கமல்ஹாசன் நாத்திகவாதி அல்ல…. ரகசியத்தை போட்டு உடைத்த சாருஹாசன்

கமல்ஹாசன் நாத்திகவாதி அல்ல…. ரகசியத்தை போட்டு உடைத்த சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan charuhasanதிரைப்படங்களில் எந்த வேஷம் என்றாலும் தயங்காமல் ஏற்பவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

ஆனால் வெளியுலக வாழ்க்கையில் மனதில் பட்டதை வேஷம் போடாமல் பேசுபவர் இவர்.

தன்னை நாத்திகவாதியாக (அவரது பாஷையில் பகுத்தறிவாளர்) காட்டிக் கொள்பவர் இவர்.

இவரைப்போல இவரின் அண்ணன் சாருஹாசனும் நாத்திகவாதிதான். ஆனால் கமல் மகள் ஸ்ருதிஹாசன் கடவுள் பக்தி கொண்டவர்.

இந்நிலையில் கமல் அண்ணன் சாருஹாசன் கமலின் நாத்திகம் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதில்…

கமல் என்னிடம் இருந்துதான் நாத்திகம் கற்றார். கடவுளே இல்லை என்பவன் நான்.

ஆனால் அவர் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.

ஆனால் கடவுள் இருந்தாலும் நன்றாக இருக்காது என்கிறேன் நான்.

ஒரு ஆன்மிகவாதிதான் கோயிலை இடிக்கிறான். அவன்தான் கட்டுகிறான். நாங்கள் நாத்திகவாதிகள். நாங்கள் இடிப்பதில்லை.” என்றார்.

Kamalhassan is not an Atheists says his brother Charuhasan

கமல்-ரஜினி நட்பை யாராலும் பிரிக்க முடியாது.. சாருஹாசன்

கமல்-ரஜினி நட்பை யாராலும் பிரிக்க முடியாது.. சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No one can break Kamal Rajini friendship says actor Charuhassanகமலின் சகோதரர் சாருஹாசன் அவர்கள் கமல் மற்றும் ரஜினியின் நட்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

அரசியலில் ஜெயிக்கும் ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கும் என சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி விளையாட்டுக்கு பேசியிருக்கலாம்.

அந்த விழாவில் கமலை ரஜினி கேலி செய்யவில்லை. காரணம் அவர்களின் நட்பு குறித்து எனக்கு தெரியும்.

அவர்களை பிரிக்க முடியாது. இந்த சாருஹாசனால் கூட அவரை பிரிக்க முடியாது.

மக்கள்தான் அவர்களை பிரித்துப் பார்க்கிறார்கள்” என்றார்.

No one can break Kamal Rajini friendship says actor Charuhassan

மக்கள் ரஜினியை வணங்குகிறார்கள்… – கமல் அண்ணன் சாருஹாசன்

மக்கள் ரஜினியை வணங்குகிறார்கள்… – கமல் அண்ணன் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

charuhassanவிரைவில் தமிழக அரசியல் களத்தில் நாங்கள் குதிப்போம் என்ற வகையில் ரஜினி, கமலும் இருவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கமல் அண்ணன் சாருஹாசன் இவர்களின் அரசியல் பயணம் குறித்து பிரபல டிவிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது…

மக்கள் விரும்பினால் முதல் அமைச்சர் ஆவேன் என யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.

மக்களை விரும்ப வைப்பேன் என யாராவது சொல்ல முடியுமா?

கமலை ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள்? நிச்சயம் அவர் அரசியலுக்கு வர காரணத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

ரஜினியை தமிழக மக்கள் வணங்குகிறார்கள். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்.

ரஜினி மற்றும் கமல் இணைந்தால் 10% வாக்குகள் மட்டுமே பெறுவார்கள். மக்கள் அந்தளவு சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இல்லை. என்று தெரிவித்தார்.

Tamil peoples praying Rajini as God says Charuhassan

கமல் மகாபுத்திசாலி; ஆனால் முதல்வராக முடியாது; சாருஹாசன் பேட்டி

கமல் மகாபுத்திசாலி; ஆனால் முதல்வராக முடியாது; சாருஹாசன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

charuhassanகமலின் சகோதரர் சாருஹாசன் தன் தம்பியின் அரசியல் குறித்து பிரபல டிவிக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது…

நடிகர் விஜயகாந்த் படிப்படியாக அரசியலுக்கு வந்தார்.

ஆனால் கமல் நேரிடையாக முதல் அமைச்சர் பதவிக்கு வர நினைக்கிறார்.

நிச்சயம் கமல் அவர்களால் முதல்வராக முடியாது.

கமல் ஒரு பிராமினர். அவரை ஜாதியை வைத்துதான் மக்கள் பார்ப்பார்கள்.

ஜெயலலிதாவும் பிராமினர்தான். ஆனால் அவருக்கான அரசியல் பின்னணி வேற. எம்ஜிஆருடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால் கமல் அப்படி எந்த கட்சியிலும் இல்லை.

கமலிடம் அரசியல் குறித்து நான் பேசவில்லை. கமல் மகா புத்திசாலி. அவரிடம் உள்ள திறமைகள் மிக அதிகம். சிறுவயது முதலே அவரை பார்த்து வருகிறேன்” என கமல் சகோதரர் சாருஹாசன் பேட்டியளித்து வருகிறார்.

Kamalhassan is intelligent but he cant became Chief Minister says Charuhasan

இணையத்தை அதிர வைக்கும் ரஜினியின் 2.0 பட மேக்கிங் வீடியோ

இணையத்தை அதிர வைக்கும் ரஜினியின் 2.0 பட மேக்கிங் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தை லைகா நிறுவனம் ரூ. 400 கோடியில் மிகபிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் மற்றும் படம் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர் 2.0 படத்தின் 2வது மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்.

இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் உருவாக்கியுள்ளனர்.

இந்த மேக்கிங் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajini Akshay starrer 2Point0 making video goes viral

 

தமிழக அரசின் வரியால் சினிமா டிக்கெட் விலை ரூ. 200ஐ தொட்டது

தமிழக அரசின் வரியால் சினிமா டிக்கெட் விலை ரூ. 200ஐ தொட்டது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Due to Tamailnadu Local body Entertainment Tax Cinema Ticket rate crossed Rs 200கடந்த ஜீலை மாதம் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் அமுலுக்கு வந்தது.

இதனால் சினிமா டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டது. அப்போது தமிழக அரசின் வரி மட்டும் எதிர்ப்பை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

அண்மையில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதற்கு மீதான 10 சதவீத கேளிக்கை வரி விதிப்பை தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழக அரசின் இந்த வரி விதிப்பை முற்றிலும் விலக்கும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்தது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர திரையுலகத்தை சேர்ந்த அமைப்புகள் முதல்வரை சந்திக்க அனுமதி கோரி கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில் தமிழக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் 25% வரை டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.

இதனால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.150, குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி ரூ.150 (தமிழக அரசின் கேளிக்கை வரி சேர்த்து) + ஜிஎஸ்டி (ரூ.42)=ரூ.192 சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

இத்துடன் ஆன்லைன் புக்கிங் சார்ஜ்ஜை சேர்த்தால் ரூ. 225 தொடுகிறது.

இந்த புதிய விலை உயர்வு வருகிற திங்கட்கிழமை அதாவது அக்டோபர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதனால் திரையுலகினரும் சினிமா ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Due to Tamailnadu Local body Entertainment Tax Cinema Ticket rate crossed Rs 200

ticket rate

More Articles
Follows