வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலையாளிகளுக்கு கமல்-விஷால்-பிரகாஷ்ராஜ் நிதியுதவி

Kamal PrakashRaj and Vishal donates to Kerala CM Distress Relief Fundகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயர்த்துக்குள்ளாகியுள்ளது.

வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

கமல் 25 லட்சமும், சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சமும், நடிகர் பிரகாஷ்ராஜ் 5 லட்சமும், நடிகை ரோகினி 2 லட்சமும் இதுவரை கொடுத்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 5 லட்சம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும்,நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறார்.

மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும்,மக்களிடமும் இயற்கையின் சோதனைகளை சந்தித்து துயரபட்டுக்கொண்டிருக்கும் நமது சகோதரர்களான கேரளா மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kamal PrakashRaj and Vishal donates to Kerala CM Distress Relief Fund

Overall Rating : Not available

Latest Post