியாவிலும், மீதமுள்ள 90% காட்சிகளை லண்டனில் படமாக்கவிருக்கிறார்களாம்.

எனவே விரைவில் லண்டன் பறக்க உள்ளது படக்குழு.

படத்தின் ஹீரோவே இசையமைக்கும் இப்படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை டட்லி கவனிக்க, கலை இயக்கத்தை தோட்ட தரணி கவனிக்கிறார்.

100 percent Kadhal first look released

சேரியில தங்கி பாருங்க கமல் அப்போ தெரியும்… திருமாவளவன்

சேரியில தங்கி பாருங்க கமல் அப்போ தெரியும்… திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Kamalhassan stays in slum areas then he will know says Thirumavalavanகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை தமிழகத்தில் எழுப்பியுள்ளது.

இதில் பங்கேற்ற காயத்ரி ரகுராம் ஓவியாவைப் பார்த்து சேரி பிஹேவியர் (சேரியில் வசிப்பவர்களின் வழக்கம்) என திட்டினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது…

சேரி பகுதிகளில் கமலும், பிக் பாஸ் போட்டியாளர்களும் ஒரு நாள் தங்கி பார்த்தால் அவர்களின் நற்பண்புகள் தெரியும்” என தெரிவித்துள்ளார்.

If Kamalhassan stays in slum areas then he will know says Thirumavalavan

More Articles
Follows